Total Pageviews

Tuesday, July 5, 2011

Kids and the God

ஷீரடி சாயிபாபாவும் குழந்தைகளும் 


              
              ஷீரடியில் நமது பாபா தவ வாழ்வினை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் பக்தர்கள் மீதும், ஷீரடி கிராமத்துக் குழந்தைகள் மேலும் பிரியமும் அக்கறையும் கொண்டிருந்தார். அவரை தினந்தோறும் பார்க்கவரும் பக்தர்கள் அன்புக் காணிக்கையாக தின்பண்டங்கள், பழங்கள் இவற்றை சமர்ப்பிப்பார்கள். அவற்றை மக்களுக்கே பிரசாதமாக விநியோகிப்பார் பாபா. அப்படி தன்னைக் காண வரும் கூட்டத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள், மிட்டாய்களை அளித்து மகிழ்வார் பாபா. குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொண்டாலோ, அவர்களை அடித்து துன்புறுத்தி அதட்டினாலோ பாபாவுக்குப் பிடிக்காது. தனிமையாக துவாரகாமாயி மசூதியில் மிகக் கடுந்தவம் இயற்றும் யோகியாக இருந்த நிலையிலும், குழந்தைகளிடம் மட்டும் வாய்விட்டு சிரித்து பேசி வேடிக்கையாக, மிகுந்த அன்போடு இருந்த காலகட்டம் அது. மழலையின் சிரிப்பில் கவலைகளை மறந்து இறைவனை நாம் காண முடியும். குழந்தை மனோபாவத்துடன் உயர்ந்த எண்ணங்களுடன், கள்ளச் சிந்தனைகள் இல்லாமல், எளிமையாக, பணிவாக இருந்தால் வாழ்வின் சோதனைக் கட்டங்களை எளிதாகத் தாண்ட முடியும். கடவுளின் அருளையும் பெற முடியும்.

எந்தக் கவலையையும் மறந்து கடகடவெனச் சிரிப்பது எப்படி? இப்படித்தான் !

 (Thanks to: BlackOleg)

 வயிறு வலிக்க ஆனந்தமாகச் சிரிப்பது எப்படி??........ இப்படித்தான்!
                     தனக்கு வேலை இல்லையென்று கூறி வந்த வேலை-மறுப்பு கடிதம் வந்ததைக் கண்ட தந்தை ஒருவர் மனங் கலங்காமல் தன் மகனிடம் கடிதத்தைக் கிழித்துக் காட்டுகிறார். இணையத்தில் வெளியான வேடிக்கையான வீடியோ!

(Thanks to: brubearbaby)


சிரித்து வாழ வேண்டும்  -  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே 
உழைத்து வாழ வேண்டும் -  பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே 
அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும் 
எங்கே நன்மை இருந்தபோதும் ஏற்றுக் கொள்ளும் உலகம்.

ஓம் சாயி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.