இந்த ஒளிக்காட்சித் தொகுப்பில் உலகிலேயே முதன் முதலில் உருவான பிவ்புரி ஷீரடி சாயிபாபா கோயிலைப் பற்றிப் பார்த்து மகிழலாம். அரிதான இந்த தகவலை வெளியிட்டோர் - சாயி கே துவார் யூடுப் சேனல். சாயி பக்தர்கள் இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்தும், பிற அன்பர்களுக்கு தெரிவித்தும் பயன்பெறலாம். பல மொழி பக்தர்கள் பயன்பெறும் வகையில் ஆங்கில சப் டைட்டில்கள் -உடன் வெளியிட்டுள்ளனர். 1916 இல் பாபா மனித உருவில் தன் உடலுடன் உயிரோடு இருந்த போதே உருவாக்கப்பட்டது இக் கோயில்.
இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தின் பிவ்புரி கிராமத்தில் வசித்து வந்த திரு. கேசவராவ் ராமச்சந்திர ப்ரதான் அவர்கள் தனக்கு நிகழ்ந்த ஒரு அற்புத நிகழ்விற்கு பிறகு பாபாவின் பக்தராகினார். தான் ஷீரடிக்கு செல்லும்போதெல்லாம் பாபாவை தனது பிவ்புரி வீட்டுக்கு மீண்டும் மீண்டும் ப்ரதான் அழைக்கவே, ஷீரடியை விட்டுச் செல்லாத பாபா ஒரு சிறிய களிமண் உருவச்சிலையை அன்பளிப்பாக அளித்து பிவ்புரியில் ப்ரதான் அவர்களின் வீட்டுக்கு அருகே ஒரு கோயிலைக் கட்டச் சொன்னார். அதில் அச்சிலையை நிறுவுமாறு கூறினார், பாபா. 'இந்த சிலை உருவில் நான் எப்போதும் உன்னுடையே இருப்பதாக நம்பிக்கையுடன் இரு' என்று கூறி ஆசிர்வதித்தார். இருந்த போதும் ப்ரதான் திரும்பத் திரும்ப ஷீரடிக்கு சென்று பாபாவைப் பார்க்கவே, பாபா அவரிடம் ஷீரடிக்கு வரவேண்டாம் என்றும், பிவ்புரியே ஷீரடி என்று கருதவும், அங்கே வந்து தான் சந்திப்பதாகவும் உறுதி அளித்து அனுப்பினார்.
பாபா சொன்னபடியே கோயிலைக் கட்டினார் பிவ்புரி ராமச்சந்திர ப்ரதான் அவர்கள். ஷீரடி சாயி பாபா தனது கையாலேயே பரிசளித்த அந்த சிறிய பொம்மை சிலையை இன்றும் அந்த கோயிலில் காணலாம். நூறு வருடங்கள் கழித்தும் பொலிவுடன், உயிரோட்டத்துடன், பக்தர்கள் மீது அன்புடன் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்த சிலையை இந்த ஒளிக்காட்சித் தொகுப்பில் நாம் கண்டு மகிழலாம்.
ப்ரதானின் உறக்கத்தில் கனவில் வந்த பாபா ஷீரடியில் இருப்பது போலவே ஒரு அணையாத அகண்ட (நெருப்பு) துனியை ஏற்படுத்துமாறு கட்டளையிட்டார். 1949 ஏப்ரல் 7-ஆம் தேதி ராமநவமி அன்று இந்த துனி ஏற்றப் பட்டது. இன்று வரை அணையாமல் எரியும் இந்த துனியை ஏற்றியவர் யார் தெரியுமா? சாயி சத்சரித்திரத்தை எழுதிய உயர்திரு ஹேமத்பந்த் என்கிற கோவிந்த் ரகுநாத் தபோல்கரின் பேரன் - பரம சாயி பக்தர் திரு. வாலாவல்கர்ஜி அவர்கள்.
ப்ரதானுக்குத் தான் உறுதியளித்த படியே பாபா இங்கு உள்ள புனித துளசி பிருந்தாவனத்தில் வியாழக் கிழமை நாளில் காட்சி அளித்தார். இந்த ஒளிக்காட்சித் தொகுப்பில் ப்ரதான் அவர்களின் பேரர் மற்றும் கொள்ளுப் பேரன் ஆகியோர் பேட்டி அளிப்பதைக் காணலாம்.
சாயிராம் சாயிராம் சாயிராம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.