Total Pageviews

Saturday, December 22, 2012

Shirdi baba all over the world

உலகம் முழுவதும் ஷீரடி பாபா

சிங்கப்பூரில் சாயி பாபா 

அமெரிக்கா - நியூயார்க்கில் சாயி பாபா 


நியூசிலாந்தில் சாயி பாபா 
    



கனடாவில் சாயி பாபா 

 சாயிராம்.



Sunday, December 9, 2012

Shirdi Yathra by Flight

ஷீரடிக்கு விமானப் பயணம் 

தென்னிந்தியாவில் தொலை தூரத்தில் இருக்கும் பக்தர்கள் உடனடியாக ஷீரடி சென்று வர வேண்டுமென்றால் விமானப் பயணம் சிறந்தது. சென்னையைச் சேர்ந்த 'வசந்த்கமல்" நிறுவனம் ஒரு அருமையான சுற்றுலாவை ஏற்பாடு செய்து தருகிறது. சென்னையிலிருந்து  விமானத்தில் புனே சென்று அங்கிருந்து ஷீரடிக்கு அழைத்துச் சென்று, நட்சத்திர வசதி கொண்ட விடுதியில் தங்க வைத்து , நல்ல சாப்பாட்டு வசதியுடன் தரிசனம் முடித்துத் திரும்பி வருமாறு ஓர் எளிய டூர் பேகேஜினை அறிமுகம் செய்துள்ளது (vasantkamal.காம்)
மேலும் விபரங்களுக்கு :
திரு ராகுல், சுற்றுலா அமைப்பாளர், வசந்த்கமல் நிறுவனம், C/O யூரோ வேர்ல்ட் டூர்ஸ், 26, சி.பி.ராமசாமி ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை.
போன்: 9367797347, 9850434823.

**************************************************************************
சாயி மூர்த்தியின் வரலாறு - 8


(ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாயிஷ் மூர்த்தி கலா  கேந்திரா  நிறுவனத்தினர் தயாரிக்கும் அழகிய பாபா மூர்த்தி Courtesy: www.sayshmoorti.com)

ஷீரடிக்கு நாள்தோறும் செல்லும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் சாயி மூர்த்தியானது மிகுந்த உயிரோட்டத்துடன், பளபளக்கும் முகத்தோற்றத்துடன் பாபா கம்பீரமாக அமர்ந்திருக்கும் நிலையினை உடையது. தன்னைப் பார்க்கும் பக்தர்களை நேருக்கு நேராக பாபா பார்ப்பதுபோன்ற அனுபவத்தைத் தருவது. வருடந்தோறும் அதிகரித்துவரும் பக்தர்கள் தமது வாழ்வின் பிரச்சினைகளுக்கு வழிதேடி, பாபாவிடம் சரணடைந்து வேண்டிக்கொள்ளவும், மன அமைதி மற்றும் நிம்மதி பெறவும் ஷீரடி சாயி சமாதி மந்திரில் தரிசனம் செய்துகொண்டே இருக்கின்றனர். 

திருப்பதி புனித ஸ்தலத்திலே தொடர்ச்சியாக மக்கள் எறும்புகள் இனிப்பை நோக்கி ஊர்ந்து செல்வதுபோல் நடந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதுபோல ஷீரடியிலும் சாயி மூர்த்தியைக் காண மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருப்பதைக் காண, சமாதி மந்திரைப் பார்க்கச் செல்வதற்கு -முற்பிறவியிலும், இப்பிறவியிலும் மிகுந்த தானம், தவம், நற்கருமங்கள் செய்த புண்ணிய பலம் இருந்தால்தான் முடியும். அல்லது புதிய சாயி பக்தராக இருப்பின் பாபாவின் மேல் திட பக்தி, விசுவாசம், அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் பொறுமையோடு, விருப்பமும் இருந்தால் ஷீரடி பயணம் சாத்தியமாகக் கூடும்.

இந்த சாயி மூர்த்தியின் வரலாற்றில் பல்வேறு பக்தர்களின் உண்மை அன்பினாலும், விடாமுயற்சியாலுமே மூர்த்தி பிரதிஷ்டை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதை அறியலாம். இனிவரும் எதிர்காலத்திலும் அனைத்து சந்ததியினரும் தரிசித்துப் பயனடையும் வகையில் ஷீரடி சாயி பாபா சமஸ்தான நிர்வாகிகள் முன்கூட்டியே திட்டங்கள் வகுத்து மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். 

Samadhi Mandir
பாபா உயிருடன் அங்கு வசிப்பதுபோலவே கருதும் சமஸ்தானத்தினர் - பாபா துவாரகாமாயி மசூதியில் வசித்த காலத்தில் என்னென்ன உபசரிப்புகள் செய்தனரோ, அதே போல் இன்றும் தொடர்ந்து செய்து வருகின்றனர். தினமும் அதிகாலையில் பாபாவுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. சாயிபாபாவுக்கு காலை-மதியம்-இரவு உணவுகள் படைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு நான்கு தடவை ஒவ்வொரு ஆரத்தியின்போதும் பாபாவுக்கு உடையை மாற்றி அணிவிக்கின்றனர். அப்போது வெள்ளி அல்லது தங்க கிரீடம் அணிவிக்கப்படும். இரவு அனைவரும் உறங்கப்போகும்முன் கொசு வலை கட்டப்பட்டு சமாதி மேல் தூய வெண்ணிற துணி போர்த்தப்படும். பாபா அணியும் கப்னி உடை தைக்கப்படும் அதே துணிவகைதான் இந்த வெண்ணிற துணியும் ஆகும். பாபாவுக்கு அருகில் குடிக்க தண்ணீரும் வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கு பாபாவை எழுப்பி, கொசு வலையை அவிழ்த்து, பின்பு தூப, தீப ஆராதனை காட்டும் வேளையில் பூபாள ராகம் இசைக்கப்படும். முதல் ஆரத்தி முடிந்தவுடன் பாபாவுக்கு பாலபிஷேகம், நெய்யபிஷேகம், மற்றும் தயிர் அபிஷேகம் செய்யப்படும். பகதர்கள் காணிக்கை செலுத்தி தாங்களும் இந்த அபிஷேகத்தில் பங்கு பெறலாம். உடையும் வாங்கி அளிக்கலாம். மந்திருக்குள்ளேயே இருக்கும் சமஸ்தானக் கடையில் பாபா அணிந்த ஆடைகள் விற்பனைக்குக் கிடைக்கும். அன்பர்கள் அந்த புனிதமான ஆடையினை வாங்கி தத்தம் வீடுகளுக்கு, பூஜைக்கு எடுத்துச் செல்வர்.

இதைப் படிக்கும் புதிய வாசகருக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் சாயி பாபாவின் சக்தியை ஒரு தடவை உணர்ந்தவருக்கு இந்த வழிபாட்டு முறைகள் பேரன்பினால் பின்பற்றப்படுபவையே என்று உணர்ந்துகொள்ள இயலும். இதை இங்கு குறிப்பிடக் காரணம் என்னவென்றால் சாயி பாபாவின் அவதார ஸ்தலம் என்பதால் ஷீரடிக்குத் தனி மதிப்பும், உயர்வும் அமைந்துள்ள அதே சமயத்தில், பாபா அங்கு மட்டும் இருப்பதுபோல் பொருள் கொண்டுவிடக் கூடாது. எல்லாம் வல்ல தெய்வமாக இப்பிரபஞ்சம் முழுவதும் சாயி நிறைந்துள்ளார். தனது உண்மை பக்தனைக் காக்க எந்த நாட்டிலும், எந்த உருவத்திலும், எந்த சூழ்நிலையிலும் தோன்றி , எப்போதும் காக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருவதுதான் பாபா எனும் இறை சக்தி என்ற தெளிவு வேண்டும். 

