ஷீரடியில் நூறு கோடி ரூபாய் குடிநீர் திட்டம்!
எதிர்காலத்தில் ஷீரடிக்கு வருகை தரும் பக்தர்களின் குடிநீர் தேவையை உணர்ந்து, ஷீரடி சாயி சன்ஸ்தான் அமைப்பு ரூபாய் நூறு கோடியில் திட்டத்தைத் துவங்கியுள்ளது.
கடந்த 2010 -ஆம் ஆண்டில் ஷீரடிக்கு சுமார் இரண்டரை கோடி பக்தர்கள் வருகை தந்தனர். ஆனால் வரும் 2018 -ஆம் ஆண்டு சாயி பக்தர்களுக்கு விசேஷமான ஆண்டு ஆகும். ஷீரடி சாயி பாபாவின் நூற்றாண்டு விழா 2018 -இல் தான் நடக்க உள்ளது. அந்த ஆண்டில் ஏறக்குறைய ஏழு கோடி பக்தர்கள் வருவார்களென எதிர்பார்க்கப் படுகிறது. அதற்காக இப்போதே பணிகளைத் துவங்கி விட்டது ஷீரடி சாயி சன்ஸ்தான். ஷீரடியிலிருந்து 80 கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள நில்வாண்டே அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வரவழைக்கத் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. ஷீரடி சாயி சன்ஸ்தான், மாநில அரசு, மத்திய அரசின் உதவியுடன் ஷீரடி மேம்பாட்டுக் கழகம் Shirdi Development Authority (SDA) இத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.