சாயி பக்தர்களே,
நம் எல்லோருக்கும் முன் மாதிரியாக திகழக்கூடிய திறமைசாலிகள் ஜப்பானியர்கள். ஜப்பானைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி அவர்கள் எழுதிய "வெற்றி மனோபாவம் " (கங்கை புத்தக நிலையம் வெளியீடு, 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னையில் கிடைக்கும்) என்பதாகும். மிகக் கடும் உழைப்பு, பொறுமை, சுயக்கட்டுப்பாடு என்ற நற்குணங்களே ஜப்பானை அழிவிலிருந்து மீட்டு வல்லரசாக்கியுள்ளது. பாபா விரும்பும் குணங்களும் நம்பிக்கை, பொறுமை-அர்ப்பணிப்பு (நிஷ்டா மற்றும் சபூரி ) இவைதான். ஜப்பானியருக்கும் தமிழருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை உள்ளது. அரிசிச் சாப்பாடு முதல் இக்கபெனா என்கிற பூ அலங்காரம் வரை ரசனை ஒன்றாக உள்ளது.
ஒவ்வொரு தமிழரும் ஜப்பானியரின் "கைசன்", "மொட்டைனய்" போன்ற அற்புத நிர்வாகவியல் உத்திகளைத் தெரிந்து கொண்டு வாழ்வில் பயன்படுத்த வேண்டும்.
எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறுவது அகம்பாவம்
எனக்கும் ஓரளவு தெரியும் என்று கூறுவது தன்னம்பிக்கை
எனக்குத் தெரியாதவை உலகில் நிறைய உள்ளதே, அவற்றை எப்படியாவது தெரிந்து கொண்டு வாழ்வில் ஜெயிக்க வேண்டுமே என்பது விழிப்பு நிலை. கெட்டிக்காரத்தனம்.
இவற்றை உடைய ஜப்பானியர்தான் பூகம்பத்தின் நடுவிலும் சாதனை படைத்து வருகின்றனர். இப்போது பாபாவைப் பற்றியும் தெரிந்து கொண்ட நற்பேறு பெற்றுவிட்டனர். ஆம். டோக்கியோவின் இக்கேபுகுரோ பகுதியில் அற்புத சாயி ஆலயம் அமைத்து ஒரு ஜப்பானிய பக்தர் பூஜை செய்யும் பெருமிதக் காட்சி இதோ
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.