Total Pageviews

Sunday, November 27, 2011

Services by Shirdi Saibaba Sansthan Trust

ஷீரடி சாயி சன்ஸ்தானத்தின் மருத்துவத் தொண்டுகள் 


     சாயி பாபாவுக்குப் பிடித்த மக்கள் தொண்டினை சளைக்காது ஆற்றி வருகிறது சாயி சன்ஸ்தான் அமைப்பு. இந்தியாவின் ஏழ்மைக் கோட்டிற்குக் (Below poverty line) கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்க இரு மருத்துவமனைகளை ஏற்கனவே நடத்தி வருகிறது. அவை சாயி பாபா சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் மற்றும் சாயிநாத் ஹாஸ்பிடல் என்பவை ஆகும். சுமார் இருநூறு படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனைகளை ஆண்டுக்கு 70 கோடி ரூபாய்கள் செலவில் சாயி சன்ஸ்தான் பராமரித்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக, இந்தியா முழுவதிலிருந்தும் வரும் ஏழை நோயாளிகள் முப்பத்தி ஏழாயிரம் பேர்களுக்கு மேல் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இலவச மருத்துவ சேவையை விரிவு படுத்தும் நோக்கத்தில், மேலும் ஒரு மருத்துவனையைக் கட்டத் தொடங்கியுள்ளது சாயி சன்ஸ்தான் அறக்கட்டளை. மகாராஷ்டிர மாநிலத்தின் ஷீரடியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள நந்துர்கி கிராமத்தில் 600 படுக்கைகள் கொண்ட சாயிபாபா மருத்துவமனையை, ரூபாய் 245 கோடி செலவில், மூன்று வருடங்களில் கட்டி முடிக்கத் திட்டமிட்டு பணிகளைத் துவக்கியுள்ளது. அந்த நந்துர்கி கிராம பஞ்சாயத்து அமைப்பு, இம்மருத்துவமனை அமைய 15 ஹெக்டேர்கள் நிலத்தை இலவசமாக சாயி சன்ஸ்தான் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற நல்ல எடுத்துக்காட்டுக்களை நாமும் பின்பற்றி தொண்டு புரிய உறுதி ஏற்போம்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி 





English Bhajan

ஆங்கிலத்தில் சாயி பஜனைப் பாடல்!


பாடல்: இட்ஸ் தேர்ஸ்டே நைட்
பாடியவர்: சக்சேனா பந்து
இசைத் தொகுப்பின் பெயர்: சாயி ஸ்பர்ஷ்
இணையத்தில் வெளியிட்டவர்: TheBunish



சாயி ஓம்.

Saturday, November 19, 2011

Hi-tech Spiritual Theme Park!

ஷீரடியில் உயர்-தொழில்நுட்ப ஆன்மீக தீம் பார்க் !


    சிந்தையைக் கவரும் ஷீரடியில் 4 D லேசர் தொழில்நுட்ப ஆன்மீக தீம் பார்க் என்னும் சாயி பூங்கா அமைக்க ஷீரடி சாயி சன்ஸ்தான் பணிகளைத் துவங்கி உள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் ஷீரடிக்கு வரும் எண்ணற்ற பக்தர்கள் பாபாவின் முழு வரலாறும் அறிந்துகொள்ள ஆவலுடன் வருகின்றனர். இப்போது அங்கு தீட்சித் வாடாவிற்கு அருகில் அமைந்துள்ள சாயி மியுசியம் என்கிற அருங்காட்சியகத்தில் பாபா பயன்படுத்திய பல பொருட்கள் உள்ளன. இருப்பினும் பகதர்கள் விரிவான அளவில் சாயி வரலாற்றினை அறிய உதவும் வகையில் ஒரு தீம் பார்க் அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காவில் சாயி சத் சரித்திர காட்சிகள் மல்டி-மீடியா லேசர் தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக, இந்தியாவிலேயே மிகப் பெரிய தீம் பார்க்-ஆக விளங்கும்.

ஷீரடி சாயி சமாதி கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில், 25 ஏக்கர்கள் பரப்பளவில் நிம்கவுன்-கோர்ஹலே என்கிற இடத்தில் இப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. கார்கள் நிறுத்துவதற்கு ஆறு ஏக்கர்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. ஓரிரு வருடங்களில் முடியும் இந்த திட்டம் ரூபாய் 95 கோடி செலவில் உருவாகிறது. இப்பூங்காவில் சிற்பங்கள், தியானப் பூந்தோட்டம், இன்னிசைப் பூங்கா, சத்சங்க ஆன்மீக உரை ஆற்றப்படும் இடம், ஓவியக்காட்சிக் கூடம், அரங்கம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கப் போகின்றது. இந்த பூங்காவின் சிறப்பம்சமாக ஷீரடி சாயி பாபாவின் 3D லேசர் தொழில் நுட்ப ஒளி உருவம் காட்டப்பட இருப்பது பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பான செய்தியாகும்.


ஆஸ்த்ரேலிய நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த லேசர் விஷன் நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் 5 .5 மில்லியன் டாலர் ஒப்பந்தம் இடப்பட்டு அவருக்கு பிரசாதமாக பாபா சிலையை சன்ஸ்தான் அலுவலர்கள் அளிக்கும் காட்சி 









Baba Darshan by Helicopter - 2

ஷீரடி செல்ல ஹெலிகாப்டர் சேவைகள் !


 மும்பை - ஷீரடி- மும்பை என பக்தர்கள் பாம்பே ஜுஹு ஏரோட்ரோமில் தொடங்கி (வாரம் மூன்று முறை) ஷீரடி சென்று திரும்ப ஹெலிகாப்டர் வசதியினை மற்றுமொரு நிறுவனம் தொடங்கி உள்ளது. மும்பையிலிருந்து ஒரு மணி நேரத்தில் ஷீரடி செல்லலாம். இவ் வலைப்பூவின் ஜூலை வெளியீட்டில் இன்னொரு நிறுவனத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த நிறுவனத்தின் தகவல் பெற கீழ்கண்ட வலைத் தளத்துக்குச் செல்லுங்கள்.

http://www.airnetz.com/airnetz/heli_pack.html

 இந்த நிறுவனம் தமது சேவை பற்றி விரிவான பட்டியலை கீழ்க்கண்ட முகவரியில் அளித்துள்ளது.
http://uhpl.in/new/?p=167


சாயி ஓம்.

VIPs Visit to Shirdi - 10

கடந்த ஜூன் 2 , 2011 அன்று ஷீரடியில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஜாகிர் கான் தரிசனம் செய்தார் 



ஜூலை 6 , 2011 அன்று பிரபல திரைப்படப் பாடகர் சுக்வீந்தர் சிங் ஷீரடியில் தரிசனம் செய்யும் காட்சி 





Sunday, November 13, 2011

Lyrics 3

சாயி பாட்டு புஸ்தகம்

                                                                                  
                                                                       சிவ சிவ சாயி 
3.
இசைத் தொகுப்பின் பெயர் :  ஓம் சாயி ராம்                              
இசை வெளியீட்டு வருடம் : 1998
பாடியவர்                                       :  வீரமணி கண்ணன்  
கவிஞர்                                           : வி.ஸ்ரீராம் ஷர்மா
இசை அமைப்பாளர்                 :  வீரமணி கண்ணன்
பாடலின் தலைப்பு                   :  போலோ சாயிராம்... 
இணையத்தில் வெளியிட்டோர் : www.raaga.com 

போலோ சாயிமஹராஜ்கீ...
ஜெய் .... (குழுவினர்)
போலோ சாயிமஹராஜ்கீ...
ஜெய் .... (குழுவினர்)
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் 
போலோ சாயிமஹராஜ்கீ...
ஜெய் .... (குழுவினர்)
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம்   
ஷீரடி சாயி துவாரகமாயி ஹரி நாராயண ராம்  
ஷீரடி சாயி துவாரகமாயி ஹரி நாராயண ராம்  (குழுவினர்)

போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)
சாயிராம்..

அகண்ட வானத்தின் ரகசியம் சாயிராம்..  ஆழ்கடலின் மௌனம் சாயிராம்
மிதந்து தழுவும் தென்றலும் சாயிராம்..மோதி வெகுண்டு எழும் புயலும் சாயிராம்..
சகலம் சாயிராம்..சத்தியம் சாயிராம்.. பகலும் இரவுமாய் சுழல்வது சாயிராம் 

போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)

நினைப்பதும் சாயிராம் நிகழ்வதும் சாயிராம்...
உருகிடும் நெஞ்சத்தில் உறைவது சாயிராம்........
கனவிலும் சாயிராம் நினைவிலும் சாயிராம்..
கதியின்றி நிற்போர்க்கு தாயின் மடி சாயிராம்..
அற்புதம் சாயிராம்..அதிசயம் சாயிராம்..
அங்கிங்கெனாதபடி எங்கெனும் சாயிராம்..

போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம்
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)
 
ஷீரடி சாயி துவாரகமாயி ஹரி நாராயண ராம்  
ஷீரடி சாயி துவாரகமாயி ஹரி நாராயண ராம்  (குழுவினர்)

போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம்
போலோ சாயிராம் போலோ சாயிராம் போலோ போலோ போலோ போலோ சாயிராம் 
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)
போலோ சாயிராமு போலோ சத்யராமு
போலோ ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் (குழுவினர்)
 ஸ்ரீ சாயி ராம் ...           ஸ்ரீ சாயி ராம் ...               ஸ்ரீ சாயி ராம் ...
ஸ்ரீ ஷிர்டி சாயி ராம் ......(குழுவினர்)

(போலோ என்றால் ஹிந்தியில் -- 'சொல்லுங்கள்' என்று அர்த்தமாகும் )


  (குறிப்பு: கீழே தரப்பட்டுள்ள கருவியின் ஒலி அளவை [volume] உங்கள் விருப்பம் போல் குறைத்து வைத்தபின்பே பாடலைக் கேட்கத் தொடங்கவும்)

Tuesday, November 8, 2011

Sai Vinayakar

சாயி விநாயகர்!
 முழு முதற் கடவுளாம் சாயி விநாயகர் அருளால் உலகம் எங்கும் சுபிட்சமும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவ உணர்வும் உண்டாகட்டும்.