சாயிபாபாவின் உடை - பகுதி 7
கேஷவ்வின் அத்தை திருமதி. தாமாபாய் அவர்கள் கேஷவ் குணமடைந்து விட்டால் ஷீரடிக்குச் சென்று ஒரு பாக்கெட் இனிப்பு பேடாக்கள் சாயிபாபாவுக்கு நேர்த்திக் கடனாக அளிப்பதாக' வேண்டிக் கொண்டார். மறுநாளே அதிசயத்தக்க விதத்தில் கேஷவ் பூரண குணம் அடைந்து படிப்பைத் தொடர, தனது மராத்திப் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 95 வருடங்களுக்கு முன்னால், ஜனவரி மாதம் 1918 அன்று, திரு. கேஷவ்வின் குடும்பம் ஷீரடிக்குப் புறப்பட்டது. கேஷவ்வின் அத்தை திருமதி. தாமாபாய் ஏற்கனவே வேண்டிக் கொண்டபடி, இனிப்பு பேடாக்களை சாயிபாபாவுக்குக் காணிக்கையாக்கினார். பாபா அந்த இனிப்புப் பெட்டியிலிருந்து ஆறு பேடாக்களை எடுத்து, கேஷவ்விற்கு அளித்தார். பின்பு மீதி அனைத்தையும் வைத்துக் கொண்டு பாபா உண்ண ஆரம்பித்தார். ஷாமா என்கிற மாதவராவ் தேஷ்பாண்டே அப்போது நகைச்சுவையாக, பாபா தான் மட்டுமே சுயநலமாக உண்பதாக விமர்சித்தார். திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தாமாபாயைப் பார்த்தபடி பாபா வேடிக்கையாக இவ்வாறு கூறினார். "தாமாபாய் ஐந்து வருடங்களாக என்னை பட்டினியாக இருக்குமாறு செய்து விட்டாள்" என்று கூறியபடியே அந்த இனிப்புக்களை உண்ண ஆரம்பித்தார்.
பின்பு 12 வயதுச் சிறுவனான கேஷவ்வை அருகில் அழைத்து பக்கத்தில் உட்கார வைத்த பாபா அவனுக்குத் தான் அணிந்திருந்த கப்னி உடையையே கழற்றி பரிசாக அளித்தார். அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் மும்பையில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய டாக்டர் கேஷவ் பகவந்த் கவான்கர் ஆவார். பாபா வழங்கிய அந்த வெண்ணிற பருத்தி உடை காலஞ்செல்லச் செல்ல மஞ்சள் நிறமாக பழுப்பேறி விட்டது. டாக்டர் கேஷவ்வின் குடும்பத்தினர், 1993 -ஆம் ஆண்டு வரை மிகப் பாதுகாப்பாக மரப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தனர். பின்பு அதை வெளியே எடுத்த டாக்டர் கேஷவ், மரச்சட்டம் பதித்த கண்ணாடி அலமாரியில் பக்தர்கள் பார்ப்பதற்கு வசதியாக கப்னியைத் தொங்கவிட்டு காட்சிப் படுத்தினார். திரு.கேஷவ்வின் குடும்பத்தினர், மிகவும் நைந்து போன அவ்வுடையினை பராமரிப்பதற்கு ஒவ்வொரு வருடமும், தசரா தினத்தன்றும், சில மணி நேரங்கள் ஜாக்கிரதையாக வெளியே எடுத்து சுத்தம் செய்வார்கள். அப்போது எவரும் அதைத் தொட அனுமதிப்பதில்லை. பாபாவின் சில நூறு பக்தர்கள் மட்டுமே கேஷவ்வுக்கு பாபா அளித்த பரிசினைப் பற்றி தெரிந்திருந்து அதை நேரில் காணும் பாக்கியம் பெற்றார்கள் என கேஷவ் அவர்களின் புதல்வர் தெரிவித்துள்ளார்.
பாபா சமாதியடைந்து பல வருடங்கள் கழிந்த பின், அப்பாசாஹிப் என்று அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் கேஷவ் அவர்களின் தொடர்ந்த வேண்டுதலுக்குச் செவி சாய்த்து அருளினார் சாயிபாபா. தனது பக்தனின் மேல் உள்ள பேரன்பினை உறுதிப் படுத்த கேஷவ்வின் வீட்டிலேயே ஒரு நாள் தோன்றினார் பாபா. ஆம்! ஜனவரி 18, 1954 அன்று, பாபா சமாதியடைந்து பல வருடங்கள் கழிந்த பின் தங்கள் இந்திரா நிவாஸ் வீட்டிற்கு பாபா வந்ததாகவும், தனது தந்தை டாக்டர் கேஷவ்வுடன் பாபா சில மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும் கேஷவ் அவர்களின் புதல்வர் டாக்டர் சாயிநாத் கவான்கர் மெய்சிலிர்ப்புடன் தெரிவித்துள்ளார். "அப்போது எனக்கு ஐந்து வயதுதான் இருக்கும். ஆனாலும் அந்த நிகழ்ச்சியை மனதில் ஞாபகப்படுத்த முடிகிறது. எங்கள் குடும்பத்தினர் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். இரவு நேரம்... வீட்டினுள் பாபா வந்து உட்கார்ந்து இருந்ததை மிகத் தெளிவாகக் கண்ணால் நானும் என் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் கண்டோம். இரவு 10.30 முதல் காலை 8.30 வரை வீட்டின் வராந்தாவில் அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எனது தந்தையும் பாபாவும், மணிக்கணக்கில் நீண்ட உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள்" என்று சாயிநாத் கவான்கர் கூறினார். இந்த சம்பவம் நடந்து 59 வருடங்கள் கழித்து வீட்டின் அந்த இடத்தைச் சுட்டிக் காட்டி ஒரு பேட்டியில் திரு. கவான்கர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் நடந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னர், ஒரு நாள் டாக்டர் கேஷவ் ஆழ்ந்த நித்திரையில் இருந்த சமயம் மென்மையான ஒரு குரலைக் கேட்டார். "எழுந்து கொள், வந்து என்னைப் பற்றிய கதைகளை எழுது" என்று அக்குரல் கூறியதைக் கேட்டார். தூக்கக் கலக்கத்துடன் சடாரென எழுந்த டாக்டர் கேஷவ், அது பாபாவின் குரலே என்று உணர்ந்து, பிரார்த்தனை செய்தபின் உடனே கையில் பேனாவுடன், ஒரு நோட்டுப் புத்தகத்தில் தீவிரமாக எழுதத் தொடங்கினார்.
டாக்டர் கேஷவ் எழுதிய நூலின் அழகிய முகப்பு அட்டை |

கப்னி உடையில் பாபா - அரிய படம் |
இரவு 1.30 முதல் காலை 10 மணி வரை தொடர்ச்சியாக பல அத்தியாயங்களை எழுதி முடித்தார். அவைதான் பின்னாளில் 'ஷீரடிச்சே சாயிபாபா' என்கிற நூலாக வெளிவந்து மராத்தி மொழிப் புத்தக விற்பனையில் சாதனை படைத்தது. பிற மொழி பக்தர்களும் பயன்பெறும் வகையில் திரு. கவான்கர் 2011 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். சாயிபாபா வருகையினால் புனிதமடைந்த அப் பேறு பெற்ற வீட்டிலேயே ஜூன் 29, 1985 அன்று தமது 79-ஆம் வயதில் மும்பை குர்லாவில் டாக்டர் கேஷவ் கவான்கர் அவர்கள் அமைதியுடன் இறைவனடி சேர்ந்தார்கள்.
(தொடரும்)
(தொடரும்)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.