கிருஷ்ணன் கரணை ஷீரடி சாயி அறக்கட்டளையின் அருந்தொண்டுகள்
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கிருஷ்ணன் கரணை பகுதியில் அமைந்துள்ள ஷீரடி சாயி டிரஸ்ட் (SST) ஆற்றிவரும் அருந்தொண்டுகள் வியக்கத்தக்கதாக உள்ளன. இந்த அறக்கட்டளையின் குறிப்பிடத்தக்க பணிகளாவன பின்வருமாறு:-
- சாயியின் பேரருளால் இந்தியா முழுவதும் 300 ஷீரடிசாயி மந்திர்கள் (கோவில்கள்) கட்டுவதற்கு இயன்ற உதவிகள் செய்தமை
- ஆயிரங்கணக்கான பக்தர்களுக்கு ஷீரடி சாயி போட்டோ,புத்தகங்கள், ஒலிநாடா மற்றும் குறுந்தட்டுகள் போன்றவற்றை விநியோகித்தமை
- ஒவ்வொரு வருடமும் 2500 மாணவமணிகளுக்கு கல்வி உதவிகள் செய்து வருவது
- ஒவ்வொரு வருடமும் 3500 நோயாளிகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை உதவிகள் செய்து வருவது
- சுமார் 25 சாயி பாபா கோவில்கள் வழியாக 5000 பேர்களுக்கு தினமும் உணவு அளித்து வருவது
- ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்காக பள்ளிகள் மற்றும் தொண்டுகள் ஆற்ற ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்தல்
- தேவைப்படுவோருக்கு உணவு மற்றும் உடை அளித்தல்
முகவரி: | |
ஷீரடி சாயி டிரஸ்ட் (SST), | |
எண். 1 சாயி நகர், |
பட்டிபுலம் போஸ்ட், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR),
சென்னை - 603 104 , தமிழ்நாடு, இந்தியா.
மேலதிக விவரங்களுக்கு : Chennai Krishnankaranai Shirdi Sai Trust Official Website
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.