Total Pageviews

Sunday, December 1, 2013

Baba's Dress- part 3

சாயிபாபாவின் டை -- பகுதி 3

கப்னி உடையில் பாபா - மிக அரிய படம்

       புத்தம்புது கப்னி உடையினை பாபா அணிந்து கொள்ளும் போதெல்லாம், ஏற்கனவே இருந்த தமது கப்னி உடைகளை பிற பக்கீர்களுக்கும், துவாரகாமாயிக்கு உதவி வேண்டி வந்துள்ள பிற சாதுக்களுக்கும் கொடுத்து விடுவார், சாயிபாபா. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பாபாவை நம்பி வந்திருந்த அனைவருக்கும், பாபா புது உடை தரிக்கும் நாள் - ஒரு சந்தோஷமான நாள் ஆகும். ஏன் என்றால் பாபா தரும் உடைக்கும், உணவுக்கும், உதவிக்கும் குறைவே இருக்காது. 1914-ஆம் ஆண்டு ஒரு நாள், துவாரகாமாயியில் பாபா உடைகளை அளித்துக் கொண்டிருந்தார்.அங்கே குழுமியிருந்த பக்தர் கூட்டத்தில் ஒருவரான திரு. நார்கே என்பவர் தம் மனதுக்குள் "எனக்கும் பாபா தனது கரங்களால் ஒரு கப்னி ஆடை தருவார்" என எண்ணினார். இவ்வாறு திரு. நார்கே எண்ணிய உடன் அதே சமயத்தில், அனைவரின் எண்ண ஓட்டமும் நன்கறிந்த சாயிபாபா அவர் பக்கம் திரும்பி "இல்லை.. நீ கப்னி உடை பெற்றுக் கொள்வதில் பக்கீருக்கு உடன்பாடு இல்லை. நான் என்ன செய்வது?" என்று கூறினார்.

சில வேலைகளில் பாபா, திரு.பாலா என்கிற முடி திருத்துபவரை கூப்பிட்டு தலை முடியினை மழித்துக் கொள்வார். தனது மீசையையும் ஒழுங்காக வெட்டிக் கொண்டு பாபா அந்த முடி திருத்துபவருக்கு கணிசமான சன்மானம் அளித்து அனுப்புவார். அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் பாபா தூய வெண்ணிற கப்னியையே உடுத்தி இருந்தார். பாபாவின் உடை முரட்டுத்  துணிவகையான 'மஞ்ஜார்பத்' துணியில் நெய்யப்பட்டு இருந்தது. இளம் வயதில் பாபா - ஆரஞ்சு அல்லது வெள்ளை நிறங்களில் உடை அணிந்து காணப்பட்டார். பிறகு ஓர் நாள் திரு. காசிராம் ஷிம்பி பச்சை நிறத்தில் கப்னியை தைத்துத் தந்தார். பிற்காலத்தில் பாபா வெண்ணிற ஆடையையே உடுத்தி வந்தார்.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.