'சாயிநகர் ஷீரடி' புகை வண்டி நிலையம்
பாபாவின் வாழ்க்கையில் எண்ணற்ற பக்தர்களோடு தொடர்புடைய முக்கிய இடம்தான் கோபர்காவுன் புகை வண்டி நிலையம். மிக அமைதியாக காட்சியளிக்கும் இந்த நிலையத்தில் நாம் முதன் முதலில் காலடி எடுத்து வைக்கும்போது பாபாவைப் பார்க்க இங்கிருந்துதான் போகப் போகிறோம் என்ற உணர்வும், வரலாற்றில் எத்தனை கோடி பேர் இந்நிலையத்திலிருந்து ஷீரடி சமாதி மந்திர் சென்று இறைநிலையின் மனித அவதாரமாக விளங்கும் சாயி பாபாவின் அருள் பெற்றுச் சென்றிருப்பர் - என்ற சிந்தனையும் உங்களுக்கு வராமல் போகாது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில், கோபர்காவுன் தாலுக்கா உள்ளது. இங்கு உள்ள கோபர்காவுன் சிறுநகர ரயில்வே நிலையமே பழமையானது. ஷீரடியிலிருந்து 16 கிலோமீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ளது. ஷீரடியே கோபர்காவுன் தாலுக்காவில்தான் உள்ளது. மும்பையிலிருந்து (பாம்பே) ஏறக்குறைய 296 கி.மீ. தூரத்தில் உள்ளது ஷீரடி. பக்தர்களின் சிரமத்தைக் குறைக்க சமாதி மந்திரின் அருகிலேயே கட்டப்பட்ட புதிய புகைவண்டி நிலையமே 'சாயிநகர் ஷீரடி ரயில்வே ஸ்டேஷன்' ஆகும். கடந்த மார்ச் 2009 - முதல் இயங்கும் இந்த சாயிநகர் ஷீரடி புகைவண்டி நிலையத்தில் இறங்கும் பக்தகோடிகள் மிக விரைவாக மந்திருக்குச் சென்று விடலாம். சாயிநகர் ஷீரடி புகைவண்டி நிலையத்தின் ஒளிக்காட்சி இதோ :
(uploaded by: fiction2u, bhaweshanand)
ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி நம ஓம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.