Total Pageviews

Thursday, June 30, 2011

Sai Aarthi

                       ஷீரடி சாயிக்கு ஆரத்தி                                     
 

            ழமையான நமது ரிக் வேதத்தில் "ஆரத்தி" என்ற சமஸ்க்ருத வார்த்தை "கடவுளுக்கு நமது அதிகபட்ச அன்பினை"க் குறிப்பதாக, சத்தியமான ஒன்றை நோக்கி அன்பினைச் செலுத்துவதாக, சொல்லப்பட்டுள்ளது. இறை வழிபாட்டினை முடிக்கும்போது செய்யும் சமய ஆச்சாரமாக (சடங்காக) ஆரத்தி உள்ளது. பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி/நெருப்பு/ஜோதி  வழிபாட்டிலிருந்து தோன்றியதுதான் தீபங்களுடன் ஆரத்திப் பாடல்கள் பாடும் வழக்கம். தன்னைவிட மிகப் பெரும் சக்தியிடம் தன்னைத் தான் ஒப்புவித்து நிம்மதியும் ஆனந்தமும் அடையும்வகையில் பாடுவதே ஆரத்தி.

இயற்கை மகா சக்தியுடன் நம்மை ஒன்றிணைக்க இயற்கையாகவே இருக்கும் பொருட்களைக் கொண்டு ஆரத்தி வழிபாடு நடத்துகின்றோம். மண்ணாலான அகல் விளக்கு, அல்லது வெள்ளியிலான விளக்கு, செம்பு/செப்பு/வெள்ளித் தட்டு, பஞ்சு திரி, பசு நெய், எண்ணெய், சூடம், வாசனை சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற இயற்கைப் பொருட்களை உபயோகிக்கின்றோம். எரிந்தபின் எதுவும் மிச்சம் வைக்காத சூடத்தின் மூலம் ஒளியையும், ஊதுவத்தி சாம்பிராணி தசாங்கம் - இவற்றின் மூலம் சுகந்த நறுமணம், ஜோதியைக் கண்டு மன ஒருமுகம் (concentration), ஆழ்ந்த மன அமைதி(tranquility) இவற்றை ஏற்படுத்திக் கொள்கிறோம். 

இந்த முறையானது ஒரு நினைவுக் குறிப்பாக, ஒரு அடையாளமாக இருக்கிறது. அதாவது, ஆரத்தி எடுக்கும்போது தெய்வ உருவத்தின் முன்பு, விளக்குகள் உள்ள தட்டினை கையில் ஏந்தி, இடமிருந்து வலப்புறச் சுழலாக (clockwise) சுற்றிக் காண்பிக்கிறோம். மனிதன் - வட்ட வடிவில் உள்ள பூமி, பிரபஞ்சம் - தெய்வீக மகா சக்தி அல்லது ஆண்டவர் இவற்றிக்கு இடையே உள்ள நிரந்தர தொடர்பினை நினைவு படுத்திக் கொள்கிறோம். கோயில் மணியோசை ஒலிக்க, நாவில் நல்லிசை பாட, வழிபாட்டினை முடித்து அந்த தட்டினை பக்தர்கள் அனைவருக்கும் காட்டுகிறோம். அப்போது பக்தர்கள் அந்த தீபத்தின் மேல் இரு உள்ளங்கைகளாலும் காட்டி கண்களில் அந்த இதமான சூட்டினை ஒற்றிக் கொண்டு தெய்வத்தின் அருட்சக்தியுடன் தம்மைத்தாமே கலந்து கொள்கிறார்கள். பிறகு புனித தீர்த்தம் அருந்தும்போது, பிரசாதம் சாப்பிடும்போது திவ்வியமாக, இனிமையாக, நிறைவாக, தெம்பாக, புதிய உற்சாகமாக, ஒரு நம்பிக்கைக் கீற்றாக, ஊக்கமாக மனம் இருப்பதை உணரலாம். 

