Total Pageviews

Saturday, December 31, 2011

Baba in Canada

கனடாவில் ஷீரடி சாயிபாபா  


னடா நாட்டின் டொரோண்டோ மாநகரில் ஷீரடி சாயி மந்திர் (கோயில்) மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டு மேன்மேலும் பக்தர்களை ஈர்த்து வருகின்றது. இந்த மாநகரின் மார்க்கம் சாலையில் அக்டோபர் 12 , 2005 விஜயதசமி அன்று துவங்கப்பட்ட ஆலயப் பணிகள்- ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு மன நிம்மதியும், மகிழ்ச்சியும் தந்து, ஒரு நிரந்தர இடத்தில் கோயில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த கோயிலின் சிறப்பு அம்சங்களாவன:

  • பாபாவின் சேவைக்கு தம்மை அர்ப்பணித்த தன்னார்வத் தொண்டர்களின் அற்புத சேவை 
  • வாரந்தோறும், பல விழா நாட்களில், பக்தர்களுக்கு உணவளித்தல், மொழி, ஜாதி, இன, மதம், நிறம், நாடு, வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக உண்ணுதல்(Potluck)
  • காலை-மதியம்-மாலை-இரவு ஆரத்தி நிகழ்வுகள் 
  • அபிஷேகம், பல்லக்கு உற்சவம், சத்சரித்திர அகண்ட பாராயணம், பிறந்த நாள் விழாக்கள், பக்தர் அனுபவ உரைகள், பெரியவர்- குழந்தைகளின் பஜனை, ஸ்ரீ சாயி சத்ய விரத பூஜை, கணேச பூஜை, வியாழன் தோறும் சிறப்பு வழிபாடு என ஆண்டு முழுவதும் சகல விதமான நிகழ்ச்சிகள்   
  • நாள்தோறும் வெவ்வேறு நிற ஆடைகளில் பாபா காட்சி தரும் இனிமை 
கனடா சாயி மந்திரின் புதுமைத் திட்டம் !

 இந்த ஆலய அமைப்பினர், பக்தர்கள் தமது சொந்த வீடுகளிலேயே பாபாவின் பாதுகைகளை எடுத்துச் சென்று வழிபடும் பெருந்தன்மையான வாய்ப்பினை உருவாக்கித் தந்துள்ளனர். ஜொலிக்கும் வெள்ளியில் செய்யப்பட்ட இந்தக் கோயிலின் பாபா பாதங்கள், ஷீரடி சமாதியிலேயே வைத்து புனிதப்படுத்தி வரவழைக்கப் பட்டதாகும். மிகவும் தொலை தூரங்களில் நகரங்கள் உள்ள நாடான கனடாவில், இக் கோயிலுக்கு எளிதில் வரமுடியாத தூரத்தில் வசிக்கும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தங்கள் வீட்டிற்கே இப் பாதுகைகளை எடுத்துச் சென்று, மிகக் கவனத்துடன் பூஜித்து - பின் மந்திருக்குத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அனைத்து பக்தர்களுக்குமான அற்புத வாய்ப்பாக இது உள்ளது. பக்தர்களின் பாதுகை வழிபாடு முன்பதிவை அறிந்து கொள்ளவும், தினசரி சால்வை (மேலாடை) பாபாவுக்கு அளிக்க முன்பதிவை (Reservation)அறியவும்,  இணையத்தில் இரு காலண்டர்களும் (நாட்காட்டி) அளித்துள்ளனர். 

மேலும் தகவல்களுக்கு நீங்கள் பார்க்க வேண்டிய தளம் :

Baba Mandir, Canada

பாபாவின் பாதக் கமலங்களை, காலடியை/செருப்பை/காலணிகளை, தலை/சிரம் வைத்து வணங்கி, அகந்தை-தலைக்கனம்-திமிர்-கர்வம்-அகங்காரம்-ஆணவம்-சுயநலம்-மமதை என்ற குணங்களை நீக்கி விட்டு சரணடைக! ஆனந்தமாக வாழ்க!
வாழ்க வளமுடன் !!



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.