Total Pageviews

Sunday, September 18, 2011

Paatha Yaathra

சென்னை முதல் ஷீரடி வரை நடைப் பயணம்
 
        எங்கள் கிழக்குத் தஞ்சைப் பகுதியாம் மயிலாடுதுறை நகர்ப்புற வழியாக,  வருடா வருடம்  காரைக்குடி புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து எண்ணற்ற பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்தே வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் செல்வர்.  ஆண், பெண், சிறுவர், சிறுமி, இளைஞர், இளம்பெண், முதியோர் என அனைத்து வயதினரும் நம்பிக்கை, விடாமுயற்சி, பக்தி சிரத்தை, வைராக்கியத்துடன் நடந்து செல்வதை சிறு வயதில் கண்டு வியந்து இருக்கிறேன். வசதிக் குறைபாடுகளைக் கருதாமல் சென்று கொண்டே இருப்பர்.

அதைப் போல இவ்வையகத்தின் வைத்தீஸ்வரனாக பல லட்சம் மக்களின் நோய் நொடி தீர்க்கும் ஷீரடி சாயி பகவானைத் தரிசிக்க மக்கள் சென்னையிலிருந்து நடந்து செல்வது இப்போது மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 5 , 2011 அன்று  சென்னையைச் சேர்ந்த சாயி பக்தர்கள் பத்து பேர் பாத யாத்திரையாக ஷீரடி சென்றனர். சென்னை, தமிழ்நாடு முதல் ஷீரடி, மகாராஷ்டிரா வரை அவர்கள் ஆயிரத்து அறுநூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று சாயி பாபா சமாதி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஷீரடி சாயி சன்ஸ்தான் அலுவலர்கள் பொன்னாடை போர்த்தி தேங்காய் பிரசாதமாக அளித்தனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.