Total Pageviews

Friday, December 25, 2020

எப்படி நல்லது செய்ய வேண்டும் ? Teaching from Bible

எப்படி நல்லது செய்ய வேண்டும் ?

புனித பைபிள் நூலில் எவ்வாறு நற்காரியங்கள், தருமங்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிறர் நம்மைப் பாராட்டிப் புகழ வேண்டும் என்பதற்காக வெளிப்படையாக சுயதம்பட்டத்துடன் நல்ல விஷயங்களைச் செய்தால் தெய்வீக அருள் உலகில் இருந்து நமக்குப்  பயன்கள் கிடைக்காமல் போகும். உதவி தேவைப்படும் ஒருவருக்கு நீங்கள் உதவும்போது கபடவேடதாரிகள் போல் ஆலயங்களிலும், தெருக்களிலும் ஊதுகுழல் ஊதி முரசறைந்து கூவி எல்லோருக்கும் தெரிய ஈகை கொடுத்தல் கூடாது.

உதவி தேவைப்படும் ஒருவருக்கு உதவும்போது, உங்கள் வலது கை கொடுப்பதை இடதுகை கூட அறியா வண்ணம் அந்தரங்கமாக தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டும். அப்போது இந்த உலகில் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கின்ற உங்கள் தெய்வத் தந்தையாகிய எல்லாம் வல்ல ஆண்டவர், நற்பலன்களை உங்களுக்கு வழங்குவார். 

                                                                                                        (Giving to the Needy - Matthew 6:1)