Total Pageviews

Friday, October 25, 2013

Maharashtra

http://www.tutorialspoint.com/images/clipart/build/build17.gifஸ்ரீ சாயிபாபா அவதரித்த மாநிலம்  - மஹாராஷ்டிரா 





சாயிபக்தர்களே, ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவதரித்த இந்தியாவின் மாநிலமான மஹாராஷ்டிரா பற்றிய சுவையான குறிப்புகளை இங்கு காண்போம்:

இந்த மகாராஷ்டிர மாநிலம், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ளது. இந்தியாவின் செல்வச் செழிப்பான மாநிலமும், இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமும், மூன்றாவது மிகப் பெரிய மாநிலமும் இதுவே. இந்தியாவின் நிதி மூலதனத் தலைநகரமான மும்பை- இங்குதான் உள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரமும் மும்பைதான். இம் மாநில மக்களின் மொழி மராத்தி ஆகும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆகிய தென்னிந்திய புனித நதிகள் இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்துதான் உருவாகி ஓடி, வங்காள விரிகுடா வரை சென்று கலக்கின்றன. 

இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள்:  மும்பை, புனே(கிழக்கின் ஆக்ஸ்போர்டு), நாக்பூர்(ஆரஞ்சுகளின் நகரம்), நாஷிக்(கும்பமேளா நகரம்), அவுரங்காபாத்(அஜந்தா-எல்லோரா குகைகளின் நகரம்), கோல்ஹாபூர்(கடைகள் மிகுந்த நகரம்), ஷீரடி, அமராவதி, தானே மற்றும் இன்னபிற.


View Larger Map
சென்னை முதல் ஷீரடி வரை தூரம்: ஆந்திர மாநிலம் வழியாக சற்றேறக் குறைய 1239 கிலோமீட்டர்கள்.

இம்மாநிலத்தின் முக்கிய பிரபலங்கள்: அரசர் சிவாஜி, பால கங்காதர திலகர், காந்தியின் அரசியல் ஆசான் கோபால கிருஷ்ண கோகலே, டாக்டர் அம்பேத்கர், ஞானிகளான ஞானதேவ், நாம்தேவ், ஏக்நாத், துகாராம், சமர்த்தர், கஜானன் மஹராஜ், நிவ்ருத்திநாத், சோபான், முக்தாபாய் மற்றும் பலர்.

இம்மாநிலத்தின் முக்கிய ஸ்தலங்கள்: மும்பை ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில், ஷீரடி சாயி பாபா மந்திர், எல்லோரா கைலாசநாதர் கோவில், பந்தர்பூர்(பண்டரிபுரம்) ஸ்ரீ விட்டல் கோவில், கோல்ஹாபூர் மஹாலக்ஷ்மி கோவில் மற்றும் பல.

இம்மாநிலத்தின் பிரபல உணவுகள்: வடாபாவ், பூரண போளி, கிச்சடி, பாஜி,போஹே, மிசால் பாவ், ஸ்ரீகந்த், மிட்டாய், மோதகம், ஆம்தி மற்றும் பல.

புகழ் பெற்ற கலைப்பொருட்கள்: பித்ரிவேர் நெசவுக் கலைத் துணிகள், கோல்ஹாபூர் செருப்பு மற்றும் நகைகள், நாராயண் பேத் புடவை மற்றும் பைதானி புடவை ரகங்கள்.

சுற்றுலா இடங்கள்: அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், ஷீரடி, டாதோபா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயம், கொங்கண் கடற்கரை, மாதேரன் மலை போன்றவை.
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.