அமெரிக்காவில் ஷீரடி சாயிபாபா - புளோரிடா மாநிலம்
காலஞ்சென்ற ராவ்ஜி என்கிற டாக்டர் கே. வி. ராகவராவ் குரு அவர்களின் தெய்வீக அகத் தூண்டுதலால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஒரு சாயி ஆலயம் அமைக்க வேண்டுமென்ற கருத்து உருப் பெற்றது. இந்த ஷீரடி சாயி புளோரிடா சென்டர் 1997 இல் அவரது சீடர்களான லூசியானாவைச் சேர்ந்த டாக்டர் ரத்னா தேவி மற்றும் டாக்டர் பூர்ண சந்திர எர்நேனி ஆகியோரால் அமைக்கப்பட்டது. இன்வர்நெஸ் (Inverness) என்ற எழில் வாய்ந்த சிறிய நகரத்தில் ஒரு பண்டக சாலையை வாடகைக்கு எடுத்து இம்மையத்தைத் துவங்கினர். இப் பகுதியில் மிகச் சில இந்தியக் குடும்பங்களே இருந்த போதிலும் பாபாவின் வழிகாட்டுதலால் திருமதி டாக்டர் ரத்னா தேவிக்கு மனதில் முன்னுணர்வு (premonition) ஏற்படவே இந்த இடத்தைத் தேர்வு செய்தார்.
பிறகு பல சாயி பக்தர்களின் பேராதரவோடு நிரந்தர இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்து நிலத்தையும் நன்கொடையாக வழங்கினார்கள். 2002 இல் சாயி மையம் இப்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. புளோரிடாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கியதால் 2004 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கி மார்ச் 25 , 2005 அன்று மூர்த்தி பிரதிஷ்டை (நிறுவுதல்) செய்யப் பட்டது. இந்த திறப்பு விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானின் பேரருள் பெற்றனர். இப்போது இந்த ஆலயம் பல பக்தர்களை ஈர்க்கும் புனித ஸ்தலமாக சிறப்புடன் விளங்கி வருகிறது.
இணைய தளம் : ஷீரடி சாயி புளோரிடா சென்டர்
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.