450 கோடி ரூபாயில் ஷீரடி மாநகரத் திட்டம்!
ஒரு நாளைக்கு எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட புனித யாத்திரைப் பயணிகளை வரவேற்கும் வகையில் மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (MSRDC), ரூபாய் 450 கோடி செலவில் திட்டம் வகுத்துள்ளது. இந்த திட்டம், ஷீரடியை ஒரு உலகத் தரம் வாய்ந்த புனித யாத்திரை ஸ்தலமாக மாற்ற உள்ளது.
ஷீரடியில் சாயி பாபா சமாதி மந்திரைச் சுற்றிலும் 3 கி.மீ. சுற்றளவில் உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் வியத்தகு திட்டத்தைத் தீட்டிப் பணிகளைத் தொடங்கியுள்ளது அந்த நிறுவனம். ஜெருசலேம், வாடிகன் போன்ற உலக அளவிலான ஸ்தலங்களை ஆராய்ந்து இறுதியாக வாடிகன் சிட்டி மாதிரியில் (City Development Model) ஷீரடியை மேம்படுத்த உள்ளது. அந்த நிறுவனம் ஷீரடியைச் சுற்றிலும் பத்து கி.மீ. தூரத்தில் நான்கு வழி அகலச் சுற்றுப் பாதையை அமைக்க உள்ளது.
ஏறக்குறைய அறுபதாயிரம் மக்கள் வசிக்கும் ஷீரடிக்கு சராசரியாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்- ஒரு தினத்திற்கு வருகின்றனர். எதிர்கால மக்கள் கூட்டத்தைக் கணக்கில் கொண்டு, ஒரு காலத்தில் குக்கிராமமாக இருந்த இந்த ஷீரடி, பாபாவின் அவதார மகிமையால் இனி ஒரு உலகத் தரமான மாநகரமாக ஆகப் போகின்றது. மேலும் நடைபெற உள்ள பணிகளாவன:
- மூன்று முதல் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் பக்தர்கள் தங்கும் வசதிகள்
- ஏழு முதல் 11 மாடிகள் கொண்ட பல அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள்
- ஷீரடி கோவில் வரை செல்ல 1200 மீட்டர் தூரத்தில் வானுயரப் பாதை (Skywalk) மூன்று வாசல்களுடன் மின்தூக்கி (லிப்ட்/Elevators), மின்படிக்கட்டுகள் (Escalators) போன்ற வசதிகள்
- அகமதுநகர் - மன்மாடு சாலை முதல் 1.5 கி.மீ. தூரத்தில் உலாமேடை (Promenade) வசதி. இம்மேடையில் பக்தர்களுக்குக் கழிப்பிட வசதி, மற்றும் இளைப்பாறும் வசதிகள்
இந்த தீர்க்க தரிசனம் வாய்ந்த திட்டத்தை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்க தீர்மானித்துள்ளனர். இனி ஒளிக்காட்சியினைக் கண்டு மகிழுங்கள் :
ஓம் ஸ்ரீ சாயி நாராயணாய ஓம் ஸ்ரீ சாயி நாராயணாய ஓம் ஸ்ரீ சாயி நாராயணாய
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.