Total Pageviews

Saturday, November 19, 2011

Hi-tech Spiritual Theme Park!

ஷீரடியில் உயர்-தொழில்நுட்ப ஆன்மீக தீம் பார்க் !


    சிந்தையைக் கவரும் ஷீரடியில் 4 D லேசர் தொழில்நுட்ப ஆன்மீக தீம் பார்க் என்னும் சாயி பூங்கா அமைக்க ஷீரடி சாயி சன்ஸ்தான் பணிகளைத் துவங்கி உள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் ஷீரடிக்கு வரும் எண்ணற்ற பக்தர்கள் பாபாவின் முழு வரலாறும் அறிந்துகொள்ள ஆவலுடன் வருகின்றனர். இப்போது அங்கு தீட்சித் வாடாவிற்கு அருகில் அமைந்துள்ள சாயி மியுசியம் என்கிற அருங்காட்சியகத்தில் பாபா பயன்படுத்திய பல பொருட்கள் உள்ளன. இருப்பினும் பகதர்கள் விரிவான அளவில் சாயி வரலாற்றினை அறிய உதவும் வகையில் ஒரு தீம் பார்க் அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காவில் சாயி சத் சரித்திர காட்சிகள் மல்டி-மீடியா லேசர் தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக, இந்தியாவிலேயே மிகப் பெரிய தீம் பார்க்-ஆக விளங்கும்.

ஷீரடி சாயி சமாதி கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில், 25 ஏக்கர்கள் பரப்பளவில் நிம்கவுன்-கோர்ஹலே என்கிற இடத்தில் இப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. கார்கள் நிறுத்துவதற்கு ஆறு ஏக்கர்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. ஓரிரு வருடங்களில் முடியும் இந்த திட்டம் ரூபாய் 95 கோடி செலவில் உருவாகிறது. இப்பூங்காவில் சிற்பங்கள், தியானப் பூந்தோட்டம், இன்னிசைப் பூங்கா, சத்சங்க ஆன்மீக உரை ஆற்றப்படும் இடம், ஓவியக்காட்சிக் கூடம், அரங்கம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கப் போகின்றது. இந்த பூங்காவின் சிறப்பம்சமாக ஷீரடி சாயி பாபாவின் 3D லேசர் தொழில் நுட்ப ஒளி உருவம் காட்டப்பட இருப்பது பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பான செய்தியாகும்.


ஆஸ்த்ரேலிய நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த லேசர் விஷன் நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் 5 .5 மில்லியன் டாலர் ஒப்பந்தம் இடப்பட்டு அவருக்கு பிரசாதமாக பாபா சிலையை சன்ஸ்தான் அலுவலர்கள் அளிக்கும் காட்சி 









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.