This is a blog in Tamil for the devotees of Shirdi Sai baba of India,an avatar of God divine almighty with the purpose of spreading the message "Service to humanity is Service to God"-Makkal thondae Mahesan thondu.
இந்த ஒளிக்காட்சித் தொகுப்பில் உலகிலேயே முதன் முதலில் உருவானபிவ்புரி ஷீரடி சாயிபாபா கோயிலைப் பற்றிப் பார்த்து மகிழலாம். அரிதான இந்த தகவலை வெளியிட்டோர் - சாயி கே துவார் யூடுப் சேனல். சாயி பக்தர்கள் இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்தும், பிற அன்பர்களுக்கு தெரிவித்தும் பயன்பெறலாம். பல மொழி பக்தர்கள் பயன்பெறும் வகையில் ஆங்கில சப் டைட்டில்கள் -உடன் வெளியிட்டுள்ளனர். 1916 இல் பாபா மனித உருவில் தன் உடலுடன் உயிரோடு இருந்த போதே உருவாக்கப்பட்டது இக் கோயில்.
இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தின் பிவ்புரி கிராமத்தில் வசித்து வந்த திரு. கேசவராவ் ராமச்சந்திர ப்ரதான் அவர்கள் தனக்கு நிகழ்ந்த ஒரு அற்புத நிகழ்விற்கு பிறகு பாபாவின் பக்தராகினார். தான் ஷீரடிக்கு செல்லும்போதெல்லாம் பாபாவை தனது பிவ்புரி வீட்டுக்கு மீண்டும் மீண்டும் ப்ரதான் அழைக்கவே, ஷீரடியை விட்டுச் செல்லாத பாபா ஒரு சிறிய களிமண் உருவச்சிலையை அன்பளிப்பாக அளித்து பிவ்புரியில் ப்ரதான்அவர்களின் வீட்டுக்கு அருகேஒரு கோயிலைக் கட்டச் சொன்னார். அதில் அச்சிலையை நிறுவுமாறு கூறினார், பாபா. 'இந்த சிலை உருவில் நான் எப்போதும் உன்னுடையே இருப்பதாக நம்பிக்கையுடன் இரு' என்று கூறி ஆசிர்வதித்தார். இருந்த போதும் ப்ரதான் திரும்பத் திரும்ப ஷீரடிக்கு சென்று பாபாவைப் பார்க்கவே, பாபா அவரிடம் ஷீரடிக்கு வரவேண்டாம் என்றும், பிவ்புரியே ஷீரடி என்று கருதவும், அங்கே வந்து தான் சந்திப்பதாகவும் உறுதி அளித்து அனுப்பினார்.
பாபா சொன்னபடியே கோயிலைக் கட்டினார் பிவ்புரி ராமச்சந்திர ப்ரதான் அவர்கள். ஷீரடி சாயி பாபா தனது கையாலேயே பரிசளித்த அந்த சிறிய பொம்மை சிலையை இன்றும் அந்த கோயிலில் காணலாம். நூறு வருடங்கள் கழித்தும் பொலிவுடன், உயிரோட்டத்துடன், பக்தர்கள் மீது அன்புடன் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்த சிலையை இந்த ஒளிக்காட்சித் தொகுப்பில் நாம் கண்டு மகிழலாம்.
ப்ரதானின் உறக்கத்தில் கனவில் வந்த பாபா ஷீரடியில் இருப்பது போலவே ஒரு அணையாத அகண்ட (நெருப்பு) துனியை ஏற்படுத்துமாறு கட்டளையிட்டார். 1949 ஏப்ரல் 7-ஆம் தேதி ராமநவமி அன்று இந்த துனி ஏற்றப் பட்டது. இன்று வரை அணையாமல் எரியும் இந்த துனியை ஏற்றியவர் யார் தெரியுமா? சாயி சத்சரித்திரத்தை எழுதிய உயர்திரு ஹேமத்பந்த் என்கிற கோவிந்த் ரகுநாத் தபோல்கரின் பேரன் - பரம சாயி பக்தர் திரு. வாலாவல்கர்ஜி அவர்கள்.
ப்ரதானுக்குத் தான் உறுதியளித்த படியே பாபா இங்கு உள்ள புனித துளசி பிருந்தாவனத்தில் வியாழக் கிழமை நாளில் காட்சி அளித்தார். இந்த ஒளிக்காட்சித் தொகுப்பில் ப்ரதான் அவர்களின் பேரர் மற்றும் கொள்ளுப் பேரன் ஆகியோர் பேட்டி அளிப்பதைக் காணலாம்.
சென்னை மயிலாப்பூர் அகில இந்திய சாயி சமாஜத்தின் 75-ஆவது ஆண்டு விழா (AISS Mylapore 75th Platinum Jubilee on 30th Jul 2016) மற்றும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியின் 60-ஆவது ஆண்டு விழாவின் போது நமது சாயி மார்க்கத்தின் சிறந்த பக்தர்களில் ஒருவரான
உயர்திரு. K.V. ரமணி அவர்கள் (சென்னை ஷீரடி சாயி டிரஸ்ட் அறக்கட்டளையின் நிறுவனர்) ஆற்றிய அருமையான உரை. பொறுமையுடன் கவனமாகக் கேட்டு பயன்பெற வேண்டிய கருத்துக்கள் அடங்கிய உரை.
சாயி அன்பர்களே, இது நமது சாயி மார்க்கத்தின் சிறந்த பக்தர்களில் ஒருவரான டாக்டர் சந்திரபானு சத்பதிஜி அவர்களின் இந்த ஷீரடி சாயி குளோபல் அறக்கட்டளை பற்றிய அறிமுக ஒளிக்காட்சித் தொகுப்பு. உலக சாயி பக்தர்கள் இந்த அறக்கட்டளையின் Shirdi Sai Global Foundation யூட்யூப் சேனலை பின்தொடர்ந்து பயன்பெறலாம்
இந்தியாவின் பல மாநிலங்களில் மக்களிடையே பக்தி பஜன்கள் எனப்படும் பாடல்கள் சிறப்பு பெற்றவை. "சாயி மேரா பாலன்ஹர்" என்கிற இந்த தொகுப்பை ஹிந்தி மொழியில் பாடல்களை எழுதி, இசையமைத்தவர் நமது சாயி மார்க்கத்தில் உலக அளவில் பிரபலமான பக்தர்களுள் ஒருவரான திரு. சந்திரபானு சத்பதிஜி அவர்கள். இந்த புகழ்பெற்ற சாயிபக்தி பஜன் தொகுப்பு வெளியிட்டவர்கள் : T-Series Bhakti Sagar.
ஆந்திர பிரதேசம் கடப்பா மாவட்டம் மைதுக்கூர் கிராமத்தில் உள்ள சாயிராம் துணிக்கடைக்கு தினமும் வருகைதரும் மாடு! எவ்வளவோ இடங்கள் இருக்கையில் இந்த கடைக்கு மட்டும் தினமும் வந்து கடையின் உள்ளேயே 2 -3 மணி நேரங்கள் அமர்ந்து இளைப்பாறி விட்டு சென்று விடுமாம்.