Total Pageviews
Wednesday, December 25, 2013
Thursday, December 5, 2013
Famous Musicians' Bhajans
புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் குரலில் சாயி பஜன்கள்
புகழ்பெற்ற திரைப்பட இசைக் கலைஞர்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.கங்கை அமரன், டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம், திரு.மலைசியா வாசுதேவன், திரு.தீபன் சக்ரவர்த்தி, திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியன், திரு.டி.எல்.மகராஜன், திருமதி. பிரியதர்ஷனி, திரு.யுகேந்திரன், திரு.ஸ்ரீராம் பார்த்தசாரதி போன்றவர்களின் குரலில் அற்புத சாயி கானங்கள் கேட்டு மகிழ்ந்திட, பதிவிறக்கம் செய்திட, உங்கள் வீட்டில் சாயி பஜன் ஒலித்திட காண வேண்டிய தளம் : Shirdi Sai Trust
மேலும் பல பாடகர்களின் இனிய சாயி பஜன்கள் பதிவிறக்கம் செய்து, கேட்டு மகிழ்ந்திட பார்க்க வேண்டிய தளம் : Saibaba Bhajans
Baba's Dress- part 4
சாயிபாபாவின் உடை -- பகுதி 4
ஏழ்மை நிலையில் பக்கிரியாக, துறவு நிலையில் தனக்கென எதுவும் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றே நினைத்து- எளிமையாக வாழ்ந்த பாபாவின் உடையும் எளிமையான கப்னி (Kafni) உடைதான். ஷீரடியின் துவாரகாமாயியில் ஒரு மூலையில் பல கப்னி உடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். சாயிபாபா அவ்வளவு சுலபமாக புத்தம் புது உடையைப் பயன்படுத்திவிட மாட்டார். துவாரகாமாயியில் ஒரு பக்கம் அமர்ந்து கிழிந்துபோன தமது கப்னியை தைத்துக் கொண்டு இருப்பார். அதைக் காணும் அன்புச் சிறுவன் தத்யா, (பயஜாபாய் அம்மையாரின் தவப் புதல்வர் இவர். பாபாவை அன்போடு "மாமா" என்று அழைத்த பாக்கியசாலி. தனக்கு அன்னமிட்ட பயஜாபாய் அம்மையாரின் மகனான தத்யாவை தனது சகோதரி மகனாகவே கருதி பேரன்பு கொண்டிருந்தார் சாயிபாபா) குறும்புகள் செய்யும் சுட்டிச் சிறுவன்.
அந்தச் சிறுவன் தத்யா, பாபாவைப் புது உடை அணிந்து கொள்ளுமாறு தொந்தரவு செய்வான். இதைப் பொருட்படுத்தாமல் பாபா தாம் இன்னொரு நாள் அணிந்து கொள்வதாகக் கூறி வழக்கம்போல் ஆடைகளைத் தைத்துக் கொண்டு இருப்பார். இது போலவே நாட்கள் ஓடி விடும். இது கண்டு பொறுத்துக் கொள்ளாமல் பாபா மேல் பாசம் கொண்ட சிறுவன் தத்யா தனது விரல்களால், கப்னியில் உள்ள ஓட்டைகளில் நுழைத்து மேலும் பெரிதாக, அகலமாகக் கிழித்து வைத்து விடுவார். தத்யாவின் இந்த குறும்புச் செய்கையினால் பாபாவினால் அந்த உடையினை அணிந்துகொள்ள முடியாமல் போகும். வேறுவழியின்றி பாபா புது உடை அணிய வேண்டி இருக்கும்.
கப்னி உடைகளைத் தமது பக்தர்களுக்குக் கொடுக்கும் போது பாபா- தான் யாருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறாரோ, அவருக்குத்தான் கொடுப்பார். பலர் இந்த ஆடை வேண்டி பல நாள் எண்ணி எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களுக்குக் கிடைக்காது. தவச் சக்தி மிகுந்த இறை அவதாரமாம் பாபாவின் உடையைப் பெற்றுக் கொள்ளும் பெரும்பேறு, அந்தத் தகுதியை தம் இயல்பிலேயே உடையவர்களுக்கும், அல்லது அந்தத் தகுதியை வளர்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கும், சரியான மனோபக்குவம், ஆன்மீக விருப்பம், முன்னோர் செய்த தவப்பயன், மிகுதியான பக்தி மற்றும் அகங்காரமற்ற நிலை, உண்மை அன்பு - இவை உடையோர்களுக்கே கிடைத்திருக்கும் என்று கூறலாம்.
