ॐ ஓம் ओम ಓಂ ഓം ओम ਓਮ ॐ ॐ ஓம் ओम ॐ ஓம் ओम ಓಂ ഓം
சாயிபாபாவும் மொழியும்
மொழிப்பற்று என்பது ஆரோக்கியமானது. மொழிவெறி என்பது தீமைகளையே விளைவிக்கக் கூடியது. மொழிவெறி கூடவே கூடாது. ஏதேனும் ஒரே மொழியின் மீது மிகுதியான வெறி கொள்வதோ, அந்த மொழிதான் உயர்ந்தது - மற்றவையெல்லாம் தாழ்ந்தது என உயர்வு மனப்பான்மை கொள்வதோ அறிவுடைமை அல்ல. உண்மையான அறிவுத் தாகத்துடன் தேடினால் ஒவ்வொரு மொழியிலும் ஏதாவது நன்மை பயக்கக்கூடிய விஷயங்கள் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். வடலூர் வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமலிங்கர் "சமஸ்க்ருதம் என் தாய்மொழி-தமிழ் என் தந்தைமொழி" என்றார். இளம் சாயி பக்தர்கள் மற்றும் தமிழ் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இத்தகைய இருமொழிப் பிரியமே சிறந்தது என்பது என் கருத்து. அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்க்ருதமே தாய் என்று அமெரிக்க அறிஞர்கள் கூறுகிறார்கள். நுணுக்கமாக ஆராய்ந்தால் மனித குலம் புவியியல் ரீதியாகத்தான் பிரிவுபட்டுள்ளதை உணரலாம்.
அம்மா-மா'ஜி-மம்மி- என எம்மொழியிலும் "ம்" ஒன்றாகத்தானே உள்ளது. பல மாநிலங்களில், பல நாடுகளில் மொழிவெறி கொண்டு அலையும் மக்களால் எவ்வித லாபமும் இல்லை. மாறாக, மொழி இன வெறி இல்லாத ஆன்மீகப் பெரியோர்களால்தான் உலக நாடுகளுக்கு அதிக நன்மைகளும், ஒருமைப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த உலகத்திற்கு தமிழ்ச் சமுதாயம் அளித்த தவச் சான்றோர்கள், ஆன்மீக வழிகாட்டிகள், உன்னத உதாரண புருஷர்கள்-முன் மாதிரிகள் ஏராளம்.
அவர்கள் அனைவருமே மொழிப்பற்று, பன்மொழிப் புலமை, சமரச நோக்கு, மக்கள் தொண்டு, இவற்றுடன் அனைத்து உலக மக்களுக்கும் பொதுவாக உழைத்து, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி, ஆன்மீக அறிவுப் பொக்கிஷங்களை அள்ளித் தந்து தத்தம் ஆன்மீக அருட்பணியை அற்புதமாகச் செய்துள்ளனர். சித்தர்கள் சூக்கும (spiritual form) வடிவில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஹிதோபதேசம்: 1.3.71: "உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம்".
ஸப்கா மாலிக் ஏக்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.