மேலும் நமது இஷ்ட தெய்வமான பாபாவைப் போற்றிப் பாடுவதால் நமது வாய்-நாக்கு என்ற புலனும், ஒளியைப் பார்ப்பதால் நமது கண்கள் என்ற புலனும், இரு கைகள் தட்டி அக்கு பிரஷர் உத்தியுடன் - கீழே விழுந்து அனைத்து அவயங்களும் தரையில் பட நமஸ்காரம் செய்து வணங்கும் நமது 'மெய்' என்ற புலனும், நறுமணம் மூச்சு இழுத்த  மூக்கு என்ற புலனும், அற்புத இசை ஒலி கேட்டு மயங்கிய காதுகள் என்ற புலனும், ஆக ஐந்து புலன்களும் ஈடுபடும் அற்புத பயிற்சியே ஆரத்தி வழிபாடு!
என்ன, நமது பாபாவுக்கு ஆரத்தி பாட நீங்க ரெடியா? 
காண வேண்டிய பகுதி: SHIRDI SAI BABA AARATTHI  

மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க 
மங்கள இசை எந்தன் நாவினில் உதிக்க 
சாயி கணபதியே வருவாய் !

                                                              


Artist: Bathmavathi Balaji
Music: V Kishor Kumar
Lyrics: Nanjil Rajan
Album: Sri Sai Saranam

Courtesy: sacredverses

Shirdi Tour & New Superfast Express Train from Chennai!

  சென்னையிலிருந்து ஷீரடிக்கு
அதிவேக விரைவு ரயில் போக்குவரத்து 

        தெற்கு மத்திய ரயில்வே  வரும் ஜூலை 6 ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து  ஷீரடிக்கு வாராந்திர அதிவேக விரைவுத் தொடர்வண்டிப் போக்குவரத்தினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் சாயி நகர் ஷீரடி வரை வாரந்தோறும் இயக்க உள்ளது.

ரயில் எண் 22601 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமைகளில் 10:10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 11:30 மணிக்கு ஷீரடி சாயி நகர் வந்து சேரும்.  பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு ரயில் எண் 22602 ஷீரடி சாயி நகரில் வெள்ளிக்கிழமைகளில் 08:25 மணிக்குக் கிளம்பி, மறுநாள் 09:40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும் என அறிவித்திருக்கிறது.

போகும்போதும்-வரும்போதும்  இந்தத் தொடர் வண்டி நிற்கும் இடங்களாவன:
                   அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காரபேட்டை, கிருஷ்ணராஜபுரம், ஏலஹங்கா, ஹிந்துபூர், ஸ்ரீ சத்ய சாயி ப்ரஷாந்திநிலையம், தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், வாடி, குல்பர்கா, சோலாப்பூர், டௌன்டு, அகமத்நகர், மற்றும் புந்தம்பா வழியாக ஷீரடி சாயி நகர் ரயில் நிலையம் சென்றடையும். இந்த வண்டிகளில் பதினெட்டு கோச்சுகள் இருக்கும். அதாவது ஒரு ஏ சி இரண்டாம் இருக்கை வரிசை, இரண்டு ஏ சி மூன்றாம் இருக்கை வரிசை, ஏழு படுக்கை வரிசை, ஆறு பொது இரண்டாம் வரிசை மற்றும் இரண்டு இரண்டாம் வரிசை சுமை - ப்ரேக் வேன் ஊர்திப் பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.

Train.No.22601 Chennai Central – Sai Nagar Shirdi Superfast Express :
Departure: Chennai Central at 10:10 Am on Wednesdays 
Arrival: Sai Nagar Shirdi at 11:30 Am on Thursdays.

Train.No.22602 Sai Nagar Shirdi – Chennai Central Superfast Express :
Departure: Sai Nagar Shirdi at 08:25 Am on Fridays 
Arrival: Chennai Central at 09:40 Am on Saturdays.


