Total Pageviews

Monday, February 5, 2018

Book Review -4

நூல் மதிப்புரை - 4

சாயி பக்திச் செல்வர்களே, சாயி பக்தி மார்க்கத்தில் தமிழில் வெளியிடப்பட்டு வரும் பல்வேறு புத்தகங்களை பற்றி இந்த தொடர் கட்டுரைகளில் பார்த்து வருகிறோம். இந்த கட்டுரையில் ஒரு மிக மிக முக்கியமான நூலைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 



நூலின் பெயர்: ஸ்ரீ சாயி பிரஷ்னோத்தரி 
ஆசிரியர்: டா. வீணா சாவ்லா 
விலை: இந்திய ரூபாய்: 75 (சில வருடங்களுக்கு முந்தைய விலை. பிரச்சார வளர்ச்சியில் விநியோகிக்கும் நபர்களுக்கு இந்த புத்தகம் மிகக் குறைந்த விலையில் பெயர் பதிக்கப்பட்டு கொடுக்கப் படுமென்று அறிவித்துள்ளனர்)
வெளியீட்டாளர்: பூஜா பிரகாஷன்(ஸதார் பஜார் இரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக), பூல் குதூப் ரோடு, ஸதர் பஜார், தில்லி - 110006, இந்தியா.
இணைய தளம்: poojaprakashan.காம் 

இந்நூலின் சிறப்பம்சங்கள்: 
  • சாயி மார்க்கத்தில் பல நூறு புத்தகங்கள் இருப்பினும், ஒரு சில புத்தகங்கள் தான் ஒரு சாயி பக்தர் எவ்வாறு வாழ வேண்டும் என்று எளிமையாக சொல்லிக் கொடுக்கும். அந்த அரிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
  • குறிப்பாக சாயி பக்தி உள்ள இளைஞர்-இளம்பெண்கள் அவசியம் வீட்டில் வைத்து இருக்க வேண்டிய நூல். வாழ்வில் முன்னேற, நன்னம்பிக்கை பெற, குழப்பம் நீங்கி தெளிவு பெற வழிகாட்டும் அற்புத நூல்.
  • உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள் அறிய உதவும் நூல்.
  • சாயி பக்தர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
  • அழகிய அட்டைப் படம், கையடக்கமாக, அனைவரும் வாங்கும் விலையில், தரமாக தில்லியில் இருந்து வெளிவரும் தமிழ் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அன்பர்கள் பிற சாயி பக்தர்களுக்கு சிறந்த பரிசாக அளித்து மகிழத்தக்க நூல்.
சாயி சாயி சாயி சாயி சாயி சாயி சாயி சாயி சாயி  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.