ஷீரடி சாயிபாபாவின் பிரம்மாண்ட சிலைகள்
இந்தியா முழுவதிலும், ஏன் - உலகம் முழுவதிலும் சாயி கோயில்கள் பெருகி வருகின்றன. விஷ்வ என்றால் சமஸ்கிருதத்தில் அகண்ட, பிரம்மாண்டமான, பிரபஞ்சம் எனப் பொருள்படும். ரூபம் என்றால் வடிவம்/தோற்றம்/உருவம். மகாபாரதக் காலத்தில் அர்ஜுனன் போன்றோருக்கு தமது விஷ்வரூபத்தைக் காண்பித்தார் கிருஷ்ணர். ராம, கிருஷ்ண அவதாரமாகவும் விளங்கும் நமது பாபாவின் மிகப்பெரிய உருவச்சிலைகளை பேரன்பு கொண்ட பக்தர்கள் பல ஊர்களில் நிறுவி வருகின்றனர். இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சாயி பக்தர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். அவர்களில் ஒருவரான எல். விட்டல் ராவ் என்பவர் கிருஷ்ணா மாவட்டத்தில் 54 அடி உயர சிலையை நிறுவி உள்ளார்.
அவர் அமைத்த சாயி மஹராஜ் தேவாலயம் மசூலிபட்டினம் அல்லது மச்சிலிபட்னம் என்ற நகரில் உள்ளது. இந்த நகரம் ஹைதராபாத்திலிருந்து 347 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் பற்றிய சிறப்புக் காட்சி இதோ..
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப்பெரிய பாபா சிலை
மேலும் விவரங்களுக்கு : http://www.saimaharaj.org/
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி.