This is a blog in Tamil for the devotees of Shirdi Sai baba of India,an avatar of God divine almighty with the purpose of spreading the message "Service to humanity is Service to God"-Makkal thondae Mahesan thondu.
நூல் மதிப்புரை - 4 சாயி பக்திச் செல்வர்களே, சாயி பக்தி மார்க்கத்தில் தமிழில் வெளியிடப்பட்டு வரும் பல்வேறு புத்தகங்களை பற்றி இந்த தொடர் கட்டுரைகளில் பார்த்து வருகிறோம். இந்த கட்டுரையில் ஒரு மிக மிக முக்கியமான நூலைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
நூலின் பெயர்: ஸ்ரீ சாயி பிரஷ்னோத்தரி ஆசிரியர்: டா. வீணா சாவ்லா விலை: இந்திய ரூபாய்: 75 (சில வருடங்களுக்கு முந்தைய விலை. பிரச்சார வளர்ச்சியில் விநியோகிக்கும் நபர்களுக்கு இந்த புத்தகம் மிகக் குறைந்த விலையில் பெயர் பதிக்கப்பட்டு கொடுக்கப் படுமென்று அறிவித்துள்ளனர்) வெளியீட்டாளர்: பூஜா பிரகாஷன்(ஸதார் பஜார் இரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக), பூல் குதூப் ரோடு, ஸதர் பஜார், தில்லி - 110006, இந்தியா. இணைய தளம்: poojaprakashan.காம் இந்நூலின் சிறப்பம்சங்கள்:
சாயி மார்க்கத்தில் பல நூறு புத்தகங்கள் இருப்பினும், ஒரு சில புத்தகங்கள் தான் ஒரு சாயி பக்தர் எவ்வாறு வாழ வேண்டும் என்று எளிமையாக சொல்லிக் கொடுக்கும். அந்த அரிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
குறிப்பாக சாயி பக்தி உள்ள இளைஞர்-இளம்பெண்கள் அவசியம் வீட்டில் வைத்து இருக்க வேண்டிய நூல். வாழ்வில் முன்னேற, நன்னம்பிக்கை பெற, குழப்பம் நீங்கி தெளிவு பெற வழிகாட்டும் அற்புத நூல்.
உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள் அறிய உதவும் நூல்.
சாயி பக்தர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
அழகிய அட்டைப் படம், கையடக்கமாக, அனைவரும் வாங்கும் விலையில், தரமாக தில்லியில் இருந்து வெளிவரும் தமிழ் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பர்கள் பிற சாயி பக்தர்களுக்கு சிறந்த பரிசாக அளித்து மகிழத்தக்க நூல்.