Total Pageviews

Thursday, July 24, 2014

Tough time?

வாழ்வில் சோதனையா?




கொளுத்தும் வெயிலில் குடை யில்லாமல் 
குன்றா ஊக்கத்துடன் பூமியைக் குடைந்து 
புவிஅறி வியல்அறிஞர், உழைப்பாளிகள் 
பூரிப்புடன் தோண்டி எடுக்கும் 
தாதுப் பொருளோ கரிக் கட்டிபோல 

அந்த தங்கச் சுரங்கத்தில் கிட்டிய பொருளை 
அதிசக்தி உலையில் இரண்டாயி ரத்துநூறு 
பாரன்ஹீட் வெப்பத்திலே, கொடுந்தீயிலே 
கொதிக்க வைத்து உருக்கிய பின்தான் 
தங்கக் கட்டி உருவாகி ஜொலிக்கும்.  

கடவுள் சோதிக்கிறார் என்று கடுமையாக 
பேசிக்கடுஞ் சினம் கவலை கொள்ளாதே
பொருளை வாங்க விலைதர வேண்டும்  
செயலைச் சாதிக்க வலிமை வேண்டும் 
வலிமை வளர்க்க பயிற்சி வேண்டும் 
பயிற்சி என்றால் துன்பம் இருக்கும் 

துன்பம் சகிக்க பொறுமை வேண்டும் 
பொறுமை நீடிக்க நம்பிக்கை வேண்டும். 
வேதனை முகத்தோடு வேண்டும் உனக்கு 
வேண்டு மென்றே பாரா முகத்துடன் 
பின்முதுகு காட்டவில்லை பாபா 

உன் பாதையின் முன்னே வேகமாய் ஓடிவரும் 
தீமை ஓநாய்களை அடித்து விரட்ட 
நேர்முகமாய் நிற்கிறார்  வீரசாயி பாபா 
தன்சத்திய வாக்கினை நித்தியமும் நிரூபித்து. 

உன்னை நம்பி உண்மையாய் உழைத்திடு
சாயி.. சாயி..  என்றே ஜெபித்திடு
சாயியை நம்பிநீ சாந்தமாய் உறங்கிடு  
இருள் நீங்கி பேரொளி படரும் வேளை 
சத்தியமாய்ச் சூரியன் உதிக்கும் சுபவேளை   
இதோ இன்னும் சிறிது நேரத்தில்.  

சாயி சாயி சாயி   சாயி சாயி சாயி    சாயி சாயி சாயி       



 
     
     
      
   



(வரைகலை ஆக்கம் : ரோஹித் பெஹல்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.