சாயி பக்திச் செய்திகள்
ரூபாய். ஒன்றரை இலட்சம் மதிப்புள்ள காசுகள் ஷீரடி கிணற்றிலிருந்து கிடைத்தது !
ஷீரடியில் சாயி பாபா வாழ்ந்திருந்த காலத்தில் அவர் வழக்கமாக நீர் இறைத்த கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த கிணற்றினை சமீபத்தில் தூர் வாரி சுத்தம் செய்தனர். லெண்டி பாக் பூங்கா பகுதியில் அமைந்துள்ள இக் கிணற்றினை ஷீரடி சாயி பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது. கோவிலுக்கு நீர் வழங்கும் குளம் வற்றிவிட்டதாலும், தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கவும் இக் கிணற்றினை தூர் வார நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் நாசிக் நகரின் தர்ணா அணைக்கட்டு நீரும் சரிவர வரத்து இல்லாததால், ஷீரடிக்கு தினந்தோறும் வருகை தரும் ஆயிரங்கணக்கான பக்தர்களுக்கு குடிநீர் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இந்த கிணறை தோண்டி சுத்தம் செய்யும் பொழுது தொழிலாளர்கள் ரூபாய். ஒன்றரை இலட்சம் மதிப்புள்ள காசுகளை கண்டெடுத்தனர். இவை ரூபாய்.1, ரூ.2, ரூ.5 என பல வகைகளில் பக்தர்கள் போட்ட காசுகளாகும். இவை மட்டுமில்லாது சிறு சாயிபாபா சிலைகள், தேங்காய் போன்ற பொருட்களும் எடுக்கப் பட்டன.
இந்த கிணறு, பூக்கள் சூழ்ந்த நுழைவாயிலுக்கு நேர் எதிரே, மேற்கு மதிற்சுவர் பக்கத்தில் லெண்டி பாக் பூங்காவில் அமைந்துள்ளது. பக்தர்கள் உதவியோடு பாபாவே அந்த காலத்தில் அகழ்ந்து, உருவாக்கிய கிணறு என்பது இதன் சிறப்பாகும். இந்த கிணற்று நீரை அருந்திய சாயிபாபா இதனை பட்கி என்ற பெயரில் அழைத்தார். சுற்று வட்டாரத்தில் சுரம் மற்றும் பிற வியாதிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதாக இந்த கிணறு பிரபலம் ஆகிவிட்டது. அந்த காலங்களில் மக்கள் இக் கிணற்றிலிருந்து நீர் இறைத்த வண்ணம் இருந்தபோது தண்ணீர் சிறிது சிறிதாக வற்றிவிட்டது. ஆனால் 1983-ஆம் ஆண்டு திரு. ஏ.ஆர்.ஷிண்டே அவர்கள் இந்த கிணறை ஆழப்படுத்திய பிறகு தாராளமாக தண்ணீர் கிடைக்கத் துவங்கியது. அந்த காலத்தில் அங்கு இரண்டு கிணறுகள் இருந்தன. இந்த லெண்டி பாக் பூங்கா கிணறும், சமாதி மந்திரில் இப்போது உள்ள படிக்கட்டு அருகில் இடது புறத்தில் ஒரு கிணறும் இருந்தன. ஆனால் இன்று அந்த இன்னொரு கிணறு இல்லை.
(Courtesy: Rohit behal)
ஓம் ஜலஹிநஸ்தலே க்ஹின்னபக்தர்தாம் ஜலஸ்ரிஸ்திக்ருதே நமஹ:
குடிக்க நீரின்றி பக்தர் (திரு. நானா சாந்தோர்கர்), நீரில்லா இடத்தில் (ஹரிச்சந்திர மலைப் பகுதி) தாகத்தில் தவித்தபோது தண்ணீரை உருவாக்கி தாகம் தணித்தவரே போற்றி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.