Total Pageviews

Sunday, November 3, 2013

Baba's Dress

சாயிபாபாவின் டை -- தொடர்








அன்பு சாயி பக்தர்களே, இந்தத் தொடரில் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா அணிந்திருந்த உடை பற்றி விரிவாகக் காண இருக்கிறோம். "கப்தான்" அல்லது "கப்னி" உடை என்பது கணுக்கால் வரை நீண்டு முழுக் கைகளுடன் உள்ள, பொத்தான்கள் தைக்கப்பட்ட பெரிய மேலாடை ஆகும். இது அக்காலத்தில் கம்பளியினாலோ, பட்டினாலோ, பருத்தியினாலோ, அல்லது காஷ்மீர் கம்பளியினாலோ தயாரிக்கப் பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் அணியும் ஆடையாகும். பெர்ஷியா (பாரசீகம்), வெனிஸ், இந்தியா, மற்றும் சீனப் பகுதிகளில் தயாரானது கப்னி.
சாயிபாபா- பழைய படம் 
சாயிபாபா ஷீரடியில் முதன்முதலாக தென்பட்ட காலங்களில் ஒரு விளையாட்டு வீரனைப் போன்று உடையணிந்து காணப்பட்டார். மிக நீளமாக அவரது தலைமுடி பின்பக்கம் தொங்கிய நிலையில் இருந்தது. மக்கள் சண்டை, சச்சரவு இல்லாமல், "தான்" பலசாலி எனும் கர்வம் இல்லாமல், அகந்தை இல்லாமல் அன்புடனும், அடக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ வலியுறுத்தும் வகையில் பல திருவிளையாடல்களை நிகழ்த்தினார், பாபா. அந்த காலகட்டத்தில் தனது உடையையும், வாழும் முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டார். ஏழ்மைத் துறவும்- இரந்து வாழும் வாழ்க்கை உடைய பக்கீர் போன்று நீண்ட மேலங்கியான கப்னியையும், லங்கோடு எனும் இடுப்புக் கச்சையையும், தலையை முழுவதுமாக மூடிய கட்டும் அணிந்திருந்தார். சிறுவயதில் தனது குருவான மஹான் திரு.வெங்குசா (வெங்கடேசனைக் குறிக்கும் பெயர்) அவர்கள் பயன்படுத்திய அதே துணிதான் இந்த தலைப்பா கட்டு என்று நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

அமர்வதற்கு பழைய கிழிந்த சாக்குப்பை துணியையும், படுக்கையாக கிழிந்த கந்தலான சாக்குத் துணியையுமே பயன்படுத்தினார், சாயிபாபா. இந்நிலையில் கப்னி அணிந்திருந்த பாபா " ஏழ்மை அரசுரிமையைவிட நல்லது, பிரபுத்துவத்தைவிட மிக மிக நல்லது. கடவுள் எப்போதுமே ஏழைகளின் நெருங்கிய நண்பராக உள்ளார்" என்று கூறினார். இந்த காலகட்டத்தில் பாபாவின் உடைமைகளாக களிமண்ணினால் ஆன "சிலும்" என்கிற புகைபிடிக்கும் குழாயும், நீண்ட கப்னி உடையும், தலையில் அணியும்  வெண்ணிறத் துணியும், தகரக் குவளை (டம்ளர்) யும், கையில் வைத்திருக்கும் சிறு கைத்தடி (சட்கா) யும் தான் இருந்தன. சடாமுடி போல திருகி முறுக்கிய நிலையில் பாபாவின் தலைக்கட்டுத் துணி அவரது இடது காது பின்புறம் தொங்கிய நிலையில் காணப்பட்டது. எவ்வித காலணியும் அப்போது அவர் அணிந்திருக்கவில்லை. 

மேலும் பல சுவையான தகவல்களை அடுத்து வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.