Total Pageviews

Sunday, August 7, 2011

ONLINE Booking for Darshan

'சாயி டெக்' திட்டம்(Sai Tech Project)
கடந்த 15 ஜூலை 2011 குருபூர்ணிமா தினத்தன்று, ஷீரடி சாயி பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் ஷீரடியில் ரூபாய் 22 கோடியில் சாயி டெக் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் சாயி பக்தர்கள் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் கீழ்க்கண்ட தேவைகளுக்குப் பதிவு செய்யலாம் :
  1. பாபா தரிசனத்துக்கு நேரம் பெறுதல் 
  2. அறைகள் பதிவு செய்தல்  
  3. அன்பளிப்பு அளித்தல்  
  4. சாயி பிரசாதாலயாவில் இலவச உணவு பரிமாற நன்கொடை அளித்தல்    
    ஆன்லைனில் பதிவு செய்த அன்பர்கள் சாதாரணமாக இருக்கும் வரிசையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. விரைந்து சென்று பாபாவை தரிசிக்கலாம். இந்த அமைப்பு ஷீரடியில் மக்கள் நெரிசலைத் தடுத்து பக்தர்களின் நேரத்தையும் மிச்சப் படுத்துவதாக அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் 37 கணிப்பொறி தொடு திரைகளும் வைக்கப்பட்டுள்ளன. காக்னிசன்ட் கணிப்பொறி நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு திரு கே.வி.ரமணி அவர்களால் மேற்பார்வையிடப் படுகிறது. கிரடிட் கார்டு எனும் கடன் அட்டை இல்லாத பக்தர்கள் பதிவு செய்ய மும்பை, சென்னை, பெங்களூரு, மற்றும் டெல்லியில் உள்ள தகவல் மையங்களை நாடலாம். சென்னையில் உள்ள மையம் பற்றிய தகவல்களுக்கு இவ்வலைப்பூவின் முந்தைய பதிவுகளைப் பார்க்கவும்.

    இதுபோன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள கீழ்க்கண்ட இணைய தளம் சென்று முதலில் முறையாகப் பதிவு செய்துகொண்டு, அதில் அளிக்கப்பட்டிருக்கும் சகல தகவல்களையும் அறிந்துகொண்டு பயணித்தால் ஷீரடி சென்று சாயினாதரின் அருள் பெறலாம்.

    https://online.sai.org.in/ 



    மேலும் தகவல் பெற:

    Online Booking for Darshan & Accommodation
    -
     http://saibabadwarkamai.com/forum/index.php?topic=5125.0


    சாயி ஓம்.

    No comments:

    Post a Comment

    Note: Only a member of this blog may post a comment.