வாழும் கடவுளாக பாபா அங்கு வாழ்ந்துகொண்டே இருப்பதாகக் கருதியே ஷீரடி மந்திரின் பூசாரிகளும், அலுவலர்களும் தொண்டாற்றி வருகின்றனர். மிகுந்த சிரத்தையுடன், பொறுப்புடன் பணி செய்து வருகின்றனர். இத்தகைய பொறுப்பினையும், கடமை உணர்வையும் அறிவுறுத்துவது போல் விந்தைச் சம்பவங்களும் நிகழ்வதுண்டு. ஒருமுறை அபிஷேகம் செய்யும்போது பூஜாரி, சாயி மூர்த்தியின் மேல் பாத்திரத்தை தவறுதலாக போட்டு விட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு அவருக்கு முழங்கால் மூட்டு வலி வந்து மருத்துவரிடம் காண்பித்து ஊசி போட்டு, வலி நீக்கும் மாத்திரைகளும் சாப்பிட்டார். அப்போது அந்த பூசாரி பாபாவிடம் "ஏன் நான் இந்த வலி- வேதனையை அனுபவிக்க வேண்டும்?" என்று குறைபட்டுக் கேட்டார். அதே நாள் இரவு பூசாரியின் கனவில் தோன்றிய பாபா " உனக்கு முழங்கால் மூட்டுப் பகுதியில் வலிப்பதாகக் கூறுகிறாய். ஆனால் நீ பாத்திரத்தை என் முழங்காலின் மேல் போட்டபோது எனக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தாயா? என்று கேட்டார். அந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பூஜாரி சாயி மூர்த்தியினை எவ்வகையிலும் காயப்படுத்தாது, உயிருடன் பாபா பரு உடலில் அமர்ந்திருப்பது போலவே எண்ணி சாயி மூர்த்தியை மதித்துப் போற்றிப் பணிகளைத் தொடர்ந்தார்.



சாயி பாபா உயிருடன் இருக்கும் உணர்வும், அனுபவங்களும் சாயி சமஸ்தான அலுவலர்கள் மற்றும் அனைத்து பக்தர்களால் பக்தியுடன் உணரப்படுகிறது. இத்தகைய உணர்ச்சிப்பாங்கும், வழிபாட்டு நிகழ்வுகளும், யாத்திரைகளும் சேர்ந்த ஓர் மந்திர சக்தி மிகுந்த தெய்வீக சூழலுள்ள இடமாக ஷீரடி இருப்பதை நீங்கள் ஷீரடியில் நடந்து செல்லும்போது உணரலாம்.

Samadhi Mandir    (இத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது)

ஓம் சாயிராம் ஓம் சாயிராம் ஓம் சாயிராம் .

Saturday, October 20, 2012

Narayanan Krishnan

நாராயணன் கிருஷ்ணன் - Helping the Helpless

Narayanan Krishnanஅமெரிக்காவின் CNN (சி என் என் ) நிறுவனத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டிற்கான உலகின் பத்து சிறந்த ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையைப் பெற்ற தமிழர் திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்கள்.

தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த இவர் தமது அக்ஷயா அறக்கட்டளை மூலம் வீதிகளில் உள்ள ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்கள், வீடற்றோர், கைவிடப்பட்டவர்கள் மற்றும் வயதான நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு நாள்தோறும் உணவளித்து அருந்தொண்டு ஆற்றிவருகிறார். இவர்தம் உரையைக் கேட்போமா?


இவருடைய அக்ஷயா அறக்கட்டளை மூலம் நீங்களும் தொண்டு செய்ய விருப்பமா? கூடுதலான விவரங்களுக்கு நீங்கள் காண வேண்டிய தளம் : www.akshayatrust.org

பசியில் துடிப்பவருக்கு உணவு கொடு - தாகத்தில் தவிப்பவருக்கு தண்ணீர் கொடு - ஆடையின்றி அல்லல் படுவோருக்கு ஆடை கொடு                                                                                                                                    - ஷீரடி சாயி பாபா 




TED Talks in Tamil

ஜோசெட் ஷீரன்: "பட்டினியை வெல்வோம்"

ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான உலக உணவுத் திட்ட நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளராகிய ஜோசெட் ஷீரன், இங்கு பசி - பட்டினி பிரச்னை குறித்தும், உலகில் ஏன் போதுமான அளவு உணவு விளைச்சல் இருந்தாலும் பட்டினிச் சாவுகள் தொடரும் அவல நிலை இன்னும் இருக்கிறது என்பது குறித்தும், உணவுக்காக இன்னும் போர்கள் நடைபெறுவது குறித்தும் உரையாற்றுகிறார். அவரது கனவு, உணவுப் பிரச்சனையைத் தனி மனித அளவிலும் தனி தேசங்களுக்குள்ளும் தீர்க்க முயலாமல், உலகமே இணைந்து செயல்பட்டுத் தீர்க்க வேண்டும் என்பதாகும்.
Source: www.ted.com
Translated into Tamil by Murali Dharan
Reviewed by vidya raju


The History of Baba Statue - 7


சாயி மூர்த்தியின் வரலாறு - 7

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி மாநகரில் முதன்முதலில் அமைக்கப்பட்ட சாயி பாபாவின் மூர்த்தி பற்றிய வரலாற்று நிகழ்வுகளை தொடர்ந்து இத் தொடரில் பார்த்து வருகிறோம். நாடு, மத, இன,மொழி, பால் வேறுபாடின்றி அனைத்து மக்களும், உலகம் முழுவதுமுள்ள சாயி பக்தர்களும் வழிபட்டு பயனடைந்து வரும் இந்த மூர்த்தி ஐந்தடி ஐந்து அங்குல உயரம் உடையது. 1952 - இல் தொடங்கிய பணிகள் 1954 - இல் நிறைவுற்று இம்மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1954 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அன்று விஜயதசமி நன்னாளில் இந்த பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரும் புண்ணியஸ்தலமான ஷீரடியின் சமாதி மந்திர்- மேற்கு பகுதியிலுள்ள மேடையில், பாபாவின் சமாதிக்குப் பின்புறம் சமய ஆசார விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை செய்து வைத்தவர் திரு. சுவாமி ஸ்ரீ சாயி சரணானந்தர் ஆவார். இவர் சாயி பாபா மஹா சமாதி அடையும் முன் நேரில் சந்தித்த பேறு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாயி மூர்த்தியைத் தயாரிக்கும் பணிகளில் சிற்பி பாலாஜி தலிம் அவர்கள் ஈடுபட்டிருந்த போது  ஒரு நாள் பாபா தரிசனம் அளித்து "வேலையை முடி, எதிர்காலத்தில் இனி எந்த மூர்த்தியையும் நீ செய்ய மாட்டாய்" என்று கூறினார். அன்று முதல் சிற்பி தலிம் அவர்கள் வேறு எந்த மூர்த்தியையும் உருவாக்கவில்லை. நமது மரியாதைக்கும், நிரந்தர அன்பிற்கும் உரிய, பக்தர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற சிற்ப மகரிஷி பாலாஜி தலிம் அவர்கள் தமது 82 வயதில் டிசம்பர் 25, 1970 அன்று தனது இறுதி மூச்சினை விட்டார்.


திரு. பாலாஜி தலிம் அவர்களின் பேரன் சிற்பி ராஜிவ் தலிம் அவர்கள் இன்று

திரு. ராஜிவ் தலிம் அவர்களின் சிறப்பு பேட்டி ஒளிக்காட்சியினை இதோ இங்கு கண்டு மகிழுங்கள்:

ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி

(வரலாற்றுப் பயணம் தொடரும்..)

Saturday, September 29, 2012

TV Serial

செய்திகள் : டாக்டர் ராமானந்த சாகரின் தொலைக்காட்சித் தொடர் இப்போது டி வி டி வடிவில் !


