Total Pageviews

Saturday, August 20, 2011

Saibaba Lyrics Book!


   ஷீரடி சாயி பாபா பாட்டு புத்தகம்!  
                
         இதுவரை தமிழில் வெளிவந்துள்ள பாபாவைப் போற்றும் பக்தி இசை ஒலித் தொகுப்புகள் ஏராளம். மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் பாடியுள்ள அந்தப் பாடல்கள் காலத்தால் அழியாத காவியப் பாடல்கள். பக்தி உணர்வையும், பாபாவை யாவரும் எளிதாகப் புரிந்து கொள்ளவும், பாபாவின் சக்தியை அறிந்து கொள்ளவும், பாபாவின் மேல் பேரன்பு, நம்பிக்கை, விசுவாசம் இவற்றை வளர்க்கவும் உதவக் கூடியவை அவை. 

நீங்கள் தனிமையிலோ, நடந்து செல்லும் போதோ, குடும்ப உறுப்பினர்களுடனோ, அனைவரும் ஒன்று கூடும் நிகழ்விலோ, அல்லது மன அமைதி வேண்டியோ- ஆனந்தமாகப் பாடிப் பார்க்கலாம். இது வரை வெளியிடப்பட்டுள்ள அனைத்துப் பாடல்களையும், இனி வரும் இசைத் தொகுப்புக்கள் அனைத்தையும் ஒரு பெரிய பாட்டு புத்தகமாக உருவாக்க எண்ணியுள்ளேன். இந்த அடியேனின் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல முழு முதற்கடவுள் சாயி விநாயகரை வேண்டி முதற் பாடல் வரிகளை இங்கே பதிவு செய்கிறேன். பாபாவின் பரிபூரண அருள் பக்தர்களுக்குக் கிடைக்கப் பிரார்த்தனை செய்கிறேன். 

                                           
                                                                                 
                                                                       ஜெய் சாயி 

1.

இசைத் தொகுப்பின் பெயர் : ஸ்ரீ சாய்ராம் 
இசை வெளியீட்டு வருடம் : 1996 
பாடியவர்                       : K. வீரமணி                                       
கவிஞர்                           : K. சோமு 
இசை அமைப்பாளர் : K. வீரமணி & K. சோமு 
பாடலின் தலைப்பு    : கஜானனா சாயி கஜானனா
இணையத்தில் வெளியிட்டோர் : www.raaga.com

கஜானனா சாயி கஜானனா
கஜானனா சாயி கஜானனா
கஜானனா சாயி கஜானனா  (குழுவினர்)
கஜானனா சாயி கஜானனா

ஷீரடி சாயீச கஜானனா
ஷீரடி சாயீச கஜானனா          (குழுவினர்)
ஸ்ரீ சிவ நந்தன கஜானனா 
ஸ்ரீ சிவ நந்தன கஜானனா      (குழுவினர்)

கஜானனா சாயி கஜானனா
கஜானனா சாயி கஜானனா

மூஷிக வாகன கஜானனா
மோதகப் ப்ரியனே கஜானனா
மூஷிக வாகன கஜானனா        (குழுவினர்)
மோதகப் ப்ரியனே கஜானனா

வாமன ரூபனே கஜானனா
வாமன ரூபனே கஜானனா        (குழுவினர்)

காருண்ய சாயி கஜானனா
காருண்ய சாயி கஜானனா         (குழுவினர்)

கஜானனா சாயி கஜானனா
கஜானனா சாயி கஜானனா

ஏகாந்த மூர்த்தி கஜானனா
ஏக தந்தனே கஜானனா
ஏகாந்த மூர்த்தி கஜானனா         (குழுவினர்)
ஏக தந்தனே கஜானனா

லம்போதரனே கஜானனா
லம்போதரனே கஜானனா           (குழுவினர்)
ஷண்முக சோதர கஜானனா
ஷண்முக சோதர கஜானனா      (குழுவினர்)

கஜானனா சாயி கஜானனா
கஜானனா சாயி கஜானனா
ஷீரடி சாயீச கஜானனா
ஸ்ரீ சிவ நந்தன கஜானனா
கஜானனா சாயி கஜானனா
கஜானனா சாயி கஜானனா
கஜானனா சாயி கஜானனா
கஜானனா சாயி கஜானனா

(குறிப்பு: கீழே தரப்பட்டுள்ள கருவியின் ஒலி அளவை [volume] உங்கள் விருப்பம் போல் குறைத்து வைத்தபின்பே பாடலைக் கேட்கத் தொடங்கவும்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.