அவ்வாறு பாபாவிடம் இருந்து நேரடியாக அவரின் உடையைப் பிரசாதமாகப் (அன்புப் பரிசு) பெற்ற பாக்கியசாலிகள் - திரு.பலராம் மான்கர், திரு.உதவேஷ் புவா, திரு. காக்கா தீக்ஷித், திரு.தத்யாசாஹிப் நூல்கர் மற்றும் டாக்டர். கேஷவ் பகவந்த் கவான்கர் போன்ற வெகு சிலரே ஆவர்.
(தொடரும்)
Sunday, December 1, 2013
Miracle
ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களின் அதிசய அனுபவம்
நம்பிக்கை, பொறுமை, விசுவாசம் இவை உடைய பக்தர்களுக்கு இன்றைய நவீன காலகட்டத்திலும் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன! ராமர் கதை எங்கெல்லாம் கூறப்படுகிறதோ, அங்கெல்லாம் ஏதோ ஒரு உருவில் ஸ்ரீ ஆஞ்சநேயர் வந்து உட்கார்ந்து விடுவார் என்பது காலம் காலமாக தெய்வ பக்தி மிகுந்த பக்தர்களின் நம்பிக்கை ஆகும். கடந்த 2011 ஆம் வருட காலகட்டத்தில் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் நகரில் (ரத்ன புரி) ஸ்ரீ அனுமார் உபாசகர்கள் கூடி ராமர் கதையினை உபன்யாசம் (ஆன்மீக சொற்பொழிவு) செய்து கொண்டு இருக்கையில், எங்கிருந்தோ ஒரு குரங்கு வந்து தபேலா இசைக் கலைஞர் உட்பட, பண்டிதர்களை ஆசீர்வதித்து பின் பிரசாதமும் சாப்பிட்டுவிட்டு சென்ற அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹரே ராம ஹரே ராம சாயி ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண சாயி கிருஷ்ண ஹரே ஹரே
(Youtube upload by : IshwarDas, Photo Courtesy: www.godwallpaper.in)
Baba's Dress- part 3
சாயிபாபாவின் உடை -- பகுதி 3
கப்னி உடையில் பாபா - மிக அரிய படம் |
புத்தம்புது கப்னி உடையினை பாபா அணிந்து கொள்ளும் போதெல்லாம், ஏற்கனவே இருந்த தமது கப்னி உடைகளை பிற பக்கீர்களுக்கும், துவாரகாமாயிக்கு உதவி வேண்டி வந்துள்ள பிற சாதுக்களுக்கும் கொடுத்து விடுவார், சாயிபாபா. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பாபாவை நம்பி வந்திருந்த அனைவருக்கும், பாபா புது உடை தரிக்கும் நாள் - ஒரு சந்தோஷமான நாள் ஆகும். ஏன் என்றால் பாபா தரும் உடைக்கும், உணவுக்கும், உதவிக்கும் குறைவே இருக்காது. 1914-ஆம் ஆண்டு ஒரு நாள், துவாரகாமாயியில் பாபா உடைகளை அளித்துக் கொண்டிருந்தார்.அங்கே குழுமியிருந்த பக்தர் கூட்டத்தில் ஒருவரான திரு. நார்கே என்பவர் தம் மனதுக்குள் "எனக்கும் பாபா தனது கரங்களால் ஒரு கப்னி ஆடை தருவார்" என எண்ணினார். இவ்வாறு திரு. நார்கே எண்ணிய உடன் அதே சமயத்தில், அனைவரின் எண்ண ஓட்டமும் நன்கறிந்த சாயிபாபா அவர் பக்கம் திரும்பி "இல்லை.. நீ கப்னி உடை பெற்றுக் கொள்வதில் பக்கீருக்கு உடன்பாடு இல்லை. நான் என்ன செய்வது?" என்று கூறினார்.
சில வேலைகளில் பாபா, திரு.பாலா என்கிற முடி திருத்துபவரை கூப்பிட்டு தலை முடியினை மழித்துக் கொள்வார். தனது மீசையையும் ஒழுங்காக வெட்டிக் கொண்டு பாபா அந்த முடி திருத்துபவருக்கு கணிசமான சன்மானம் அளித்து அனுப்புவார். அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் பாபா தூய வெண்ணிற கப்னியையே உடுத்தி இருந்தார். பாபாவின் உடை முரட்டுத் துணிவகையான 'மஞ்ஜார்பத்' துணியில் நெய்யப்பட்டு இருந்தது. இளம் வயதில் பாபா - ஆரஞ்சு அல்லது வெள்ளை நிறங்களில் உடை அணிந்து காணப்பட்டார். பிறகு ஓர் நாள் திரு. காசிராம் ஷிம்பி பச்சை நிறத்தில் கப்னியை தைத்துத் தந்தார். பிற்காலத்தில் பாபா வெண்ணிற ஆடையையே உடுத்தி வந்தார்.
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)