சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
International Red Cross & Red Crescent Movement
உலகின் மிகப் பெரிய சுதந்திரமான, இலாபநோக்கற்ற மனிதாபிமான அமைப்பு- சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை இயக்கம். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நோக்கம்- இவ்வுலகத்தின் மனித சமுதாயம் படும் துன்பங்களைக் குறைக்கவும், துன்பங்களை தடுக்கவும் உதவுவதே ஆகும். தனது பல்லாயிரங்கணக்கான தொண்டர்களின் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சேவை செய்தலும், தொண்டுகளை ஊக்குவித்தலும் இச் சங்கத்தின் செயல்பாடுகளாம். இத்தகைய மக்கள் தொண்டின் மூலம் உலக சமாதானத்திற்கு உகந்த சூழலை உருவாக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்து உள்ளது.
இந்திய செஞ்சிலுவை சங்கம், ஓர் தன்னார்வ மனிதாபிமான தொண்டு நிறுவனமாகும். இது பேரியக்கமான சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் உறுப்பினராக உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 700 கிளைகளைக் கொண்டுள்ள இந்திய செஞ்சிலுவை சங்கமானது இயற்கைப் பேரழிவுகள், அவசர காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பேணிக் காக்கும் அரும்பணிகளையும் செய்து வருகிறது. இந்திய செஞ்சிலுவை சங்கமானது (IRCS) இந்திய செஞ்சிலுவைச் சங்க சட்டத்தின் கீழ் 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1920-பாராளுமன்ற சட்டம் XV-இன் கீழ் இணைக்கப்பட்டது ஆகும்.
அதிமேதகு இந்திய ஜனாதிபதி அவர்களே இச் சங்கத்தின் தலைவராகவும், மாண்புமிகு மத்திய சுகாதார அமைச்சர் சங்கத்தின் அவைத் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச் சங்கத்தின் தொண்டுகளாவன :
- மனிதாபிமான விழுமியங்களை மக்களிடையே ஊக்குவிப்பது
- இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தக்க சமயத்தில் உதவுவது
- பேரழிவு தயார்நிலை நடவடிக்கைகள் - இயற்கைச் சீற்றங்கள் வந்தால் அவற்றின் மூலம் வரும் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வும், அந்த பாதிப்புகளைக் குறைத்தலும், சமாளிப்பதும்
- சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புப் பணிகள்
- திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள்
- மருத்துவமனைச் சேவைகள், இரத்த வங்கி, எச்.ஐ. வி / எய்ட்ஸ் பற்றிய திட்டங்கள், தொழில் பயிற்சி மையங்கள், மகப்பேறு-குழந்தை-மற்றும் குடும்ப நலத்திட்டங்கள்,
- தொற்று நோய்கள், தீ, ரயில் மற்றும் பிற விபத்துக்கள் மற்றும் நிகழ்வுகளில் நிவாரண நடவடிக்கைகள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.