ஹெலிகாப்டரில் ஷீரடி செல்ல முடியுமா!
ஹிந்து புராண நூல்களில், பழங்காலத்தில் வரலாற்று காவிய நாயகர்கள் புஷ்பக விமானம் என்ற பறக்கும் கருவியில் அமர்ந்து சென்றதாக கூறப்பட்டுள்ளது. பல யுகங்களுக்கு முன்பே இந்தியாவில் அந்த அளவு சுபிட்சம் நிலவியிருந்ததை நாம் இதன் மூலம் உணரலாம். இவை கற்பனை என்று கூறுபவராக இருந்தாலும் உலகிலேயே அபார கற்பனைத் திறன், ஆக்க பூர்வ படைப்பாற்றல் நம் முன்னோர்களுக்குத் தான் அதிகமாக இருந்துள்ளதை உணரலாம். ஒரு சுனாமி அல்லது இயற்கைச் சீற்றம் நிலப் பகுதியையே ஒரே நாளில் மாற்றுவதைப் போல உண்மையிலேயே அந்த தொழில்நுட்பங்கள் இருந்து மறைந்தும் இருக்கலாம். உலகின் முதல் பல்கலைக் கழகங்களான தக்ஷஷீலா, நாளந்தா பல்கலைக்கழகங்களுடன், உலகிலேயே பணக்கார நாடாக செல்வ செழிப்போடு விளங்கியது இந்தியா. இதை பல அமெரிக்க அறிஞர்கள் கூறுகின்றனர்.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன யுகத்தில் இப்போது மக்கள் ஹெலிகாப்டரில் கூட ஷீரடிக்கு செல்ல முடியும் போலத் தோன்றுகிறது. இணையத்தில் வெளியாகிய விளம்பரம் இது. மும்பை-ஷீரடி-மும்பை ஏழு பயணிகள் சென்று வர விலை அதிகமில்லை ஜென்டில்மேன் - இரண்டு லட்சம் ரூபாய் தானாம்!!
வருங்காலத்தில் செலவு குறையக் கூடும் !!
சென்னையில் கூட 'இந்திரா ஏர்' என்ற ஒரு (தமிழ்ப் பெண் தொழிலதிபர் நடத்தும்) ஹெலிகாப்டர் சார்ட்டர் சர்வீஸ் உள்ளது!
"ஒரு விஷயத்தை செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தாலும் - அதைச் செய்ய முடியாது என்று நினைத்தாலும், நீங்கள் கூறுவது சரியே"
- ஹென்றி போர்டு
ஜெய் சாயி ஓம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.