முருகனை எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடிக்கும். பழனி முருகன் பல சமயங்களில் அருள் புரிந்துள்ளார். ஆனால் நன்கு மன விசாலமடைந்து, சாயி பக்தியை வளர்த்துக்கொண்டு இருக்கும்போது ஒரு குழப்பம் வந்தது. யாமிருக்க பயமேன்? என்ற புகழ் மிக்க வாசகம் முருகனுடையது. அதே வாசகத்தை தமது அவதார வாழ்வில் ஷீரடி பாபாவும் கூறியுள்ளார். கோடானு கோடி பக்தர்களின் துயர் துடைக்கும் தெய்வமான பாபாவும் முருகனும் ஒன்றா? சிவசக்தியின் குழந்தையே சுப்பிரமணியம். அவ்வாறே பாபாவும் விளங்குவதால், அசுர சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பதால் முருக அவதாரமாக இருப்பாரோ பாபா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்த போது சில வியப்புக்குரிய விஷயங்கள் நடந்தன.
நடு இரவில், ஒரு நாள். ஒரு கடினமான தேர்வுக்குப் படித்துக் கொண்டு இருந்தபோது எனது பற்களின் ஈற்று பகுதி பலூன் போல வீங்கி வலி தாங்க முடியவில்லை. ஏதோ பாக்டீரியாக்களின் தொற்றுதலால் அது போல வருமாம். அந்த கொடுமையான தருணத்தில் என்னிடம் ஷீரடி உதி அதாவது பாபாவின் திருநீறு இல்லை. ஆனால் புகழ் பெற்ற பழனி சித்தனாதன் ஜவ்வாது விபூதி இருந்தது. பாபாவும் முருகனும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டு ஷீரடி உதியே இந்த பழனி விபூதி என்று மனதில் சொல்லிக்கொண்டேன். சிறிது விபூதியை எடுத்து பல் ஈறுகளில் வாயின் உள்ளே தடவினேன். ஜில்லென்று ஒரு உணர்வு இருந்தது. அதிசயத்தக்க விதத்தில் வலி குறைந்து படித்து விட்டு நிம்மதியாக படுத்தேன். மறுநாள் டாக்டரிடம் செல்ல வசதியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சாயி நாதரே சுப்பிரமணியம் என நம்பிக்கை ஏற்பட்டது.
இன்னொரு நாள், இணையத்தில் ஆராய்ந்து கொண்டு இருந்தபோது, ஒரு வியப்பான செய்தியைப் பார்த்தேன். சென்னையைச் சேர்ந்த சந்திர மோகன் என்ற ஷீரடி சாயி பக்தர் தமது உடம்பில் 108 அலகு குத்தி வேல் காவடியுடன் முப்பது நாட்கள் நடந்தே ஷீரடி சென்று தரிசித்துள்ளார். முப்பத்தைந்து கிலோ எடையுள்ள வேல் காவடியுடன் சென்னை முதல் ஷீரடி வரை நடந்தே சென்று தமது பக்தி சிரத்தையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் ஷீரடி சமாதி அரங்கில் உள்ளே நுழையும்போது இவரைக் கண்ட மக்கள் பக்தி சிலிர்ப்புடன் "ஸ்ரீ சாய்நாத் மகாராஜ்கி ஜெய்" என்று முழக்கமிட்டனர். சாயிநாதரும் முருகப்பெருமானும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒன்றே !
எனவேதான் பாடகர் வீரமணி அவர்களும் சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சாயிநாதனே சுப்ரமண்யம் என்று பாடுவார்.
<"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_mJ7vvkaLO3cVfdPAr4jp8u_ulOgE4xOmLABSNEQ3iUG9ByrrO4Tr8iSCo4NTuIAaxOtqFYWbOATR1DmWh8aWx-EL6jQzJR_8Z8jME0BaRxOrW_DnLTcfWSPjmaWORv8-RjLsx60uVZ4/s1600/mmmmmmmmmmmm.JPG" href="https://www.blogger.com/null" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
ஓம் சாயிமுருகா போற்றி.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.