Total Pageviews

Sunday, November 27, 2011

Services by Shirdi Saibaba Sansthan Trust

ஷீரடி சாயி சன்ஸ்தானத்தின் மருத்துவத் தொண்டுகள் 


     சாயி பாபாவுக்குப் பிடித்த மக்கள் தொண்டினை சளைக்காது ஆற்றி வருகிறது சாயி சன்ஸ்தான் அமைப்பு. இந்தியாவின் ஏழ்மைக் கோட்டிற்குக் (Below poverty line) கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்க இரு மருத்துவமனைகளை ஏற்கனவே நடத்தி வருகிறது. அவை சாயி பாபா சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் மற்றும் சாயிநாத் ஹாஸ்பிடல் என்பவை ஆகும். சுமார் இருநூறு படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனைகளை ஆண்டுக்கு 70 கோடி ரூபாய்கள் செலவில் சாயி சன்ஸ்தான் பராமரித்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக, இந்தியா முழுவதிலிருந்தும் வரும் ஏழை நோயாளிகள் முப்பத்தி ஏழாயிரம் பேர்களுக்கு மேல் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இலவச மருத்துவ சேவையை விரிவு படுத்தும் நோக்கத்தில், மேலும் ஒரு மருத்துவனையைக் கட்டத் தொடங்கியுள்ளது சாயி சன்ஸ்தான் அறக்கட்டளை. மகாராஷ்டிர மாநிலத்தின் ஷீரடியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள நந்துர்கி கிராமத்தில் 600 படுக்கைகள் கொண்ட சாயிபாபா மருத்துவமனையை, ரூபாய் 245 கோடி செலவில், மூன்று வருடங்களில் கட்டி முடிக்கத் திட்டமிட்டு பணிகளைத் துவக்கியுள்ளது. அந்த நந்துர்கி கிராம பஞ்சாயத்து அமைப்பு, இம்மருத்துவமனை அமைய 15 ஹெக்டேர்கள் நிலத்தை இலவசமாக சாயி சன்ஸ்தான் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற நல்ல எடுத்துக்காட்டுக்களை நாமும் பின்பற்றி தொண்டு புரிய உறுதி ஏற்போம்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி 





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.