   * டாக்டர் ராமானந்த சாகர் பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் ஒரு கட்டுரையில் பார்த்துள்ளோம். கடந்த செப்டம்பர் 27, 2012 வியாழன் அன்று சென்னையில் உள்ள ராஜ் வீடியோ விஷன் நிறுவனம் ஷீரடி சாயி பாபா தொலைக்காட்சித் தொடரின் 12 பாகங்களை டிவிடி குறுந்தட்டு வடிவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த புகழ் பெற்ற தொடர் மக்களையும், பாபா பக்தர்களையும் வெகுவாகக் கவர்ந்த அற்புதத் தொடராகும். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அருமையான தயாரிப்பு.
விலை: ரூ. 599
மேலும் தகவல்களுக்கு:
இணைய தளம்: ராஜ்வீடியோவிஷன்.நெட்
முகவரி:
703, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு,சென்னை,தமிழ்நாடு, இந்தியா.

(* இது ஒரு தகவல் குறிப்பு மட்டுமே. இத்தகவலுக்கு எவ்வகையிலும் வலைப்பூ ஆசிரியர் பொறுப்பல்ல. பக்தர்கள் நிறுவனங்களை நேரில் அணுகி பயனடையுமாறு வேண்டப்படுகிறது)

Friday, September 28, 2012

Silicon Valley Dwarakamayi

சிலிகான் வேலியில்  துவாரகாமாயி !


அமெரிக்காவின் சிலிகான் வேலியில் சன்னிவேல் பகுதியில் அமைந்துள்ள ஷீரடி  சாயி ஆலயம் இதுதான் :


                                          சாயி ஓம்.

Sunday, September 23, 2012

The History of Baba Statue - 6

சாயி மூர்த்தியின் வரலாறு - 6

      பாபா மூர்த்தியினை செதுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திரு. தலிம் அவர்கள் தனது உதவியாளர்கள் மறுத்துவிட்ட நிலையில் தானே உளியினை கையில் கொண்டு அந்த முக்கியமான பகுதியினை செதுக்க ஆரம்பித்தார். படபடக்கும் நெஞ்சுடன் "பாபா எனக்கு உதவி செய்யுங்கள்" என்று வேண்டிக் கொண்டே சுத்தியலால் லேசாக தட்ட ஆரம்பித்தார். காற்றின் வெற்றிடம் ஒரு சிலையில் ஏற்பட்டால் அதை நீக்குவதோ, முழுமையாக உடைத்து எடுப்பதோ அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. சிற்பியின் பல நாள் இரவு பகல் பாராத கடும் உழைப்பினை பணயம் வைக்கும் செயலாக அது ஆகிவிடக் கூடும். இந்த சூழ்நிலையில், வெற்றிடம் ஏற்பட்டிருந்த பகுதிக்கருகில், அந்த மார்பள் கல்லில் இடது முழங்கால் பகுதியில் ஒரு தட்டு தட்டியதும் வியக்கத்தக்க விதத்தில் சிறு துண்டு மட்டும் தனியாக விழுந்தது. 

சிற்ப மகரிஷி தலிம் அவர்களின் பெயரை காலமெல்லாம் சொல்லப் போகும் அந்த அற்புத மூர்த்தி எவ்வித குறையும் இல்லாமல், முழுமையாக, சிறப்பாக அமைந்தது. எது தேவையற்ற பகுதியோ அது மட்டும் செதுக்கப்பட்டு இருந்தது.  இதைக் கண்டு சிற்பி தலிம் அவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் பாபாவை வணங்கினார். மகிழ்ச்சிப் பெருக்குடன் நடனமாடியபடியே அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்த அதிசய நிகழ்ச்சியினைப் பார்த்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 


http://i53.tinypic.com/2h540gn.jpg
திருமதி லக்ஷ்மிபாய் ஷிண்டே அம்மையார் 
பிறகு இந்த ஐந்து அடி ஐந்து அங்குலம் அளவுள்ள முழுமையான மூர்த்தி அந்த கிராமத்தைச் சுற்றிலும் பெரும் ஆரவாரத்துடன் ஒரு விழாவாக எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மிகுந்த உயிரோட்டத்துடன், ஷீரடி சாயி பாபாவின் தோற்றத்தை அப்படியே வெளிப்படுத்தும் விதமாக அம்மூர்த்தியை உருவாக்கியிருந்ததை பார்த்து அனைவரும் பரவசமடைந்தனர். 

பாபாவின் காலத்தில் அவரோடு வாழ்ந்து அவரை நேரில் கண்டிருந்த சுவாமி ஸ்ரீ சாயி சரணானந்தரும், திருமதி லக்ஷ்மிபாய் ஷிண்டே அம்மையாரும் பெருவியப்பு அடைந்தனர். பாபா உயிருடன் மீண்டும் அந்த மூர்த்தி வடிவில் அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்து ஆச்சரியமடைந்தனர்.
http://i55.tinypic.com/23h6075.jpg
சுவாமி ஸ்ரீ சாயி சரணானந்தர் 

இந்த சாயி மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வும், மேலும் பல சுவாரசியமான  தகவல்களும் அடுத்த பகுதியில் தொடர்ந்து காண்போம்.


ஓம் சாயி சிவ சிவ  சாயி  ஓம் சாயி சிவ சிவ  சாயி  ஓம் சாயி சிவ சிவ  சாயி  ஓம் சாயி சிவ சிவ  சாயி 

(வரலாற்றுப் பயணம் தொடரும்)

Monday, September 3, 2012

Shirdi Sai Bhajan

திரு. சுரேஷ் வாட்கர் அவர்கள் பாடிய சாயி பஜனைப் பாடல்- மனதை லேசாக்கி, இனிமையான நிலைக்கு கொண்டு வரும் சக்தி உடையது இந்த பஜனை :

இணையத்தில் வெளியிட்டோர்: spiritualmantra


இணையத்தில் வெளியிட்டோர்: saravanscm

சாயி ஓம்.

The History of Baba Statue -5

சாயி மூர்த்தியின் வரலாறு - 5              
      
    சிற்ப மகரிஷி தலிம் அவர்கள் மும்பையில் தொழில் செய்து கொண்டிருந்தபோது அவர்தம் சிற்பக் கலைத் திறமை கண்டு வியந்த அரசாங்கம் மும்பை மாநகரை அழகுபடுத்த அழைத்தது. மும்பை மாநகரின் ப்ளோரா பவுன்டைன் பகுதி முதல் ஹைகோர்ட் பகுதி வரை இவர் உருவாக்கிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய திறன் படைத்த தலிம் அவர்கள் உருவாக்கிய உலகப் புகழ் பெற்ற சாயி மூர்த்தி இன்றும் ஷீரடியில் லட்சோபலட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது. சாதி,சமய,ஏழை-
திரு. தலிம் அவர்கள் தம் உதவியாளருடன்
(Courtesy: Sai devotees Rohit Behal, Raghav Subramanian)

பணக்காரர், இன,மொழி,பால் வேறுபாடுகள் இன்றி எல்லோராலும் வழிபடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் பொதுவாக சமாதி மந்திரின் கதவு திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் தினமும் நின்று தரிசனம் செய்துகொண்டே இருக்கின்றனர். உலகிலேயே  அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட மூர்த்தியாக இது உள்ளது. ஐந்தடி ஐந்து அங்குல உயரத்தில் 1952 - இல் ஆரம்பிக்கப்பட்ட இம்மூர்த்தி உருவாக்கம் 1954 - இல் முடிவடைந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1954- ஆம் வருடம் அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி விஜயதசமி நாளில் நிறுவப்பட்டது இம்மூர்த்தி. பாபா மகா சமாதி அடைந்து 36 வருடங்கள் கழித்தே இம்மூர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.

பணி முடிவடையும் வேளையில்

1954 - ஆம் வருடம் அன்று திரு. தலிம் அவர்கள் தமது மூர்த்தியை செதுக்கி  உருவாக்கும் பணியை முடிக்கும் நேரம் நெருங்கியது. சாயிபாபாவின் மார்பள் சிற்பம் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட நிலையில் தலிமுக்கு ஒரு சவாலான தருணம் வந்தது.

