Total Pageviews

Sunday, August 7, 2011

Boarding&Lodging @Shirdi

ஷீரடியில் இலவச உணவு மற்றும் தங்கும் வசதி

 ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த  ஸ்ரீ காசி அன்னபூர்ணா வாசவி ஆர்ய வைசிய அறக்கட்டளை ஷீரடியில் நெடுந்தொலைவிலிருந்து வரும் பக்தர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்கும் வசதியினை அளிக்கின்றது. கடந்த 28  ஏப்ரல் 2011  அன்று இரண்டு ஏக்கர் பரப்பளவில், 320  அறைகளுடன் நித்தியான்ன சத்திரம் திறக்கப்பட்டது. இக் கட்டிடம் ஏற்கனவே கட்டப்பட்டு இருக்கும் கட்டிடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 2005 முதல் இயங்கி வரும் அந்த கட்டிடமானது   7500 சதுர அடிகளில் நாற்பது அறைகளுடன் உள்ளது. இந்த சத்திரம் குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி வசதி, இலவச வெந்நீர் வசதியுடன் மூன்று மாடிகள் கொண்டதாக விளங்குகின்றது. சத்திரத்தில் தங்குவதற்கு தகுந்த அடையாள அட்டையுடன் சென்று முன்கூட்டியே பதிவு செய்தல் வேண்டும்.

முகவரி:
நித்யான்ன சத்திரம்,
ஷீரடி சாயி பாபா மந்திர் அருகில்,
நாகர் மன்மாடு ரோடு,
ஜோஷி ஆஸ்பத்திரி எதிரில்,
ஷீரடி - 423109 ,
அகமதுநகர் மாவட்டம்,
மகாராஷ்டிர மாநிலம், இந்தியா.
போன்: 02423-255039,098228 93791



Email: ho@aryavysyasatram.com
Web: 
http://aryavysyasatram.com




ஷீரடி சாயிபாபா சன்ஸ்தான் அறிவித்துள்ள கட்டணத்துடன் கூடிய வசதிகள்

ஷீரடியில் கோயில் பக்தர்களுக்கு உதவ சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை கீழே உள்ள தளத்திற்கு சென்று பார்க்கலாம். துவாராவதி பக்திநிவாஸ், நியூ பக்த நிவாஸ், தர்ம சாலா காம்ப்ளெக்ஸ் போன்ற கட்டிடங்களில் நியாய விலைக் கட்டணத்துடன் கூடிய தங்கும் வசதி உள்ளது.


http://www.shrisaibabasansthan.org/new/new_eng%20template_shirdi/shirdi/accomodation.html 


பிற இணைய தளங்கள் :


Accommodation Info @ Shirdi
-
 http://www.saiamrithadhara.com/Accommodation.html

 (குறிப்பு: பக்தர்கள் பயணத்தைத் தொடங்கும்முன் தங்கும் விடுதி விவரங்களை, பிற சுற்றுலா நிறுவன விவரங்களை அந்தந்த தினங்களில், அந்தந்த காலநிலைகளில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசியிலோ நன்கு விசாரித்துத் தெரிந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு வலைப்பூ ஆசிரியர் பொறுப்பல்ல.இக்கட்டுரை புதிய பயணிகளுக்கு ஒரு வழிகாட்டிக் குறிப்பு மட்டுமே)
வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.