Total Pageviews

Thursday, June 30, 2011

Sai Aarthi

                       ஷீரடி சாயிக்கு ஆரத்தி                                     
 

            ழமையான நமது ரிக் வேதத்தில் "ஆரத்தி" என்ற சமஸ்க்ருத வார்த்தை "கடவுளுக்கு நமது அதிகபட்ச அன்பினை"க் குறிப்பதாக, சத்தியமான ஒன்றை நோக்கி அன்பினைச் செலுத்துவதாக, சொல்லப்பட்டுள்ளது. இறை வழிபாட்டினை முடிக்கும்போது செய்யும் சமய ஆச்சாரமாக (சடங்காக) ஆரத்தி உள்ளது. பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி/நெருப்பு/ஜோதி  வழிபாட்டிலிருந்து தோன்றியதுதான் தீபங்களுடன் ஆரத்திப் பாடல்கள் பாடும் வழக்கம். தன்னைவிட மிகப் பெரும் சக்தியிடம் தன்னைத் தான் ஒப்புவித்து நிம்மதியும் ஆனந்தமும் அடையும்வகையில் பாடுவதே ஆரத்தி.

இயற்கை மகா சக்தியுடன் நம்மை ஒன்றிணைக்க இயற்கையாகவே இருக்கும் பொருட்களைக் கொண்டு ஆரத்தி வழிபாடு நடத்துகின்றோம். மண்ணாலான அகல் விளக்கு, அல்லது வெள்ளியிலான விளக்கு, செம்பு/செப்பு/வெள்ளித் தட்டு, பஞ்சு திரி, பசு நெய், எண்ணெய், சூடம், வாசனை சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற இயற்கைப் பொருட்களை உபயோகிக்கின்றோம். எரிந்தபின் எதுவும் மிச்சம் வைக்காத சூடத்தின் மூலம் ஒளியையும், ஊதுவத்தி சாம்பிராணி தசாங்கம் - இவற்றின் மூலம் சுகந்த நறுமணம், ஜோதியைக் கண்டு மன ஒருமுகம் (concentration), ஆழ்ந்த மன அமைதி(tranquility) இவற்றை ஏற்படுத்திக் கொள்கிறோம். 

இந்த முறையானது ஒரு நினைவுக் குறிப்பாக, ஒரு அடையாளமாக இருக்கிறது. அதாவது, ஆரத்தி எடுக்கும்போது தெய்வ உருவத்தின் முன்பு, விளக்குகள் உள்ள தட்டினை கையில் ஏந்தி, இடமிருந்து வலப்புறச் சுழலாக (clockwise) சுற்றிக் காண்பிக்கிறோம். மனிதன் - வட்ட வடிவில் உள்ள பூமி, பிரபஞ்சம் - தெய்வீக மகா சக்தி அல்லது ஆண்டவர் இவற்றிக்கு இடையே உள்ள நிரந்தர தொடர்பினை நினைவு படுத்திக் கொள்கிறோம். கோயில் மணியோசை ஒலிக்க, நாவில் நல்லிசை பாட, வழிபாட்டினை முடித்து அந்த தட்டினை பக்தர்கள் அனைவருக்கும் காட்டுகிறோம். அப்போது பக்தர்கள் அந்த தீபத்தின் மேல் இரு உள்ளங்கைகளாலும் காட்டி கண்களில் அந்த இதமான சூட்டினை ஒற்றிக் கொண்டு தெய்வத்தின் அருட்சக்தியுடன் தம்மைத்தாமே கலந்து கொள்கிறார்கள். பிறகு புனித தீர்த்தம் அருந்தும்போது, பிரசாதம் சாப்பிடும்போது திவ்வியமாக, இனிமையாக, நிறைவாக, தெம்பாக, புதிய உற்சாகமாக, ஒரு நம்பிக்கைக் கீற்றாக, ஊக்கமாக மனம் இருப்பதை உணரலாம். 

மேலும் நமது இஷ்ட தெய்வமான பாபாவைப் போற்றிப் பாடுவதால் நமது வாய்-நாக்கு என்ற புலனும், ஒளியைப் பார்ப்பதால் நமது கண்கள் என்ற புலனும், இரு கைகள் தட்டி அக்கு பிரஷர் உத்தியுடன் - கீழே விழுந்து அனைத்து அவயங்களும் தரையில் பட நமஸ்காரம் செய்து வணங்கும் நமது 'மெய்' என்ற புலனும், நறுமணம் மூச்சு இழுத்த  மூக்கு என்ற புலனும், அற்புத இசை ஒலி கேட்டு மயங்கிய காதுகள் என்ற புலனும், ஆக ஐந்து புலன்களும் ஈடுபடும் அற்புத பயிற்சியே ஆரத்தி வழிபாடு!
என்ன, நமது பாபாவுக்கு ஆரத்தி பாட நீங்க ரெடியா? 
காண வேண்டிய பகுதி: SHIRDI SAI BABA AARATTHI  

மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க 
மங்கள இசை எந்தன் நாவினில் உதிக்க 
சாயி கணபதியே வருவாய் !

                                                              


Artist: Bathmavathi Balaji
Music: V Kishor Kumar
Lyrics: Nanjil Rajan
Album: Sri Sai Saranam

Courtesy: sacredverses

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.