அப்போது சாயி மூர்த்தியின் இடது முழங்கால் பகுதியில் காற்று வெற்றிடம் உருவாகி இருப்பதைக் கவனித்தார். இது எவ்வளவு கடும் விளைவை ஏற்படுத்தும் என்பது திரு. பாலாஜி தலிமுக்கு பதட்டத்தை உண்டாக்கியது. ஏன் என்றால் அரும்பாடுபட்டு உருவாக்கும் சிற்பத்தில் ஏதோ ஓர் பகுதியில் வெற்றிடம் ஏற்பட்டால் அது முழு சிற்பத்தையே பாதிக்கக் கூடும். மூர்த்தியில் குறை இருப்பின் அது வழிபட ஏற்றதாக இருக்காது. எனவே மேற்கொண்டு செதுக்குவதை தலிம் நிறுத்தி வைத்தார்.

இனிமேல் செதுக்கினால் முழு சிற்பமும் உடைந்துபோக நேரிடுமே என அஞ்சி வருந்தினார், இவ்வளவு ஆண்டு நேரமும், கடும் உழைப்பும் வீணாய்ப் போவதா என்று பதறினார். பாபாவிடம் அவர் " பாபா எனக்குக் கருணை காட்டுங்கள்.. உங்கள் மூர்த்தி தயாராகிவிட்டது. எனக்குக் கருணை காட்டுங்கள்.." என வேண்டினார். உடனே அதிசயத்தக்க விதத்தில் "பாலாஜி,
தொடர்ந்து செய் " என்று ஒரு குரல் கேட்டது. தனது உதவியாளர்களை கூப்பிட்ட திரு. தலிம் அவர்களையே செதுக்குமாறு கூறினார். இதற்கு அந்த தொழிலாளர்கள் சிற்பம்  உடைந்து விடுமே என பயந்து மறுத்து விட்டனர்.


(வரலாற்றுப் பயணம் தொடரும்)

Saturday, August 18, 2012

Useful Information

சாயி சன்மார்க்கத் தொண்டர்களுக்குப் பயனுள்ள தகவல்கள் !
(கீழே இருக்கும் வரிகளின் மேல் சொடுக்கினால் அந்த வலைத் தளங்களுக்குச் செல்லலாம்)

1. சாயி ஆலயங்களை நிர்வகிப்பது எப்படி?

2. இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள சாயி கோவில்களின் முகவரி எங்கே கிடைக்கும்?

3. ஆங்கிலம், தமிழ், மற்றும் பிற மொழிகளில் சாயிபாபா பற்றிய புத்தகங்கள் பட்டியல் கிடைக்குமா?

4. பாபா பற்றிய இலவச புத்தகங்களை படித்திட, பதிவிறக்கம் செய்ய எங்கு செல்வது?

5. தமிழ் மற்றும் பிற மொழிகளில் பாபா ஆரத்திப் பாடல் வரிகளை பதிவிறக்கம்  செய்ய எங்கு செல்ல வேண்டும்?

சாயி ஓம்.

The History of Baba Statue - 4




சாயி மூர்த்தியின் வரலாறு - 4

சிற்ப மகரிஷி பாலாஜி வசந்த் ராவ் தலிம் அவர்களை ஷீரடி சாயி சமஸ்தானம்  பாபா மூர்த்தியை வடிவமைக்கத் தேர்ந்தெடுத்தப் பிறகு தலிம் அவர்கள் தம் பணியினைத் துவக்கினார். இரும்பு கொல்லர்கள், தச்சர்கள் ஆகியோரிடமிருந்து கருவிகளை வாங்கினார். பாபாவின் சிலை வடிவ மாதிரியை முதலில் களிமண்ணில் உருவாக்கினார். பாபாவின் ஒரே கருப்பு-வெள்ளைப் புகைப் படம் மட்டுமே திரு. பாலாஜி தலிம் அவர்களிடம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு பாபா மூர்த்தியை தத்ரூபமாக அசல் தோற்றத்துடன் சாயி பாபாவின் முக உருவ ஒற்றுமையுடன் வடிப்பது மிகக் கடினமானதாக இருந்தது. 
எனவே திரு. தலிம் அவர்கள் 'தான் வடிவமைக்கும்போது பாபா தரிசனம் அளித்தால்' மூர்த்தியும் சிறப்பாக அமையும்-அதன் மூலம் வணங்கும் பக்தர்களும் மகிழ்ச்சியும் பக்தி பரவசமும் அடைவார்களே என்று நினைத்து வேண்டினார். 

பாபாவின் உதவி!

ஒருநாள் காலை ஏழு மணி அளவில் திரு. தலிம் அவர்கள் தனது ஸ்டுடியோவில் நுழையும்போது அவர் மின்விளக்கினை ஏற்றுவதற்குள்ளாகவே அந்த அறை முழுவதும் மிகப் பிரகாசமான ஒளி பரவுவதை உணர முடிந்தது. அந்த ஒளியில் காட்சி அளித்த சாயி பாபா தனது முகத்தை வெவ்வேறு கோணங்களில் காண்பித்து தலிம் அவர்களின் மனக்குழப்பம் நீக்கி, சந்தேகங்களை விலக்கி தமது உருவத்தினை- சிற்பி தனது மனக்கண்ணில் நன்கு நினைவில் இருத்திக்கொள்ள பேருதவி புரிந்தார். இந்த சம்பவத்திற்குப் பின் சிற்பி தலிம் அவர்கள் மகிழ்ச்சியுடன் மூர்த்தியை வடிவமைக்கத் தொடங்கினார். இறுதியில் அமைந்த அந்த முன்மாதிரிச் சிலை அனைவரது எதிர்பார்ப்பிற்கும்  மேலாகவே தத்ரூபமாக, உயிரோட்டமாக அமைந்தது. 

சிற்பி திரு.தலிம் அவர்கள் பின்பு ஒரு சமயம் சாயிநாராயண பாபா அவர்களிடம் இது தொடர்பாக சான்று பகர்ந்துள்ளார். ஷீரடி பாபா எவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் உதவினார் என்பதையும், மூர்த்தி உருவாக்கும்போது  பாபாவின் குரலை மிகத் தெளிவாகக் கேட்டதையும், பாபா வழிகாட்டியதையும் கூறி வியந்து உள்ளார். ஷீரடி சாயி சமஸ்தானத்தினர் உடனடியாக இம்மூர்த்தியினை அனுமதித்ததோடு இம்மூர்த்தியின் மாதிரியை வைத்து இத்தாலியன் மார்பள் கல்லில் இறுதியாக வடிவமைத்து சமாதி மந்திரில் வைக்கப்பட்டது. 

http://i51.tinypic.com/2djxmyw.jpg
சாயி மூர்த்தியை உருவாக்கும் அரும்பணியில் தலிம் அவர்கள்

இம்மூர்த்தியினை உருவாக்கும் பெரும் பொறுப்பில் இருந்த சிற்பி தலிம் அவர்கள் சந்தித்த சோதனையும் , சாயி அருளால் அவர் புரிந்த சாதனையையும் பற்றி இனி காண்போம்.

(வரலாற்றுப் பயணம் தொடரும்.....)

 






Saturday, July 21, 2012

The History of Baba Statue - 3

சாயி மூர்த்தியின் வரலாறு - 3   


உலகம் உள்ளளவும் இருக்கப் போகும் சாயி மூர்த்தியை உருவாக்கிய திரு. பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்களின் ஆன்மீகத் தொண்டு மிகவும் போற்றத்தக்கது. 'சிற்ப மஹரிஷி' என்கின்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ற திரு பாலாஜி பாவ்சாகேப் தலிம் அவர்கள்  இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் 1888-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தகப்பனார் திரு. வசந்த்ராவ் ஹைதராபாத் நிஜாமிடம் கட்டிட ஒப்பந்தக்காரராக இருந்தார். அப்போது பல தடவைகள் நிஜாமினால் கௌரவிக்கப்பட்டு இருந்திருக்கிறார். அவர் இளம் வயதிலேயே தனது மூன்று குழந்தைகளை, தம் மனைவி திருமதி. சரஸ்வதியை விட்டுவிட்டு காலமானார். 

