சாயி மூர்த்தியின் வரலாறு - 7
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி மாநகரில் முதன்முதலில் அமைக்கப்பட்ட சாயி பாபாவின் மூர்த்தி பற்றிய வரலாற்று நிகழ்வுகளை தொடர்ந்து இத் தொடரில் பார்த்து வருகிறோம். நாடு, மத, இன,மொழி, பால் வேறுபாடின்றி அனைத்து மக்களும், உலகம் முழுவதுமுள்ள சாயி பக்தர்களும் வழிபட்டு பயனடைந்து வரும் இந்த மூர்த்தி ஐந்தடி ஐந்து அங்குல உயரம் உடையது. 1952 - இல் தொடங்கிய பணிகள் 1954 - இல் நிறைவுற்று இம்மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1954 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அன்று விஜயதசமி நன்னாளில் இந்த பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரும் புண்ணியஸ்தலமான ஷீரடியின் சமாதி மந்திர்- மேற்கு பகுதியிலுள்ள மேடையில், பாபாவின் சமாதிக்குப் பின்புறம் சமய ஆசார விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை செய்து வைத்தவர் திரு. சுவாமி ஸ்ரீ சாயி சரணானந்தர் ஆவார். இவர் சாயி பாபா மஹா சமாதி அடையும் முன் நேரில் சந்தித்த பேறு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாயி மூர்த்தியைத் தயாரிக்கும் பணிகளில் சிற்பி பாலாஜி தலிம் அவர்கள் ஈடுபட்டிருந்த போது ஒரு நாள் பாபா தரிசனம் அளித்து "வேலையை முடி, எதிர்காலத்தில் இனி எந்த மூர்த்தியையும் நீ செய்ய மாட்டாய்" என்று கூறினார். அன்று முதல் சிற்பி தலிம் அவர்கள் வேறு எந்த மூர்த்தியையும் உருவாக்கவில்லை. நமது மரியாதைக்கும், நிரந்தர அன்பிற்கும் உரிய, பக்தர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற சிற்ப மகரிஷி பாலாஜி தலிம் அவர்கள் தமது 82 வயதில் டிசம்பர் 25, 1970 அன்று தனது இறுதி மூச்சினை விட்டார்.
திரு. பாலாஜி தலிம் அவர்களின் பேரன் சிற்பி ராஜிவ் தலிம் அவர்கள் இன்று திரு. ராஜிவ் தலிம் அவர்களின் சிறப்பு பேட்டி ஒளிக்காட்சியினை இதோ இங்கு கண்டு மகிழுங்கள்: |
ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி
(வரலாற்றுப் பயணம் தொடரும்..)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.