Total Pageviews

Wednesday, June 22, 2011

Saibaba and Language

ॐ ஓம் ओम ಓಂ ഓം ओम ਓਮ ॐ ॐ ஓம் ओम ॐ ஓம் ओम ಓಂ ഓം
சாயிபாபாவும் மொழியும் 

      மொழிப்பற்று என்பது ஆரோக்கியமானது. மொழிவெறி என்பது தீமைகளையே விளைவிக்கக் கூடியது. மொழிவெறி கூடவே கூடாது. ஏதேனும் ஒரே மொழியின் மீது மிகுதியான வெறி கொள்வதோ, அந்த மொழிதான் உயர்ந்தது - மற்றவையெல்லாம் தாழ்ந்தது என உயர்வு மனப்பான்மை கொள்வதோ அறிவுடைமை அல்ல. உண்மையான அறிவுத் தாகத்துடன் தேடினால் ஒவ்வொரு மொழியிலும் ஏதாவது நன்மை பயக்கக்கூடிய விஷயங்கள் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். வடலூர் வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமலிங்கர் "சமஸ்க்ருதம் என் தாய்மொழி-தமிழ் என் தந்தைமொழி" என்றார். இளம் சாயி பக்தர்கள் மற்றும் தமிழ் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இத்தகைய இருமொழிப் பிரியமே சிறந்தது என்பது என் கருத்து. அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்க்ருதமே தாய் என்று அமெரிக்க அறிஞர்கள் கூறுகிறார்கள். நுணுக்கமாக ஆராய்ந்தால் மனித குலம் புவியியல் ரீதியாகத்தான் பிரிவுபட்டுள்ளதை உணரலாம்.

அம்மா-மா'ஜி-மம்மி- என எம்மொழியிலும் "ம்" ஒன்றாகத்தானே உள்ளது. பல மாநிலங்களில், பல நாடுகளில் மொழிவெறி கொண்டு அலையும் மக்களால் எவ்வித லாபமும் இல்லை. மாறாக, மொழி இன வெறி இல்லாத ஆன்மீகப் பெரியோர்களால்தான் உலக நாடுகளுக்கு அதிக நன்மைகளும், ஒருமைப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த உலகத்திற்கு தமிழ்ச் சமுதாயம் அளித்த தவச் சான்றோர்கள், ஆன்மீக வழிகாட்டிகள், உன்னத உதாரண புருஷர்கள்-முன் மாதிரிகள் ஏராளம்.

அவர்கள் அனைவருமே மொழிப்பற்று, பன்மொழிப் புலமை, சமரச நோக்கு, மக்கள் தொண்டு, இவற்றுடன் அனைத்து உலக மக்களுக்கும் பொதுவாக உழைத்து, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி, ஆன்மீக அறிவுப் பொக்கிஷங்களை அள்ளித் தந்து தத்தம் ஆன்மீக அருட்பணியை அற்புதமாகச்  செய்துள்ளனர். சித்தர்கள் சூக்கும (spiritual form) வடிவில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஷீரடி சாயி பாபா தோன்றிய மராட்டிய மண்ணின் மராத்தி மொழி முதல் மாண்டரின் சீனம் (சீன ரேடியோவில் தமிழ்ப் பிரிவு பெய்ஜிங் மாநகர ஷிச்சிங்சான் பகுதியைச் சேர்ந்த சீன தமிழ் அறிஞராகிய ஒரு பெண்மணியின் தலைமையில் 1963 முதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. அப்பெண்மணியின் பெயர் சாய் ஜூன் !) வரை, சமஸ்க்ருதம் முதல் ஹிந்தி, ஆசிய ஐரோப்பிய மொழிகள் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்தந்த மொழியிலேயே பிறருக்கு பழந்தமிழ்ப் பக்திப் பாரம்பரியத்தையும் சிறப்பாக விளக்க முடியும். நமது பாபா மராத்தி, சமஸ்க்ருதம், இந்திய மொழிகள், அரபி, ஆங்கிலம் என பன்மொழியில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பல மொழி கற்போம். மன விரிவு கொள்வோம். அன்போடு பேசி உலக ஒற்றுமை உணர்வு கொள்வோம். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம். உலக மயமாவோம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

ஹிதோபதேசம்: 1.3.71: "உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம்".

ஸப்கா மாலிக் ஏக்.