அவரின் குடும்பம் பிறகு ஹைதராபாதை விட்டு மும்பையில் வந்து குடியேறியது. தனது பள்ளிப் படிப்பை முடித்த இளம் பாலாஜி தலிம் அவர்கள் மும்பையில் உள்ள சர் ஜே.ஜே. ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் சிற்பக்கலை வகுப்பில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். அங்கு டாலி குர்ஷேட்ஜி என்ற பெயர் பெற்ற உதவித்தொகை பெற்று அந்த தொகையில் தனது படிப்பை முடித்தார். இவருடைய மகனார்தான் திரு. ஹரிஷ் பி. தலிம் அவர்கள். இன்று திரு. ஹரிஷ் பி. தலிம் அவர்களின் புதல்வரான திரு. ராஜிவ் ஹரிஷ் தலிம் அவர்கள்,அதாவது - பாலாஜி வசந்த்ராவ் தலிமின் பேரன் சிற்பக் கலைக் கூடத்தை நடத்தி வருகிறார்.

மும்பை மாநகரில் ஜூலை 14, 1963 அன்று பிறந்த திரு. ராஜிவ் தலிம் அவர்கள் இப்போது இந்தியாவின் தலை சிறந்த சிற்பிகளில் ஒருவராக, வெண்கலம், மார்பிள் மற்றும்  பிளாஸ்டர் பொருட்களில் சிற்பத் தொழில் செய்து வருகிறார். 
அந்த புகழ் பெற்ற சிற்பிகளின் புகைப் படத்தைக் கீழே காணுங்கள்.


திரு. பாலாஜி வசந்த்ராவ்  தலிம் (இடது பக்கத்தில்) 

திரு. பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்களினால் 1918 - இல் உருவாக்கப்பட்டதுதான் தலிம்ஸ் ஆர்ட் ஸ்டூடியோ என்கின்ற சிற்பக் கலைக் கூடம்.

மனித உருவச் சிலைகள் செய்வதில் ஐரோப்பியருக்கு நிகராக போட்டியிடுவதற்கு மேதைத்தனம் வேண்டும். அத்தகைய தனித் திறமை கொண்டிருந்த திரு.பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்களால் உருவாக்கப் பட்டு, பிரிட்டிஷ் நாட்டின் இலண்டன் மாநகரில் வெம்ப்ளி பகுதியில் நடந்த ஒரு பொருட்காட்சியில் தங்கப் பதக்கம் பெற்ற ஒரு பாம்பாட்டி சிலை- புகைப் படம் இதோ :

(Courtesy: Talims Art Studio)

இந்த வெண்கலச் சிலையின் நுணுக்கமான வேலைப்பாட்டிலிருந்தே பாலாஜி தலிம் அவர்களின் கைவண்ணத்தை, கற்பனைத் திறனை, ஆக்கபூர்வ சக்தியை உணர்ந்து கொள்ள முடியும்.

(வரலாற்றுப் பயணம் தொடரும்)




Monday, June 25, 2012

Lyrics - 5


                                                                                    
                                                                           ஜெய் சாயி

பாபா பாட்டு புஸ்தகம் 


இசைத்தொகுப்பின் பெயர்: பாபா புகழ் மாலை  
இசை வெளியீட்டு வருடம் : 2010                                                  

பாடியவர் : இசைஞானி இளையராஜா  
கவிஞர்: சங்கமேஷ்வர்  
இசை அமைப்பாளர்: இசைஞானி இளையராஜா
பாடலின் தலைப்பு: பூவாரம் சூட்டி ....


பூவாரம் சூட்டி புகழ்பாட எண்ணி பூப்பறிக்க வனம் ஏகினேன்
பூ மலர்ந்து உதிர்ந்து சருகாகும் என்று பறிக்காமல் அங்கே நின்றேன்
என்றும் வாடாத பூ இங்கு எதுதான் என்று
என்றும் வாடாத பூ இங்கு எதுதான் என்று 
தேடி மனமென்னும் மலர்தன்னை கண்டு கொண்டேன்
கோடான கோடி  மனமென்னும் மலர்கள்
உனக்காக மலர்ந்தாடுது
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம் ..ஓம்....           (குழுவினர்)
சொல்லென்னும் மலரால் பாமாலை ஆக்கி 
இசையோடு புகழ் பாடுது
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம்....                       (குழுவினர்)

அடியார்கள் அரிதாக அவதரிக்கும் இம்மண்ணும்
அவதரித்த உனைப் போற்றுது
அவதி கொண்டோர் தமக்கு அவதாரமாய் வந்து
அரவணைக்கும் உனைப் பாடுது
அடியார்கள் அரிதாக அவதரிக்கும் இம்மண்ணும் 
அவதரித்த உனைப் போற்றுது 
அவதி கொண்டோர் தமக்கு அவதாரமாய் வந்து 
அரவணைக்கும் உனைப் பாடுது                                                    (குழுவினர்)

உந்தன் அழைப்பின்றியே எவரும் வரக்கூடுமோ
உந்தன் அழைப்பின்றியே எவரும் வரக்கூடுமோ  
அண்டி வருவோர்க்கு உந்தன் அதிசயமுண்டு
வணங்கும்முன் வறண்டிருந்த வாழ்க்கை வேறு
வணங்கியபின் வளம் பெருகும் வாழ்வு வேறு
கோடான கோடி  மனமென்னும் மலர்கள் 
உனக்காக மலர்ந்தாடுது 
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம் ..ஓம்....           (குழுவினர்)
சொல்லென்னும் மலரால் பாமாலை ஆக்கி 
இசையோடு புகழ் பாடுது 
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம்....                       (குழுவினர்)

கண்சிமிட்டும் விண்மீன்கள் உன் கோவில் மேல் நின்று
உனக்காகச் சுடர் வீசுது
கண் இமைக்க மறந்து இங்கு மின்மினிகள் வலம்வந்து
ஊர்வலங்கள் தான் நடத்துது
கண்சிமிட்டும் விண்மீன்கள் உன் கோவில் மேல் நின்று 
உனக்காகச் சுடர் வீசுது 
கண் இமைக்க மறந்து இங்கு மின்மினிகள் வலம்வந்து 
ஊர்வலங்கள் தான் நடத்துது 
வேத கோஷங்களும் கீத வாத்யங்களும்
வேத கோஷங்களும் கீத வாத்யங்களும் 
இங்கு ஓர் சுருதி ஓர் லயத்தில் உனைப் பாடுது
பக்தியுடன் வந்தால் உன் பார்வையுண்டு 
நம்பிக்கை கொண்டால் நல்வாழ்வும் உண்டு 

பூவாரம் சூட்டி புகழ்பாட எண்ணி பூப்பறிக்க வனம் ஏகினேன்
பூ மலர்ந்து உதிர்ந்து சருகாகும் என்று பறிக்காமல் அங்கே நின்றேன்
என்றும் வாடாத பூ இங்கு எதுதான் என்று 
என்றும் வாடாத பூ இங்கு எதுதான் என்று 
தேடி மனமென்னும் மலர்தன்னை கண்டு கொண்டேன்
கோடான கோடி  மனமென்னும் மலர்கள் 
உனக்காக மலர்ந்தாடுது 
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம் ..ஓம்....           (குழுவினர்)
சொல்லென்னும் மலரால் பாமாலை ஆக்கி 
இசையோடு புகழ் பாடுது 
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம்....                       (குழுவினர்)


Sunday, June 10, 2012

The History of Baba Statue --2

சாயி மூர்த்தியின் வரலாறு !  -- 2

சாயி பக்தி அன்பர்களே, சாயி மூர்த்தியின் வரலாற்றில் முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது பளிங்குக்கல் அல்லது சலவைக் கல் அல்லது மார்பள் ஸ்டோன் பற்றித்தான். காரணம் நமது தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றில் அனைத்து கோவில்களிலும் கருங்கல் சிற்பங்கள், செப்பு, தங்கம், பஞ்ச உலோக சிலைகள், போகர் உருவாக்கிய பழனி நவபாஷாண சிலை, மரச் சிற்பங்கள், ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான தஞ்சாவூர் பெரிய கோவிலின் கிரானைட் கருங்கல் வேலைப்பாடு போன்ற வகைகளை அதிகம் கண்டு உள்ளோம். ஒவ்வொரு பகுதியின் புவியியல், பாரம்பரியங்களுக்கு ஏற்ப காலத்தால் அழியாத கலைகளும் ஓவியங்களும் சிற்பங்களும் உருவாகி வந்துள்ளன. அவற்றில்  உலகப் புகழ் பெற்ற இத்தாலியன் வெண்ணிற மார்பள் சிற்பங்களும் அடங்கும்.

(Photo Courtesy: http://www.babasaiofshirdi.org)

வெண்ணிற மார்பள் கற்கள் இத்தாலி நாட்டில் நீண்ட கால பாரம்பரியமும், பெருமையும் உடையது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் தொடங்கிய இந்த சலவைக்கல் சிற்ப வேலை அந்த நாட்டின் கலாச்சாரத்துடன் தொடர்புடையது. இத்தாலியின் அப்புவான் மலைத் தொடரில் மிகச்சிறந்த கராரா வகை வெண்ணிற மார்பள் கற்கள் கிடைக்கின்றன. அம்மலைத் தொடரில் ஆறாயிரத்து ஐநூறு அடி நீள கற்சுரங்கங்களிலிருந்து (குவாரிகள்) இந்த வகை கற்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன. முன்பெல்லாம் உளி, வெடி மருந்து கொண்டு எடுக்கப் பட்ட இக்கற்கள் இப்போது மிக நவீன முறைகளைப் பயன்படுத்தி எடுக்கப் படுகின்றன. இத்தாலியர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வீட்டின் சமையலறை, வீட்டு கதவுகள், அழகுச் சிற்ப வேலைப்பாடுகள், சர்ச்- தேவாலய சிற்பங்கள் என பல பகுதிகளில் இந்த கற்களைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்காவில் நூறு வருடங்களுக்கு மேலாக வர்மொன்ட் போன்ற பகுதிகளில் சலவைக் கற்கள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநில பளிங்குக் கற்கள் மிகவும் புகழ் பெற்றவை. இத்தாலி பளிங்குக் கற்களின் சிறப்பு அம்சம் அதில் காணப் படும் வரி வரியான அழகுத் தோற்றங்கள் ஆகும். மார்பள் கற்கள் நீண்ட காலம் அழியாது இருக்கக் கூடிய கடினத் தன்மையும், அழகு மிளிரும் தன்மையும் தன்னகத்தே கொண்டவை.


ஷீரடியில் பாபா மஹா சமாதி அடைந்து 36 வருடங்களுக்குப் பிறகு 1954-ஆம் வருடம் அக்டோபர் 7-ஆம் நாள் அன்று சாயி பாபாவின் மூர்த்தி பிரதிஷ்டை (நிறுவுதல்/அமைத்தல்) செய்யப் பட்டது. இப்போது ஷீரடி செல்லும் வாய்ப்புப் பெற்ற பக்தர்களைக் கேட்டால் அம்மூர்த்தியின் தோற்றத்தை எண்ணி வியப்புடன் சொல்வார்கள். பாபா உயிருடன் அமர்ந்திருப்பதைப் போல பிரம்ம தேஜஸ் என்கிற தெய்வீக முகப் பொலிவுடன், பளபளக்கும் முக அமைப்புடன் நம்மையே பார்ப்பது போன்ற வடிவுடன் பாபா காட்சி தருவதை அங்கு காணலாம். இத்தகைய சிறப்பு பெற்ற அந்த மூர்த்தி இத்தாலியின் வெண்ணிற மார்பள் கல்லில் செதுக்கப் பட்டது.

1952 -ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பைத் துறைமுகத்தில் பல இறக்குமதிப் பொருட்களோடு ஓர் பொருளாக ஒரு பெரிய இத்தாலியன் பளிங்குக்கல் வந்திறங்கிய போது மக்கள் ஒருவருக்கும் அந்த கல் ஏன் வந்தது - எங்கு செல்கிறது, யார் வரவழைத்தனர், என்கின்ற விவரமெல்லாம் தெரியவில்லை. துறைமுக அதிகாரிகளுக்கும் எந்த தகவலும் கிடைக்காததால் அந்த கல்லை ஏலம் விட ஏற்பாடு செய்தனர். அந்த ஏலத்தில் அக்கல்லை வாங்கியவர் பிறகு ஷீரடி சன்ஸ்தானத்திற்கு வழங்கினார். அந்த இத்தாலியன் பளிங்குக் கல்லின் தரத்தைப் பார்த்து வியந்த ஷீரடி சன்ஸ்தான அலுவலர்கள் அதனை பாபா சிலை செய்ய பயன்படுத்துவது என்று முடிவெடுத்தனர். அப்போது ஒரு திறமை வாய்ந்த சிற்பியை அவர்கள் தேடியபோது அவர்களுக்குக் கிடைத்த அற்புத சிற்பக்கலை வல்லுனர்தான் ஸ்ரீ பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்கள்.

(Courtesy: Sai Devotee Rohit Behal)

இத்தகு காலத்தால் அழியாத காவியச் சிற்பத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு மும்பையைச் சேர்ந்த ஸ்ரீ பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்கள் கைகளுக்கு வந்து சேர்ந்த நிலையில் அவர் சந்தித்த சவால்களும் அந்த அரும் பணியினை எவ்வாறு வெற்றிகரமாக அவர் முடித்தார் என்பதையும் இனி வரும் பகுதிகளில் காணலாம்.



(வரலாற்றுப் பயணம் தொடரும்..)

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 

Tuesday, June 5, 2012

Yoga in Villages

கிராமங்களில் யோகா !


(Uploaded inYoutube by MrPecraja)

Sunday, May 27, 2012

Dr. Ramanand Sagar's Serial

டாக்டர் ராமானந்த் சாகரின் தொலைக்காட்சித் தொடர் 


டாக்டர் ராமானந்த் சாகர் அவர்கள் தமது விரிவான ஆராய்ச்சியின் பின்னர் உருவாக்கிய அற்புத தொலைக்காட்சித் தொடர்தான் அண்மைக்காலத்தில் விஜய் டிவி ஒளிபரப்பிய ஷீரடி சாயி பாபா என்ற தொடர் ஆகும். உலகமெங்கும் பக்தர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த தொடர் இப்போது டி வி டி/விசிடி குறுந்தட்டு வடிவில் கிடைக்கின்றது. ஹிந்தி மொழியில் கிடைக்கும் இந்த தொடர் பற்றிய தகவல் காண www.shoppingonlineindia.com என்ற இணையத் தளம் சென்று பார்க்கலாம்.

    நான்கு வருடங்கள் ஆராய்ச்சி செய்து, நூற்றுக்கணக்கான கலைஞர்களின் ஒத்துழைப்பில் பரோடா நகரின் சாகர் பிலிம் சிட்டியில் ஷீரடி போன்ற செட் அமைத்து இந்த காவியத் தொடரினை உருவாக்கி உள்ளார் டாக்டர் ராமானந்த் சாகர். புகழ்பெற்ற 'ராமாயணம்', 'கிருஷ்ணா' போன்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசெம்பர் 12, 2005 அன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் எண்பத்து ஏழு வயதில் காலமானார். ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத குறுந்தட்டுக்கள் இவை. இந்த தொடர் தமிழில் விற்பனைக்குக் கிடைத்தால் அருமை. உங்களுக்குத் தகவல் தெரிந்தால் கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள்.


சாயி ஓம்.


Sunday, May 13, 2012

Sai Videos-2




(இணையத்தில் பதிவேற்றியவர்: 24*7zone11)

Sai Videos

சென்னை அம்பத்தூர் ஷீரடி சாயிபாபா கோவிலில் பாடகர் திரு. வீரமணி ராஜூ அவர்களின் பஜனை நிகழ்ச்சி 

(இணையத்தில் பதிவேற்றியவர் : kvnvasu)




(இணையத்தில் பதிவேற்றியவர் : priyasuria1910)


(இணையத்தில் பதிவேற்றியவர் : திருமதி B N கலா. திருமதி கலா அவர்களின் பாபா பற்றிய தமிழ் வலைப் பூ பார்வையிட முகவரி : http://srisaikala.blogspot.com ) 



(மலைசியா நாட்டில் நாகசாயி கோவில் !
இணையத்தில் பதிவேற்றியவர் : shanky45 ) 


Sunday, May 6, 2012

Movie 2

Movies !

திரைப்படங்கள்! 


           ஷீரடி சாயி நாதரைப் பற்றிய திரைப் படங்கள் பல இந்நாள் வரையில் வெளிவந்துள்ளன. பல இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப் படங்களில் ஒரு சில- இணைய உலகில் சில பக்தர்களால் பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளன. அவற்றை நாம் தொடர்ந்து தேடிப் பிடித்து இவ் வலைப் பூவில் இணைத்து வருகிறோம். நண்பர்களே, பொதுவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக பாபாவின் ஆசி பெற்ற பல பக்தர்களின் உண்மைச் சம்பவங்களை எடுத்துக்காட்டுகளாக வைத்துக் கொண்டு இத் திரைப்படங்களை மக்களின் ரசனைக்கேற்ப  உருவாக்கியுள்ளனர். இந்த திரைப் படங்களை சாதாரண பொழுதுபோக்கு படங்களாக கருதாமல் அந்த திரைப்படங்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கண்டு களிப்போம்.

 



Saturday, April 21, 2012

The History of Baba Statue

சாயி மூர்த்தியின் வரலாறு !

              ன்பர்களே, சீர்மிகு ஷீரடியின் சாயி பாபா அருள்புரியும் இடங்களான- உலகம் முழுவதும் இருக்கும் கோவில்கள் அல்லது மந்திர்கள் அவரது உருவச் சிலையை வழிபாட்டிற்காக கொண்டுள்ளன. அந்த சிலைகள் பெரும்பாலும் சலவைக்கல்லில் பாபா அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப் பட்டுப் பக்தர்கள் வணங்குவதற்காக கிட்டத்தட்ட ஒரே பாணியில் உருவாக்கப் பட்டுள்ளன. இத்தகைய சாயி பாபா சலவைக்கல் சிற்பங்கள் தோன்றிய வரலாற்றைப் பற்றித்தான் இனி வரும் தொடரில் நாம் காண இருக்கின்றோம்.


சாயி சிலை வரலாறு என்று இத்தொடரின் பெயர் இல்லாமல் சாயி மூர்த்தி வரலாறு என அமைத்ததன் காரணம் என்னவெனில், ஹிந்து கலாசார சிலை வழிபாடு என்பது மூர்த்தி வழிபாடே- என்பதை விளக்குவதற்காகவே. இந்தியாவின் கடைசி சில நூற்றாண்டுகளில் சிலை வழிபாடு என்ற வார்த்தை தவறாக பரப்பப்பட்டு, தவறாக புரிந்து கொண்ட வார்த்தையாகி விட்டது, பெரும்பாலும். 

 உலகின் பழமை வாய்ந்த ஹிந்துக் கலாச்சாரத்தில் மூர்த்தி என்ற சமஸ்க்ருத வார்த்தையானது - தெய்வீக அருட்சக்தியே ஒரு உருவமாக குவிந்து ஓர் இடத்தில் காணப்படுவதைக் குறிக்கும். அதாவது, கண்ணுக்குத் தெரியாத இறை சக்தி-கண்ணுக்குத் தெரிந்த சாயி பாபா என்ற பெயரில் அவதாரம் புரிந்து, பல ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையில், கண்கள் என்ற புலன் (sense) உடைய மக்கள் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையில் ஒரு உருவமாக, பக்தர்கள் வணங்குவதற்கும், சாயி அவதார மகிமை உணர்ந்து வேண்டுகோள் விடுப்பதற்கும், ஆறுதல் பெறுவதற்கும், தைரியம் அடைவதற்கும், வாழ்க்கைச் சிக்கலில் சிக்கித்தவிப்போர் நம்பிக்கை பெறுவதற்கும், ஒரு மனத் தெம்பு ஊட்டுவதற்கும், நம்மைக் காக்க இதோ நம் அருகில் கடவுள் என்று குழப்பம் நீங்கி மனம் ஒன்றுகுவிப்பு (focus) அடைவதற்கும், மன ஓர்மையை (concentration) வளர்த்துக் கொள்வதற்கும், எந்தவிதமான அறிவு வளர்ச்சி உடையோரும், ஏழை எளியோரும், எளிதில் கடவுளிடம் முறையிட்டு வேண்டுவதற்கும், மந்திர சக்தி பயன்படுத்தி-முறைப்படி பூஜை செய்து அமைக்கப் படுவதே 'மூர்த்தி' ஆகும். ஆயிரங்கணக்கான பக்தர்களின் எண்ணத்தின் ஆற்றலும், கோவிலைப் பராமரிப்போரின் மந்திர உச்சாடன ஒலி அதிர்வலைகளும், தெய்வீக அருட்சக்தியான இறை ஆற்றலும் ஒன்று குவியும் இடமே அந்த மூர்த்தி அமைந்துள்ள ஆலயம் ஆகும். சூரிய கதிர்கள் உலகமெங்கும் இருந்தாலும் ஒரு கண்ணாடி லென்ஸ், அந்த கதிர்களை சில நிமிடங்களில் ஒன்று குவித்து நெருப்பினை உருவாக்கி விடுவது போல, உலகம் முழுவதும் இறை அவதார சாயிபாபாவின் ஆற்றல் நிறைந்து இருந்தாலும் பக்தர்களின் தினசரி வழிபடும் பயன்பாட்டிற்காக அமைக்கப் பட்டுள்ளதே 'சாயி மூர்த்தி' என்று கூறலாம்.

 இளைஞர்கள் அவரவர்தம் பொறுமை மற்றும் நம்பிக்கைக்கேற்ப இம்மூர்த்தியை வணங்கலாம். அல்லது சாயி பாபாவின் திரு உருவத்தை மனதில் பதித்துக்கொண்டு- எங்கும் அவர் அருள் சக்தி நிறைந்து இருப்பதை உணர்ந்து எந்த இடத்திலும் வேண்டி வணங்கி நினைத்துக் கொள்ளலாம்.  

                                                                                                                                       (தொடரும்)

Sunday, April 1, 2012

The Making of Marble Statues

இணையத்தில் பதிவேற்றியவர்கள்: jaychamundamoortiart
சிற்பங்களை எவ்வாறு உருவாக்குகிறார்கள்?

அன்பர்களே, ஷீரடி சாயி பாபாவின் சலவைக் கல் சிற்பங்கள் மற்றும் பாபா சிலை தோன்றிய வரலாறும் பற்றிய தொடர் நமது வலைப் பூவில், விரைவில் .....!
காணத் தவறாதீர்!

Sunday, March 18, 2012

Satcharithra in Braille

கண்பார்வையற்றோருக்காக ப்ரைல்லி மொழியில் சத்சரித்திரம் !


 கடந்த மார்ச் ஒன்றாம் தேதியன்று ஷீரடி சாயி சன்ஸ்தானம் கண்பார்வையற்றோருக்கான ப்ரைல்லி மொழியில் ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் சாயி சத்சரித்திரத்தை ப்ரைல்லி மொழியில் மொழிபெயர்த்து, கண் தெரியாத அன்பர்களும் நமது பாபாவின் வாழ்க்கை வரலாற்றினை, அவதார நோக்கத்தினை அறிந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தி உள்ளார்.


ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி .

