சாயிபாபாவும் இசையும்
ஷீரடியில் சாயி பாபா வாழ்ந்திருந்த கால கட்டத்தில் அவர் பஜனைப் பாடல்கள், வாத்திய இசை, மேள தாளங்கள் இவற்றை ரசிக்கும் இயல்போடு இருந்ததாகவும், தம் இனிய குரலில் அவ்வப்போது பாடவும் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாபாவிடம் வந்து அவர் முன்னிலையில் கச்சேரி செய்தால் நிச்சயம் ஏதாவது பணம் அளித்து உதவுவார். சென்னையிலிருந்து கூட ஒரு பஜனைக் கோஷ்டி அங்கு சென்றதாக வரலாறு உள்ளது. பாபா அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும் பணத்தை நம்பி ஒரு கூட்டமே இருந்தது. பாபா கூறியதாக ரங்கஸ்வாமி பார்த்தசாரதி அவர்கள் எழுதிய மண்ணிறங்கி வந்த தெய்வம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்கள் :
" என்னையும் என் வாழ்க்கைகளையும் என் லீலைகளையும் மனமொப்பிக் கசிந்துருகி ஒரு மனிதன் நிஜமாய் பாடிக் கொண்டேயிருந்தால் அவன் முன்னால் நான் போய்க் கொண்டே, அவனின் அனைத்து திசைகளிலும் பக்க பலமாக நானே இயங்குவேன். என் லீலைகளைப் பாடுவோருக்கு எல்லையற்ற ஆனந்தத்தையும், கிட்டவே கிட்டாத போதுமென்ற திருப்தியையும் அளித்து விடுவேன் - இதை நம்புங்கள்".
கலை சம்பந்தப்பட்ட படைப்புகள் மற்றும் இசை ஆகியவற்றை தன்னுடைய இளைய பருவத்தில் மிக ரசித்திருக்கிறார் சாயி பாபா. பிரயாணிகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக ஊரிலிருந்த சத்திரத்துக்கு இரவு நேரங்களில் அடிக்கடி போய் காலில் சதங்கைக் கட்டிக் கொண்டு ஆடி மகிழ்ந்திருக்கிறார். பெரும்பாலும் அவர் பாடியவை கபீரால் பாடப்பட்ட பாடல்கள். நடுநடுவில் கூடியிருந்தோருக்கு விளங்காத அரேபிய, பாரசீக மொழிகளிலும் பாட்டுக்கள் விழுந்துள்ளன.
தினசரி பூஜை முறையாக, ஆரத்திப் பாடல்களும் பக்தி மணம் கமழும் பிற பாடல்களும் மக்களால் பாடப் படுவது வழக்கம். பல மொழி வித்தகரான பாபா பக்தி மார்க்கத்தில் இசையின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். நல்ல தெய்வீக உணர்வுகளை எழுப்பி, மன ஓர்மையைத் தந்து, மனதை பண்படுத்தக் கூடியது இசை. நெஞ்சுக்கு நிம்மதி தருவது இசை.இதன் பெருமைகள் இந்திய கல்வி முறையில் போதிய அளவு பயன்படுத்தப் படவில்லை என்பது என் கருத்து. ஜப்பான் போன்ற செல்வந்த நாடுகளில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இசை கட்டாய பாடமாக ஆக்கப்பட்டிருக்கிறது. எனவே நல்ல இசை, சாயி இசை இவை எந்த மொழியிலிருந்தாலும் அர்த்தம் புரியாவிட்டாலும் கூட அதில் உள்ள நயத்தை, இனிமையை, புதுமையை, சுவையை உணர்ந்து ரசிப்பது பக்தர்களுடைய உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மையே அளிக்கும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தெய்வமான பண்டரிநாதனின் புகழ் பாடும் மராட்டிய அபங்கம் (பஜனைப் பாடல்) திரு. ஷங்கர் மகாதேவன் பாடுகிறார் :
திருமதி பாம்பே ஜெயஸ்ரீ பாடிய சாயி பாபா பாடல் தெலுங்கு மொழியில், திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரு மந்திரத்தோடு துவங்கும் ஒளிக்காட்சி :
திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் புதல்வர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் முதன் முதலில் உருவாக்கிய அற்புத ஆங்கில கீர்த்தனைகள் இதோ!
பாரத ரத்னா பீம்சென் ஜோஷி அவர்கள் பாடிய கபீர் தாசர் பாடல்
ஓம் என்பதே இப்பிரபஞ்சத்தின் நாதம்
ஓம் சாயி நமோ நம ஷீரடி சாயி நமோ நம
என்பது சாயி பக்தரின் இனிய கீதம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.