Monday, June 20, 2011

VIPs visit to Shirdi - 9

ஷீரடியில் இசைக் கலைஞர் சிவமணி 

           கடந்த ஜூன் 17 , 2011 அன்று தாள மேதை திரு. ஆனந்தன் சிவமணி அவர்கள் ஷீரடியில் சாயி தரிசனம் செய்தார். பாபாவைத் தரிசித்து, துவாரகாமாயியைப் பார்த்துவிட்டு வெளியே வந்தார். சுமார் அரை மணி நேரம் ட்ரம்ஸ் கருவியை இசைத்து சங்கீத அர்ப்பணம் செய்தார். இவரது இசையால் கவரப்பட்ட மக்கள் சேர்ந்து மகிழ்ச்சியுடன் அசைந்தாடினர்.



 ஓம் ஷீரடி சாயி நடராஜா
திருவருள் வேண்டும் தா தா தா...



DIAMOND Studded Shawl

பாபாவுக்கு வைரம் பதித்த பொன்னாடை  

                கடந்த ஜூன் 12 , 2011 அன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகரைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் வைரம் பதித்த பொன்னாடையை பாபாவுக்கு அர்ப்பணித்தார். கிட்டத்தட்ட 25 .20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த பொன்னாடை 2 .5 மீட்டர் நீளம் கொண்டது. ஒன்னேகால் கிலோ சுத்தத் தங்க இழைகள் வேயப்பட்டு அமெரிக்கன் வைரங்கள் பதிக்கப்பட்ட சால்வையை பக்தர் சமர்ப்பிப்பது இதுவே முதல் தடவையாகும். ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூரிலுள்ள கலைஞர்கள் மூன்று மாதம் கடுமையாக உழைத்து சிறப்பாக இதை உருவாக்கியுள்ளனர். மதிய ஆரத்தி நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பொன்னாடை ஷீரடி சமாதி மந்திரில் பாபா சிலைக்கு சிறிது நேரம் வைக்கப்பட்டு பிறகு சமாதியின் மேல் போர்த்தப்பட்டது. பாபா தனது வேண்டுகோளை நிறைவேற்றியதன் காரணமாக, நன்றியுடன் இதை சமர்ப்பித்ததாக அந்த பக்தர் கூறினார். அந்த பக்தருக்கு சாயி சமஸ்தான் டிரஸ்ட் சார்பில் பாபாவின் சிறிய சலவைக்கல் சிலை ஒன்று பிரசாதமாக அளிக்கப்பட்டது.


சாயினாதருக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் அல்ல. இதில் பக்தரின் நன்றியும் விசுவாசமும் பற்றற்ற தன்மையும் தான் நாம் கருத வேண்டியவைகள். மேலும் இத்தகைய சமர்ப்பணங்கள் யாவும் மக்களுக்குத்தான் பயன்படுகின்றன.

ஓம் சாயி குபேரா போற்றி போற்றி.

Wednesday, June 15, 2011

Saibaba and Music

Click to viewசாயிபாபாவும் இசையும் Click to view

           ஷீரடியில் சாயி பாபா வாழ்ந்திருந்த கால கட்டத்தில் அவர் பஜனைப் பாடல்கள், வாத்திய இசை, மேள தாளங்கள் இவற்றை ரசிக்கும் இயல்போடு இருந்ததாகவும், தம் இனிய குரலில் அவ்வப்போது பாடவும் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாபாவிடம் வந்து அவர் முன்னிலையில் கச்சேரி செய்தால் நிச்சயம் ஏதாவது பணம் அளித்து உதவுவார். சென்னையிலிருந்து கூட ஒரு பஜனைக் கோஷ்டி அங்கு சென்றதாக வரலாறு உள்ளது. பாபா அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும் பணத்தை நம்பி ஒரு கூட்டமே இருந்தது. பாபா கூறியதாக ரங்கஸ்வாமி பார்த்தசாரதி அவர்கள் எழுதிய மண்ணிறங்கி வந்த தெய்வம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்கள் :

" என்னையும் என் வாழ்க்கைகளையும் என் லீலைகளையும் மனமொப்பிக் கசிந்துருகி ஒரு மனிதன் நிஜமாய் பாடிக் கொண்டேயிருந்தால் அவன் முன்னால் நான் போய்க் கொண்டே, அவனின் அனைத்து திசைகளிலும் பக்க பலமாக நானே இயங்குவேன். என் லீலைகளைப் பாடுவோருக்கு எல்லையற்ற ஆனந்தத்தையும், கிட்டவே கிட்டாத போதுமென்ற திருப்தியையும் அளித்து விடுவேன் -  இதை நம்புங்கள்".