ஷீரடி சென்றடைந்த உடன்  
 
ஷீரடியில் முக்கியமான தொலைபேசி உதவி எண்கள் (Emergency Help Line Numbers at Shirdi) குறித்த தகவலைப் பெற, ஷீரடியில் தங்குவது பற்றிய விரிவான தகவல்களுக்கு நீங்கள் பார்வையிட வேண்டிய சிறந்த இணையத் தளம் :

Shirdi shri saibaba sansthan
 
சென்னையில் ஷீரடி சாயிபாபா சமஸ்தானத்தின் தகவல் மையம் !

ஸ்ரீ  சாயிபாபா  சன்ஸ்தான்  டிரஸ்ட், (ஷீரடி)
இன்பர்மேஷன் சென்டர்,
கிருஷ்ணன் கரனை, போஸ்ட் - பட்டிபுலம் 
கிழக்கு கடற்கரைச் சாலை (E.C.R), சென்னை தமிழ் நாடு - 603 104, இந்தியா.
போன்   -044-27444093

ஷீரடி இன்பச் சுற்றுலா குறித்த தகவல்கள் பெற சில இணையத் தளங்கள் :

  1. http://www.railtourismindia.com/ 
  2. http://www.railtourismindia.com/TourPackages/RailTour/Madurai-To-Shirdi-Saibaba-Tour.html 
  3. http://shirdiyatra.in/index.html 
  4. http://www.starsai.com/chennai-shirdi-train-travel/ 
  5. http://chennai.justdial.com/tour-packages-for-shirdi_Chennai.html 
 

  (குறிப்பு: பக்தர்கள் பயணத்தைத் தொடங்கும்முன் ரயில்வே துறை விவரங்களை, பிற சுற்றுலா நிறுவன விவரங்களை அந்தந்த தினங்களில், அந்தந்த காலநிலைகளில் சம்பந்தப்பட்ட நிலையத்தை நேரில் அணுகித் தெரிந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு வலைப்பூ ஆசிரியர் பொறுப்பல்ல.இக்கட்டுரை புதிய பயணிகளுக்கு ஒரு வழிகாட்டிக் குறிப்பு மட்டுமே)







Sunday, June 26, 2011

Special Music

சாயி கவ்வாலி !

  ர்காக்களில் பாடப்படும் சூபி ஆன்மீக இசை கீதங்களே கவ்வாலி எனப் படுகின்றன. தெற்கு ஆசியாவில் பிரபலமான இந்த பாடல்கள் எழுநூறு வருடப் பாரம்பரியம் உடையவை. இறைவனின் பெயரை தொடர்ந்து கூறி போற்றிப்  பாடுபவர் கவ்வல் எனப்படுவார். கவ்வல் என்ற இசைக் கலைஞர்  பாடுவதே கவ்வாலி ஆகும். இவ்வகை இசையில் உலகப் புகழ் பெற்ற கலைஞர்கள் - நஸ்ரத் பதே அலிகான், மீரஜ் அஹமது நிஜாமி போன்றோர்.

ஹம்ஸார் ஹயத் நிஜாமி

மீரஜ் அஹமது நிஜாமியின் சகோதரர் மகனாகிய  புது டெல்லியைச் சேர்ந்த கவ்வாலி பாடகர் ஹம்ஸார் ஹயத் நிஜாமி ஒரு சிறந்த பாடகர் ஆவார். இவரது குழுவினர் அவ்வப்போது ஷீரடி சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இவரது ஆழ்ந்த ஆன்மீக அனுபவம் தரும் கவ்வாலி இசை நிகழ்ச்சிகளில் சாயி பக்தர்கள் ஆனந்தமாக ஆடிப் பாடி மகிழ்வர்.

இந்த வலைப்பூவின் வாசகர்களுக்காக இதோ அவர் பாடிய சாயி கவ்வாலி: