Total Pageviews

Thursday, September 1, 2011

Japanese Devotees @ Shirdi

ஷீரடியில் ஜப்பானிய பக்தர்கள் 

    கடந்த 27 ஆகஸ்ட் 2011 சனிக்கிழமையன்று, ஜப்பான் நாட்டிலிருந்து 52 சாயி பக்தர்கள் ஷீரடி வந்தனர். பாபாவின் அருள் வேண்டி சமாதியில் பிரார்த்தனை செய்தபின் அவர்கள் அனைவரும் சாயி பாபா மூர்த்தி பூஜை செய்தனர் (ஹிந்து கலாசார அடிப்படையில் சிலை வழிப்பட்டினை ஐடோல் (idol) என்று கூறுவதை விட 'மூர்த்தி' என்பதே மிகச் சரியான மொழி பெயர்ப்பு ஆகும். ஏன் எனில் மூர்த்தி எனப்படும் விக்கிரகத்தை முன்மாதிரி நினைவுக் குறிப்பாகக்- memory aid கொண்டு வழிபடுவதில் உளவியல், அறிவியல் ரீதியிலான அபரிமிதமானப் பலன்கள் கிடைப்பதை அனுபவத்தால் உணர முடியும். மேலும் இத்தகைய ஹிந்து கலாச்சார முறையானது உலகிலேயே மிகப்பழமையானதும், பிற நாட்டுச் சிலை வணக்க முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதும், மிகக் கூர்மையான விஞ்ஞான அடிப்படை கொண்டதும் ஆகும்). 

பிறகு, சரணங்கள் பாடி அபிஷேகமும் செய்தனர். வந்திருந்த ஜப்பான் பக்தர்கள் அனைவருக்கும் தேங்காயும், உதியும் பிரசாதமாக அளிக்கப்பட்டது. ஜப்பானில் டோக்கியோ மாநகரத்தில், அமைந்துள்ள அழகிய இக்கேபுகுரோ ஷீரடி சாயி பாபா கோயிலைப் பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ள இவ்வலைப் பூவின் மற்றொரு பதிவில் காண்க.  




  
   

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.