Total Pageviews

Tuesday, July 18, 2017

Mantra

******டாக்டர் நிபுண் அகர்வால் வழங்கும் சக்தி வாய்ந்த சாயி மந்த்ர தியானம் ******
(Thanks to: DhyaanGuru Dr. Nipun Aggarwal)

ஓம் சாயி ஓம் ஓம் சாயி ஓம் ஓம் சாயி ஓம் ஓம் சாயி ஓம் ஓம் சாயி ஓம்

சாயிராம் சாயிஷ்யாம் சாயித்யான் சாயிஞான் 

Sunday, July 2, 2017

Temples

(Thanks to: PuthuYugamTV)

திருவலஞ்சுழி சாயிபாபா திருக்கோவில், தஞ்சாவூர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா ஆலயம், திருபுவனம் ஷீரடி சாய் தியான ஆலயம், திருவான்மியூர், சென்னை சாயி ஓம்.

Monday, June 26, 2017

Baba in Netherlands

* நெதர்லாந்தில் பாபா *
(Thanks to: Shirdisai SamajNL, Maya Badal)

நெதர்லாந்து நாட்டில் ஆம்ஸ்டர்டேம் ஷீரடி சாயி சமாஜத்திற்கு பாபா வருகை தந்த அன்று...

நெதர்லாந்து நாட்டின் ஒல்ஸ்ட் நகரில் பாபா 

சாயி ஓம்.

Music

(Thanks to: GiriTradingAgency, AnushAudio)சாயி சாயி சாயி 

Monday, June 5, 2017

Book Review -3

நூல் மதிப்புரை 
   
       சாயி அன்பர்களே, பாபா பற்றிய பல புத்தகங்களைப் படித்திருப்பீர்கள். ஆனால் ஸ்ரீ சாயியின் குரல் (பாகம் -1) நூல் படித்தால் உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். திரு.சாயி வரதராஜன் எழுதிய இந்நூல் ஒரு புதுமையான முறையில் எழுதப்பட்டுள்ளது. பக்தர்களோடு நேருக்கு நேர் சாயி பேசுவது போல், உரையாடல் பாணியில் ஸ்ரீ சாயி தரிசனம் பத்திரிக்கையில் வெளிவந்து, பல நூறு பக்தர்களின் வாழ்க்கையை மாற்றிய "ஸ்ரீ சாயியின் குரல்" என்கிற கட்டுரைகளின் அழகிய தொகுப்பே இந்த நூல் ஆகும்.


புதுமையான நூல் 
இந்நூலின் சிறப்பு அம்சங்கள்:

1. கூர்ந்து கவனித்துப் படிக்க வேண்டிய நூல். ஏன் என்றால், அப்பா சாயி பேசுவது போல் அமைந்துள்ள பல கட்டுரைகளில் - வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு குடும்பப் பின்னணி, எண்ணங்கள், செயல்பாடுகள் உடைய பக்தர்களுக்கு அறிவுரை கூறுவதுபோல் இருந்தாலும் - உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சம்பந்தம் இல்லாமல் இருப்பது போலத் தோன்றினாலும் - கவனமாக படித்துக் கொண்டே வரும்போது சட்டென்று மின்னல் கீற்றாக ஏதோ ஓர் அறிவுரை நமக்காகவே சொல்வதுபோல பளிச்சிடுகிறது.

2. பிறருக்குப் பரிசளிக்கும் வகையில், கையடக்கமாக, உயர்தரமான தாளில், அச்சிடப் பட்டுள்ளது. 

3. ஸ்ரீ சாயிபாபாவின் பதினோரு உறுதிமொழிகள், சத்சரித உறுதிமொழி, உள்ளத்தைத் தொடும் பல்வேறு பக்தர்களின் அனுபவக் கடிதங்கள், பக்கங்களின் இடையே அவ்வப்போது பாபாவின் அறவுரைகளாக சிறிய பகுதிகள், டாக்டர் அருண் சின்னையாவின் அணிந்துரையுடன் அமைந்துள்ளது. 

4. "நேற்று முழுவதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன்", "உன் கஷ்டம் முடிவுக்கு வருகிறது", "செல்வம் உள்ளவர்களுக்குப் பிரச்சினைகள் ஏன்", "என் விருப்பப்படி செய்யவிடு" போன்ற சிந்தனையைத் தூண்டும் கட்டுரை(குரல்)கள் அடங்கிய நூல். 

5. பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடக்கூடிய தரத்துடன், அடுத்த பாகமான 'பாகம் -2' எப்போது படிப்போம் என ஆர்வத்தைத் தருவதாக உள்ளது இந்நூல்.

இந்நூலை வெளியிட்டோர்:

ஸ்ரீ சாயிநாத் பப்ளிகேஷன்ஸ், 3 E/A, இரண்டாவது தெரு, புத்தர் நகர், புதுப்பெருங்களத்தூர், சென்னை - 63. இப்புத்தகத்தின் விலை: 60 இந்திய ரூபாய்கள் (நான்காவது பதிப்பு) 

சாயிராம சாயிராம ராம ராம  ஹரே ஹரே சாயிகிருஷ்ண சாயிகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே