மிக உயரமான பாபாவின் சிற்பம் !
Photo by: Ravikiran
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடா பகுதி - ரெப்பூரில் 116 அடி உயரத்தில் ஷீரடி சாயி பாபா சிற்பம் அமைத்துள்ளனர். இது பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக, வியப்பைத் தருவதாக உள்ளது. ஷீரடி சாயி பக்தி அதிகமாக உள்ள சில மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. அங்கு இது போன்ற சாயி சிற்பங்களும், கோவில்களும் பெருகி வருகின்றன. சிமெண்டால் செய்யப்பட்ட இந்த சிற்பம் 2012 டிசெம்பர் மாதம் நவராத்திரி மஹோத்சவத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. 1000 டன்களுக்கு மேல் எடையுள்ளது. ரெப்பூர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா சேவாஷ்ரமத்தின் கோவிலில் இந்த சிற்ப வேலைப்பாட்டினை நிர்வகித்தவர் - திரு. அம்முலா சாம்பஷிவ ராவ் அவர்கள்.
சுமார் இரண்டரை கோடி செலவில், கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு பழுதாகாமல் இருக்கக்கூடிய இந்த சிற்பத்தைச் செய்து முடிக்க 11 வருடங்களாகியது. சாயி பக்தியின் முக்கிய அம்சங்களான நம்பிக்கை, பொறுமை மற்றும் விடாமுயற்சி போன்றவற்றை வெளிப்படுத்துவதாக இந்த சிற்ப வேலைப்பாடு அமைந்துள்ளது. இதை நேரில் கண்டு மகிழும் பக்தர்களும் பெரிய அளவில் சிந்தனை, நம்பிக்கை, விசுவாசம், அதிக ஊக்கம், பொறுமை, பக்தி சிரத்தை இவற்றை வளர்த்துக்கொள்ள இயலும் என்பதில் ஐயமில்லை.
Uploaded in Youtube by: n_sudha
சாயி ஓம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.