லெண்டி பாக் எனப்படும் அழகிய பூந்தோட்டம், ஷீரடியில் பாபாவின் உழைப்பினால் உருவான ஒன்றாகும். இப்பூந்தோட்டம் '
குருஸ்தான்' என்கிற புனித இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. புதர்ச்செடிகளும், குத்துச் செடிகளும் சூழ்ந்த இவ்விடத்தில்தான் பாபா உலாவுவது வழக்கம். அந்தக் காலத்தில் இங்கு ஓடிய கால்வாயின் பெயரால் இப்பூந்தோட்டத்தின் பெயர் '
லெண்டி' என ஏற்பட்டது. காலை மற்றும் நண்பகல் வேளையிலே இங்கு இருக்கும் வேப்ப மரத்தடியில்தான் சாயி பாபா இளைப்பாறுவது வழக்கம். இந்த வேப்ப மரத்தடியில் சிறு குழிதோண்டி பாபா மண்விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம். அதன் நினைவாக இப்போது இங்கு '
நந்தாதீப்' எனும் விளக்கினை தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள். '
தீப்க்ரிஹா' என்கிற மார்பிள் கல்லால் ஆன எண்கோண வடிவ விளக்கு மாடத்தினுள் ஓர் கண்ணாடி பெட்டிக்குள் நந்தாதீப் விளக்கு அணையாமல் இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது. அரச மரம் அல்லது போதி மரத்துக்கும் - வேப்பமரத்துக்கும் இடையில்தான் நந்தாதீப் விளக்கு எரிந்துகொண்டு உள்ளது. இந்தப் பூந்தோட்டத்தை எப்போதும் பார்வையிடலாம் என்றாலும், ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஷீரடியின் தட்பவெப்ப நிலை இனிமையாக இருக்கும். ஷீரடி- மன்மாடு மாநில நெடுஞ்சாலை அருகே லெண்டி பூந்தோட்டம் அமைந்துள்ளது.
Photo Courtesy: Doshi ashutosh, saileelas.org
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.