Total Pageviews

Wednesday, July 13, 2011

Shirdi Airport !

ஷீரடியில் விமான நிலையம் ! 

ஷீரடியில் விமான நிலையம் அமைக்க மகாராஷ்டிர மாநில அரசுக்கு ஐம்பது கோடி ரூபாய் அளிக்க ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக பதினைந்து கோடி ரூபாய் அளித்துள்ளது. மகாராஷ்டிர அரசுக்கு சொந்தமான ஏர்போர்ட் டெவலப்மென்ட் கார்பொரேஷன் லிமிடெட் நிறுவனம் முன்னூறு கோடி ரூபாய் செலவில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாத துவக்கத்தில் டெல்லியைச் சேர்ந்த சாயி பக்தரான தொழில் அதிபர் ஒருவர் ஷீரடி சாய் சன்ஸ்தான் தலைவரைச் சந்தித்து விமான நிலையம் அமைத்துத் தர விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த தொழிலதிபர் நாட்டின் பல விமான நிலையங்களை அமைத்த அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.