Wednesday, February 22, 2012

Lyrics - 4

                                                பாபா பாட்டு புஸ்ம் 


                                                                                     
                                                                           ஜெய் சாயி

இசைத்தொகுப்பின் பெயர்: சாய்தேவா 
இசை வெளியீட்டு வருடம் : 2008                                                  
பாடியவர் : பத்ம பூஷன் எஸ். பி.பாலசுப்ரமணியம் 
கவிஞர்: மருதபரணி 
இசை அமைப்பாளர்: ஆதித்யா போட்வால் 
பாடலின் தலைப்பு: சாயி பாபா....
இணையத்தில் வெளியிட்டோர் : www.raaga.com 


சாயி பாபா........சாயி பாபா..... சாயி பாபா............... சாயி பாபா..............
சாயினடி சரணமடி என்று வந்த வேளை
அன்பு தன்னைப் பொழிந்தாரே பாபா
பேரன்பு தன்னைப் பொழிந்தாரே பாபா

தேவன் அடி தாங்கும் முடி
ஜோதி ஏற்றும் வேளை
தெய்வம் என ஓடி வரும் நாதா...
தெய்வம் என ஓடி வரும் நாதா...

ராமன் என்ன?, ரஹீம் என்ன?,
நானக் என்ன?, ஏசு என்ன?..
பரமாத்ம பிரதிநிதி என்றாயோ..
மதம் என்று, குலம் என்று, வேறுபாடு எதற்கென்று -
மானிடர்க்கு உணர்த்த வந்தாயோ..

ராமன் என்ன?, ரஹீம் என்ன?,  
நானக் என்ன?, ஏசு என்ன?..
பரமாத்ம பிரதிநிதி என்றாயோ..
மதம் என்று, குலம் என்று, வேறுபாடு எதற்கென்று - 
மானிடர்க்கு உணர்த்த வந்தாயோ..                                    (குழுவினர்)

கொடிய விஷம் விழுங்கி பாரில் அருள் புரிந்த தாயோ...
இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..
இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..                   (குழுவினர்)

இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..
இருட்டில் ஒளிவிளக்கு போல் நின்றாயோ..                  (குழுவினர்)

வியாதிகளின் வேர் அழித்து வேதனையைத்தான் ஒழித்து
அருளை அள்ளித் தந்ததென்ன நீயோ..
சரணாகதி என்றவர்க்கு சத்குருவாய் நீ நின்று
அன்பே உன் உலகம் என்றாயோ...

வியாதிகளின் வேர் அழித்து வேதனையைத்தான் ஒழித்து 
அருளை அள்ளித் தந்ததென்ன நீயோ..
சரணாகதி என்றவர்க்கு சத்குருவாய் நீ நின்று 
அன்பே உன் உலகம் என்றாயோ...                                       (குழுவினர்)

பிக்ஷை ஏற்றுக்கொண்டு உயிர் பிச்சை போட்ட தாயோ..
நடந்தால் நடை அழகு என்ன சேயோ...
நடந்தால் நடை அழகு என்ன சேயோ... (குழுவினர்)

அ...... ஆ........

நடந்தால் நடை அழகு என்ன சேயோ...
நடந்தால் நடை அழகு என்ன சேயோ... (குழுவினர்)


ஹோய்...சாயினடி சரணமடி என்று வந்த வேளை
அன்பு தன்னை பொழிந்தாரே பாபா
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா

அன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
அன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
அன்பு தன்னை பொழிந்தாரே பாபா 
பேரன்பு தன்னை பொழிந்தாரே பாபா (குழுவினர்)
ஆ...........சாயி பாபா............சாயி நாதா..........ஆ....

(குறிப்பு: கீழே தரப்பட்டுள்ள கருவியின் ஒலி அளவை [volume] உங்கள் விருப்பம் போல் குறைத்து வைத்த பின்பே பாடலைக் கேட்கத் தொடங்கவும்)



Monday, February 20, 2012

108 mantras & Suprabhatham

ஷீரடி சாயிபாபா 108 மந்திரங்களும் சுப்ரபாதமும் 


இணையத்தில் வெளியிட்டோர்: varun29




இணையத்தில் வெளியிட்டோர்: LilaSakura 






இணையத்தில் வெளியிட்டோர்: UnitedWayOfBaroda



ஓம் சாயி. 



Success Quotes

வெற்றி மொழிகள்  

     நண்பரே, நல்ல எண்ணங்களுடன் உங்களது உயரிய குறிக்கோளில் விடாது முயன்றால் வெற்றி கிடைக்கும். ஒரு சாதனையாளருக்கும், சாதாரணமானவருக்கும் உள்ள வித்தியாசம் அவர்களது தினசரி பழக்கங்களில்தான் இருக்கிறது. இது ஒரு முக்கியமான வெற்றி ரகசியம். இன்னும் சற்று முயற்சி செய்திருந்தால், இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடித்து முயற்சியை கைவிடாமல் தொடர்ந்திருந்தால், ஜெயித்திருக்கலாம் -என்கின்ற நிலைமையில் அவசரப்பட்டு தனது உழைப்பைக் கைவிட்டவர்களே தோல்வியாளர்கள் ஆவர்.

இனி சில அறிஞர்களின் வெற்றிச் சிந்தனைகள் :

1. "மேலே செல்லுங்கள். விடாமுயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமில்லை. திறமை அதற்கு ஈடாகாது. திறமை இருந்தும் தோற்றவர்கள் ஏராளம். கல்வி மட்டும் ஈடாவதில்லை. படித்தும் பாதை தவறியவர்கள் இவ்வுலகில் பலர். மேதைத்தனமும் ஈடாகாது. பலன் காணாத மேதைகள் என்பது பழமொழி. சளைக்காத மன உறுதியும், விடாமுயற்சியுமே சர்வ வல்லமை படைத்தவை".

(முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு.கால்வின் கூலிஜ் கூறிய அற்புத உரை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் தமிழில் உருவாக்கியது)

2. "சாதனைகள் புரிவது என்பதை மனக்கட்டுப்பாட்டின் மூலம் ஒரு பழக்கமாக்கிவிட முடியும். இதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணம் - செயலாக -செயல் -பழக்கமாக -பழக்கம் - பண்பாக -பண்பு -நமது தலைவிதியாக மாறுகிறது".
                                                                                                   - டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.

3. உனக்கும் பிறருக்கும் பயன் தரக் கூடிய, எந்த ஒரு வெற்றி தரும் பழக்கத்தைப் பழகுவதற்கும் குறைந்த பட்சம் 66 நாட்கள் தேவை. அந்த 66 நாட்களில் ஒரு நாள் கூட இடை விடாது முயற்சி செய்தால் வெற்றி உனக்கே. அந்த செயல்கள் உனது ஆழ்மனத்தில் பதிவாகி விடுவதால் பிறகு தொடர்ந்து அதே நல்ல பழக்கத்தை கடைபிடிப்பது எளிதாகி விடுகின்றது. இதை உலகின் சிறந்த சுய முன்னேற்ற சிந்தனையாளர்கள் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர்.

4 . "உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும், செய்வதும் நித்திய கடன். உனக்கும்- உனது பெற்றோர், குரு, உன் குடும்பத்தினர் முதலானவர்களுக்கும் - உன் உறவினர்கள், ஊர் மக்கள் சமுதாயத்திற்கும் - நீ பிறந்த நாட்டிற்கும் - இறுதியாக இந்த உலக மக்களுக்கே தொண்டு ஆற்றுவதே ஐவகை கடமைகளாகும் (five duties)"
                                                      -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியது

5 . நம்பிக்கையை விட சிறந்த மருந்து இவ்வுலகில் எதுவுமில்லை.
                                                                                                       -ஆரிசன் ஸ்வெட் மார்டன்  

6 . ஒருவரது புறச் சூழ்நிலைகள் அவரது அக எண்ணங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன. ஒருவரது எண்ணம் போல் அவரது வாழ்வு அமைகிறது.                                                                                  
                                                                                                           - ஜேம்ஸ் ஆலன்.



நம்பிக்கை - பொறுமை - விடாமுயற்சி 

சாயி ஓம்.