Total Pageviews

Monday, February 20, 2012

Success Quotes

வெற்றி மொழிகள்  

     நண்பரே, நல்ல எண்ணங்களுடன் உங்களது உயரிய குறிக்கோளில் விடாது முயன்றால் வெற்றி கிடைக்கும். ஒரு சாதனையாளருக்கும், சாதாரணமானவருக்கும் உள்ள வித்தியாசம் அவர்களது தினசரி பழக்கங்களில்தான் இருக்கிறது. இது ஒரு முக்கியமான வெற்றி ரகசியம். இன்னும் சற்று முயற்சி செய்திருந்தால், இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடித்து முயற்சியை கைவிடாமல் தொடர்ந்திருந்தால், ஜெயித்திருக்கலாம் -என்கின்ற நிலைமையில் அவசரப்பட்டு தனது உழைப்பைக் கைவிட்டவர்களே தோல்வியாளர்கள் ஆவர்.

இனி சில அறிஞர்களின் வெற்றிச் சிந்தனைகள் :

1. "மேலே செல்லுங்கள். விடாமுயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமில்லை. திறமை அதற்கு ஈடாகாது. திறமை இருந்தும் தோற்றவர்கள் ஏராளம். கல்வி மட்டும் ஈடாவதில்லை. படித்தும் பாதை தவறியவர்கள் இவ்வுலகில் பலர். மேதைத்தனமும் ஈடாகாது. பலன் காணாத மேதைகள் என்பது பழமொழி. சளைக்காத மன உறுதியும், விடாமுயற்சியுமே சர்வ வல்லமை படைத்தவை".

(முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு.கால்வின் கூலிஜ் கூறிய அற்புத உரை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் தமிழில் உருவாக்கியது)

2. "சாதனைகள் புரிவது என்பதை மனக்கட்டுப்பாட்டின் மூலம் ஒரு பழக்கமாக்கிவிட முடியும். இதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணம் - செயலாக -செயல் -பழக்கமாக -பழக்கம் - பண்பாக -பண்பு -நமது தலைவிதியாக மாறுகிறது".
                                                                                                   - டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.

3. உனக்கும் பிறருக்கும் பயன் தரக் கூடிய, எந்த ஒரு வெற்றி தரும் பழக்கத்தைப் பழகுவதற்கும் குறைந்த பட்சம் 66 நாட்கள் தேவை. அந்த 66 நாட்களில் ஒரு நாள் கூட இடை விடாது முயற்சி செய்தால் வெற்றி உனக்கே. அந்த செயல்கள் உனது ஆழ்மனத்தில் பதிவாகி விடுவதால் பிறகு தொடர்ந்து அதே நல்ல பழக்கத்தை கடைபிடிப்பது எளிதாகி விடுகின்றது. இதை உலகின் சிறந்த சுய முன்னேற்ற சிந்தனையாளர்கள் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர்.

4 . "உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும், செய்வதும் நித்திய கடன். உனக்கும்- உனது பெற்றோர், குரு, உன் குடும்பத்தினர் முதலானவர்களுக்கும் - உன் உறவினர்கள், ஊர் மக்கள் சமுதாயத்திற்கும் - நீ பிறந்த நாட்டிற்கும் - இறுதியாக இந்த உலக மக்களுக்கே தொண்டு ஆற்றுவதே ஐவகை கடமைகளாகும் (five duties)"
                                                      -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியது

5 . நம்பிக்கையை விட சிறந்த மருந்து இவ்வுலகில் எதுவுமில்லை.
                                                                                                       -ஆரிசன் ஸ்வெட் மார்டன்  

6 . ஒருவரது புறச் சூழ்நிலைகள் அவரது அக எண்ணங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன. ஒருவரது எண்ணம் போல் அவரது வாழ்வு அமைகிறது.                                                                                  
                                                                                                           - ஜேம்ஸ் ஆலன்.



நம்பிக்கை - பொறுமை - விடாமுயற்சி 

சாயி ஓம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.