Total Pageviews

Monday, June 20, 2011

DIAMOND Studded Shawl

பாபாவுக்கு வைரம் பதித்த பொன்னாடை  

                கடந்த ஜூன் 12 , 2011 அன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகரைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் வைரம் பதித்த பொன்னாடையை பாபாவுக்கு அர்ப்பணித்தார். கிட்டத்தட்ட 25 .20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த பொன்னாடை 2 .5 மீட்டர் நீளம் கொண்டது. ஒன்னேகால் கிலோ சுத்தத் தங்க இழைகள் வேயப்பட்டு அமெரிக்கன் வைரங்கள் பதிக்கப்பட்ட சால்வையை பக்தர் சமர்ப்பிப்பது இதுவே முதல் தடவையாகும். ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூரிலுள்ள கலைஞர்கள் மூன்று மாதம் கடுமையாக உழைத்து சிறப்பாக இதை உருவாக்கியுள்ளனர். மதிய ஆரத்தி நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பொன்னாடை ஷீரடி சமாதி மந்திரில் பாபா சிலைக்கு சிறிது நேரம் வைக்கப்பட்டு பிறகு சமாதியின் மேல் போர்த்தப்பட்டது. பாபா தனது வேண்டுகோளை நிறைவேற்றியதன் காரணமாக, நன்றியுடன் இதை சமர்ப்பித்ததாக அந்த பக்தர் கூறினார். அந்த பக்தருக்கு சாயி சமஸ்தான் டிரஸ்ட் சார்பில் பாபாவின் சிறிய சலவைக்கல் சிலை ஒன்று பிரசாதமாக அளிக்கப்பட்டது.


சாயினாதருக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் அல்ல. இதில் பக்தரின் நன்றியும் விசுவாசமும் பற்றற்ற தன்மையும் தான் நாம் கருத வேண்டியவைகள். மேலும் இத்தகைய சமர்ப்பணங்கள் யாவும் மக்களுக்குத்தான் பயன்படுகின்றன.

ஓம் சாயி குபேரா போற்றி போற்றி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.