சென்னையிலிருந்து ஷீரடிக்கு
அதிவேக விரைவு ரயில் போக்குவரத்து
தெற்கு மத்திய ரயில்வே வரும் ஜூலை 6 ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர அதிவேக விரைவுத் தொடர்வண்டிப் போக்குவரத்தினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் சாயி நகர் ஷீரடி வரை வாரந்தோறும் இயக்க உள்ளது.
ரயில் எண் 22601 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமைகளில் 10:10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 11:30 மணிக்கு ஷீரடி சாயி நகர் வந்து சேரும். பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு ரயில் எண் 22602 ஷீரடி சாயி நகரில் வெள்ளிக்கிழமைகளில் 08:25 மணிக்குக் கிளம்பி, மறுநாள் 09:40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும் என அறிவித்திருக்கிறது.
போகும்போதும்-வரும்போதும் இந்தத் தொடர் வண்டி நிற்கும் இடங்களாவன:
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காரபேட்டை, கிருஷ்ணராஜபுரம், ஏலஹங்கா, ஹிந்துபூர், ஸ்ரீ சத்ய சாயி ப்ரஷாந்திநிலையம், தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், வாடி, குல்பர்கா, சோலாப்பூர், டௌன்டு, அகமத்நகர், மற்றும் புந்தம்பா வழியாக ஷீரடி சாயி நகர் ரயில் நிலையம் சென்றடையும். இந்த வண்டிகளில் பதினெட்டு கோச்சுகள் இருக்கும். அதாவது ஒரு ஏ சி இரண்டாம் இருக்கை வரிசை, இரண்டு ஏ சி மூன்றாம் இருக்கை வரிசை, ஏழு படுக்கை வரிசை, ஆறு பொது இரண்டாம் வரிசை மற்றும் இரண்டு இரண்டாம் வரிசை சுமை - ப்ரேக் வேன் ஊர்திப் பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.
Train.No.22601 Chennai Central – Sai Nagar Shirdi Superfast Express :
Departure: Chennai Central at 10:10 Am on Wednesdays
Arrival: Sai Nagar Shirdi at 11:30 Am on Thursdays.
Train.No.22602 Sai Nagar Shirdi – Chennai Central Superfast Express :
Departure: Sai Nagar Shirdi at 08:25 Am on Fridays
Arrival: Chennai Central at 09:40 Am on Saturdays.
ஷீரடி சென்றடைந்த உடன்
ஷீரடியில் முக்கியமான தொலைபேசி உதவி எண்கள் (Emergency Help Line Numbers at Shirdi) குறித்த தகவலைப் பெற, ஷீரடியில் தங்குவது பற்றிய விரிவான தகவல்களுக்கு நீங்கள் பார்வையிட வேண்டிய சிறந்த இணையத் தளம் :
சென்னையில் ஷீரடி சாயிபாபா சமஸ்தானத்தின் தகவல் மையம் !
ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், (ஷீரடி)
இன்பர்மேஷன் சென்டர்,
கிருஷ்ணன் கரனை, போஸ்ட் - பட்டிபுலம்
கிழக்கு கடற்கரைச் சாலை (E.C.R), சென்னை தமிழ் நாடு - 603 104, இந்தியா.
போன் -044-27444093
ஷீரடி இன்பச் சுற்றுலா குறித்த தகவல்கள் பெற சில இணையத் தளங்கள் :
- http://www.railtourismindia.com/
- http://www.railtourismindia.com/TourPackages/RailTour/Madurai-To-Shirdi-Saibaba-Tour.html
- http://shirdiyatra.in/index.html
- http://www.starsai.com/chennai-shirdi-train-travel/
- http://chennai.justdial.com/tour-packages-for-shirdi_Chennai.html
(குறிப்பு: பக்தர்கள் பயணத்தைத் தொடங்கும்முன் ரயில்வே துறை விவரங்களை, பிற சுற்றுலா நிறுவன விவரங்களை அந்தந்த தினங்களில், அந்தந்த காலநிலைகளில் சம்பந்தப்பட்ட நிலையத்தை நேரில் அணுகித் தெரிந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு வலைப்பூ ஆசிரியர் பொறுப்பல்ல.இக்கட்டுரை புதிய பயணிகளுக்கு ஒரு வழிகாட்டிக் குறிப்பு மட்டுமே)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.