Total Pageviews

Thursday, June 9, 2011

Excerpts from Balakumaran's Book

பாபாவைப் பற்றி பாலகுமாரன்  


                   
 
         புகழ்பெற்ற திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அன்பும், அருளும் பெற்ற எழுத்தாளர் கலைமாமணி பாலகுமாரன். அவர் சென்னை- மயிலாப்பூரில் அமைந்திருக்கும் ஷீரடி சாயி பாபா கோவிலைப் பற்றியும், நமது பாபாவைப் பற்றியும் ஒரு நூலில் சிறப்பாக எழுதியுள்ளார். அதன் பகுதிகள் பின்வருமாறு: 
  
 "மயிலாப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஷீரடி சாயிபாபா கோவிலை நீங்கள் அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். அந்த இடம் மிக நல்ல அதிர்வுகள் கொண்ட இடம் என்பது என் கருத்து. மிகக் குறிப்பாக நோயுற்ற நமது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இங்கு பிரார்த்தனை செய்தால் பலிக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம். நம்மை நோய் தாக்குமோ நலிந்து விடுவோமோ என்கிற பயம் இருக்கும்பொழுது பாபா அஞ்ச வேண்டாம் என்று காப்பாற்றுகிறார். மனம் ஒருமித்து இந்த மகானைக் கைகூப்பி வணங்கினால் சூட்சும ரூபத்தில் இருக்கிற இந்த மகான் வெகு நிச்சயமாக உங்கள் மனத்தைத் தொடுவார். உங்கள் பிரார்த்தனை நிறைவேற்றுவார். சென்னை வந்தால் நிச்சயம் மயிலாப்பூரில் உள்ள ஷீரடி சாயி பாபா கோயிலுக்குப் போய் வாருங்கள். சிறிது நேரம் அங்கே கண்மூடி அமர்ந்திருங்கள். நிச்சயம் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள்."
 
 மேலும் இக்கட்டுரையில் அந்த பழமையான மயிலாப்பூர் பாபா கோயிலை நிறுவிய பி.வி.நரசிம்ம ஸ்வாமிகள் வரலாறும், தொண்டும் பற்றி அவரின் சீடர் திரு. கேசவராவ் அவர்களிடம் தெரிந்து கொண்ட தகவல்களையும் விவரித்துள்ளார். ஷீரடி சாயி பாபாவைப் பற்றிய செய்திகளை நாடெங்கும் சுற்றி, கடுமையாக பாடுபட்டு முதன் முதலில் சேகரித்துத் தமிழர்களுக்கும், இந்திய மக்களுக்கும் அளித்த தமிழ்ச் சான்றோர் நரசிம்ம ஸ்வாமிகள் ஆவார். நரசிம்ம ஸ்வாமிகள் ஆற்றிய தொண்டு வியப்பைத் தருவது.என்றும் நாம் நன்றியுடன் போற்றத்தக்கது. 


                       நரசிம்ம ஸ்வாமிகள்

அகில இந்திய சாயி சமாஜத்தை தோற்றுவித்த ஸ்வாமிகளின் பணியினை நினைவுகூறும் வகையில் ஷீரடியில் பாபா சமாதி மந்திரில் அவரது புகைப்படம் 26 ஜனவரி, 1966 அன்று நீதியரசர் எம். பி. ரேகே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இனி நரசிம்ம ஸ்வாமிஜி பற்றி ஐயா பாலகுமாரன் கூறும் கருத்தைப் படிப்போம்:

"நரசிம்ம ஸ்வாமிகள் நம்மிடையே இப்போது இல்லை. ஆயினும் அந்த இறைதாகம் மிகுந்த அன்பரின் பெயர் சொல்லும்விதமாய் ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் ஷீரடி சாயி பாபாவின் கோவில் இருக்கிறது. இவர்தான் குரு. இவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள் என்று வழிகாட்டுவது இருக்கிறதே. இது மிகப் பெரிய தொண்டு. ஆயிரம் அன்னதானங்களுக்கு இணையான விஷயம். நரசிம்ம ஸ்வாமியின் இந்தக் கருணை இன்னும் பல்லோருக்கும் பயன்பட்டு வருகிறது."

பாலகுமாரன் அவர்களின் இந்த அரிய கட்டுரையைப் படிப்பதற்கு பல ஆண்டுகள் முன்னால், எனது முப்பாட்டனாரின் (சாயிநாதரைத் தவிர வேறு தெய்வம் வணங்காதவர்) பூர்வ ஜென்ம புண்ணியத்தால் இரு தலைமுறைகள் தாண்டி எனக்கு மயிலை பாபா கோயிலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கு நல்ல மனநிறைவும் கிடைத்தது.மயிலாப்பூர் பாபா கோயிலின் தொண்டர்கள் ஆற்றும் அற்புத சேவையும், சிறப்பான நிர்வாகமும் உங்களை வியக்க வைக்கும். பாபா பற்றிய பல விஷயங்களை முதன் முதலாக அங்கேதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவசியம் மயிலாப்பூர் கோவிலுக்கு சென்று பாபாவின் அருள் பெற வாழ்த்துகிறேன். 

கோயில் முகவரி:
அகில இந்திய சாயி சமாஜம்,
56, அலமேலுமங்காபுரம்,
மயிலாப்பூர்,
சென்னை - 600 004.
தமிழ் நாடு, இந்தியா.

Nearest Bus Stop: 500mtrs from Temple.
Stop: Mylapore Tank/Kapaleshwarar Temple Stop.

Nearest Subarban Train Stop: 500mtrs from Temple.
Stop: Thirumailai/Mylapore
on MRTS






ஓம் ஓம் ஓம் சாயி.
 
 
 நன்றி: பாலகுமாரன், சிறுகதைகளும் கட்டுரைகளும், விசா பப்ளிகேஷன்ஸ் (திருமகள் நிலையம்), புதிய எண் 16 , வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.