Total Pageviews

Sunday, May 1, 2016

Book Review

நூல் மதிப்புரை 

                             பொதுவாக சாயி பக்தர்கள் முதன் முதலில் வாங்க வேண்டிய முக்கிய நூல் ஷீரடி சாயி சமஸ்தானத்தினர் வெளியிட்ட "ஸ்ரீ சாயி சத்சரிதம்" நூலே ஆகும். இருந்தாலும், பேரார்வமுடைய பக்தர்களுக்கு, படித்து மகிழ ஷீரடி சாயி பாபாவைப் பற்றி பல்வேறு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்ந்தும் வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கும் அந்நூல்களைப் பற்றிய பட்டியலைத் திரட்டுவது இக்காலத்தினருக்கும்,எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும்.

பாபாவைப் பற்றியும், சாயி மார்க்கப் பாதையைப் பற்றி மேன்மேலும் தெரிந்து கொள்ளவும் அப் புத்தகங்கள் உதவி செய்கின்றன. பிற பக்தர்களின் அனுபவங்களை அறிந்து கொள்வதின் மூலமும், சாயி பாபா வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் படித்துத் தெரிந்து கொள்வதன் மூலமும் நாம் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். இத்தகைய சாயி பாபா சம்பந்தமான நூல்களைப் பற்றிய அறிமுகம் செய்யவும், கூடுதல் விபரங்களை வாசகர்கள் அறியத் தருவதுமே இந்த புதிய பகுதியின் நோக்கம் ஆகும்.


பாபா பற்றி சமீபத்தில் வெளிவந்த அழகிய தமிழ் நூல் - திரு பூபேந்திர ஜூனேஜா அவர்கள் எழுதிய "ஷிர்டியின் ஸாயி பாபா வாழ்க்கை அறிமுகம் மற்றும் ஆரத்தி" என்ற நூல் ஆகும். கையடக்க வடிவில், அருமையான ஓவிய முகப்புடன், ரூபாய் 30-க்கு சுவாரசியமான தகவல்களுடன் இப் புத்தகத்தினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தார் - இந்தியாவின் தில்லி மாநகரத்தில் உள்ள பூஜா பிரகாஷன் நிறுவனத்தினர். தமிழ் பக்தர்கள் பயனடைய தில்லி மாநகரத்தில் இருந்து தமிழில் பாபாவைப் பற்றிய நூல்கள் வெளியிடுவது ஆச்சரியமானது, போற்றுதலுக்கு உரியது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பிற ஆர்வமூட்டும் நூல் தலைப்புக்கள் :
ஸ்ரீ சாயி சாலீசா, ஸ்ரீ சாயி மஹா புராணம், ஸ்ரீ சாயி ரக்க்ஷா மந்திரம், ஸ்ரீ சாயி கஷ்ட நிவாரண மந்திரம், சாயியின் அமர கதைகள் மற்றும் பல ஆகும். இந்த பதிப்பகத்தாரின் முகவரி: பூஜா பிரகாஷன், ஸதர் பஜார் ரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக, கடை எண்.1, பூல் குதூப் ரோடு, ஸதர் பஜார், தில்லி - 110006. இணைய முகவரி- poojaprakashan டாட் காம்.
இது போன்ற நூல்களை பக்தர்கள் தமது திருமணம், பிறந்த நாள் போன்ற சுப தினங்களில் பிறருக்குப் பரிசாக அளித்து மகிழலாமே!

சாயி ராம சாயி ராம சாயி ராம சாயி ராம்.