கலை சம்பந்தப்பட்ட படைப்புகள் மற்றும் இசை ஆகியவற்றை தன்னுடைய இளைய பருவத்தில் மிக ரசித்திருக்கிறார் சாயி பாபா. பிரயாணிகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக ஊரிலிருந்த சத்திரத்துக்கு இரவு நேரங்களில் அடிக்கடி போய் காலில் சதங்கைக் கட்டிக் கொண்டு ஆடி மகிழ்ந்திருக்கிறார். பெரும்பாலும் அவர் பாடியவை கபீரால் பாடப்பட்ட பாடல்கள். நடுநடுவில் கூடியிருந்தோருக்கு விளங்காத அரேபிய, பாரசீக மொழிகளிலும் பாட்டுக்கள் விழுந்துள்ளன.

தினசரி பூஜை முறையாக, ஆரத்திப் பாடல்களும் பக்தி மணம்  கமழும் பிற பாடல்களும் மக்களால் பாடப் படுவது வழக்கம். பல மொழி வித்தகரான பாபா பக்தி மார்க்கத்தில் இசையின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். நல்ல தெய்வீக உணர்வுகளை எழுப்பி, மன ஓர்மையைத் தந்து, மனதை பண்படுத்தக் கூடியது இசை. நெஞ்சுக்கு நிம்மதி தருவது இசை.இதன் பெருமைகள் இந்திய கல்வி முறையில் போதிய அளவு பயன்படுத்தப் படவில்லை என்பது என் கருத்து. ஜப்பான் போன்ற செல்வந்த நாடுகளில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இசை கட்டாய பாடமாக ஆக்கப்பட்டிருக்கிறது. எனவே நல்ல இசை, சாயி இசை இவை எந்த மொழியிலிருந்தாலும் அர்த்தம் புரியாவிட்டாலும் கூட அதில் உள்ள நயத்தை, இனிமையை, புதுமையை, சுவையை உணர்ந்து ரசிப்பது பக்தர்களுடைய உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மையே அளிக்கும். 

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தெய்வமான பண்டரிநாதனின் புகழ் பாடும் மராட்டிய அபங்கம் (பஜனைப் பாடல்) திரு. ஷங்கர் மகாதேவன் பாடுகிறார் :



திருமதி பாம்பே ஜெயஸ்ரீ பாடிய சாயி பாபா பாடல் தெலுங்கு மொழியில், திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரு மந்திரத்தோடு துவங்கும் ஒளிக்காட்சி : 



திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் புதல்வர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் முதன் முதலில் உருவாக்கிய அற்புத ஆங்கில கீர்த்தனைகள் இதோ!





பாரத ரத்னா பீம்சென் ஜோஷி அவர்கள் பாடிய கபீர் தாசர் பாடல் 




ஓம் என்பதே இப்பிரபஞ்சத்தின் நாதம் 
ஓம் சாயி நமோ நம ஷீரடி சாயி நமோ நம
என்பது சாயி பக்தரின் இனிய கீதம் 






Tuesday, June 14, 2011

Shirdi Sai Gayathri Mantra


ஷீரடி சாயி காயத்ரி மந்திரம்


ஹிந்துக்களின் புனித மந்திரமான காயத்ரி மந்திரம் பழமையான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. காயத்ரி மந்திரத்தின் பெருமையை விளக்கி இந்தியாவில் ராம கிருஷ்ண மடம் தனி புத்தகமே வெளியிட்டுள்ளது. அது போல நம் பாபாவை துதி பாடும் ஷீரடி சாயி காயத்ரி மந்திரம் இதோ :

ஓம் ஷீரடிவாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி 
தன்னோ சாயி ப்ரசோதயாத் 


சாயி பக்தர் மனோஜ் ப்ரஸ்தி இணையத்தில் வெளியிட்டுள்ள, பிரபல ஹிந்தி பாடகி அனுராதா போட்வால் பாடிய, மிக அபூர்வமான ஒரிஜினல் புகைப் படங்கள் அடங்கிய ஒளிக் காட்சி இதோ :








 ஓம் சாயி கிருஷ்ணா