Total Pageviews

Friday, January 31, 2014

Baba Temple Kumbabhishekam

தமிழ்நாடு - புதுக்கோட்டையில் புதிய ஷீரடி சாயி பாபா திருக்கோயில் !


                சாயி பக்தர்களே, தமிழ்நாடு - புதுக்கோட்டை வடக்கு 4-ஆம் வீதியில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சௌந்திரராஜன் டிரஸ்ட் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய ஷீரடி சாயி பாபா திருக்கோயிலான ஷீரடி சாய்பாபா குருநாதர் ஆலயத்திற்கு வரும் தை மாதம் 27-ஆம் தேதி 9-2-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உலகெங்கும் ஷீரடி சாயி பாபாவின் புதிய ஆலயங்கள் பக்தகோடிகளின் கூட்டு முயற்சியால் தொடர்ந்து  நிர்மாணம் செய்யப்பட்டு வரும் இக் காலகட்டத்தில் இந்த ஆலயத் திருப்பணிக்கு நம்மால் இயன்ற நன்கொடை அளித்து பாபாவின் பேரன்பினையும், திருவருளையும் பெற முயல்வோமாக.


ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி   ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

Monday, January 13, 2014

Shirdi - Important info

ஷீரடி - முக்கியக் குறிப்புகள்

(கீழே தரப்பட்டுள்ள தகவல் பொதுவானது. குறிப்பான நாள், கிழமை , நட்சத்திரம், நேரம் என்பன வருடா வருடம் மாறுபடும் என்பதால் பக்த கோடிகள் ஷீரடி சன்ஸ்தான் தகவல் மையம் அல்லது இணையத் தளத்தை அணுகி உறுதிப் படுத்திக் கொள்ளுதல் நலம்)

ஷீரடி சன்ஸ்தான் டிரஸ்ட் மூலம் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்கள்:
  1.  ஸ்ரீ ராம நவமி (ஏப்ரல்)
  2. ஸ்ரீ குரு பூர்ணிமா (ஜூலை)
  3. ஸ்ரீ புண்யதிதி (அக்டோபர்)
ரதா- Chariot (தேர்) திருவிழாக்கள் (பெரும்பாலும் மாலை 5 மணி அல்லது இரவு 9:15 மணி அளவில்):
  1. ரங்க பஞ்சமி (மார்ச் அல்லது ஏப்ரல்)
  2. குதி பாதவா (மார்ச் அல்லது ஏப்ரல்)
  3. ஸ்ரீ ராம நவமி (ஏப்ரல்)
  4. ஸ்ரீ குரு பூர்ணிமா (ஜூலை)
  5. கோபால் காலா (ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்)
  6. ஸ்ரீ புண்யதிதி (அக்டோபர்) 
  7. ஸ்ரீ தத்த ஜெயந்தி (டிசம்பர்)
பல்லக்கு (Palanquin) உற்சவ விழாக்கள் (பெரும்பாலும் இரவு 9:15 மணி அளவில் ):
  1. மகா சிவராத்திரி (மார்ச்)
  2. குதி பாதவா (மார்ச் அல்லது ஏப்ரல்)
  3.  ஸ்ரீ ராம நவமி (ஏப்ரல்)
  4. ஆஷாதி ஏகாதசி (ஜூலை)
  5.  ஸ்ரீ குரு பூர்ணிமா (ஜூலை)
  6. ஸ்ரீ புண்யதிதி (அக்டோபர்) 
  7. கார்த்திகை ஏகாதசி (நவம்பர்) 
ஷீரடி சாயிபாபா மந்திரில் தினசரி நிகழ்ச்சி நிரல்:

  • காகட் (காலை நேர)ஆரத்தி ---- விடியற் காலை 4:30 முதல் 5 மணி வரை 
  • தரிசனம் ஆரம்பம் ---- காலை 5:40 am முதல் 
  • மத்தியான ஆரத்தி ---- மதியம் 12 முதல் 12:25 pm வரை (காலை 11:15 முதல் மதியம் 1 மணி வரை தரிசன வரிசை மூடப்படும்)
  • தூப் ஆரத்தி ----சூரியன் மறையும் மாலை வேளை (20 நிமிடங்கள்) - ஆரத்திக்கு அரை மணி நேரம் முன்பு தரிசன வரிசை மூடப்படும்.
  • ஷேஜ் (இரவு நேர) ஆரத்தி ---- இரவு 10:30 முதல் 10:50 மணி வரை (இரவு 10 மணி முதல் தரிசன வரிசை மூடப்படும்)
எனவே கடைசி நேரம் அவசரப்படாது, சிறிது முன்கூட்டியே சென்று தரிசன வரிசையில் இருந்து திவ்ய தரிசனம் பெறலாம்.

ஸ்ரீ சாயி சத்யநாராயண் பூஜை அரங்கில் தினசரி நிகழ்ச்சி நிரல் :

ஸ்ரீ சாயி சத்யநாராயண் பூஜை ----- காலை 7 மணி, காலை 9 மணி மற்றும் காலை 11 மணி அளவில் 
அபிஷேகம் ----- காலை 7 மணி, காலை 9 மணி மற்றும் மதியம் 12:30 மணி அளவில் 

குறிப்பு: ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் இரவு 9:15 மணி அளவில் சமாதி மந்திரிலிருந்து சாவடி வரை பாபாவின் பல்லக்கு புறப்பாடு நடைபெறும்.

ஸ்ரீ சாயி மந்திர் வளாகத்தில் காண வேண்டிய புனித இடங்கள் :

  1. சாயி பாபாவின் சமாதி மந்திர் 
  2. துவாரகாமாயி 
  3. சாவடி 
  4. குருஸ்தான் 
  5. லெண்டி பாக் பூங்கா 
  6. மியூசியம் ஹால் 
  7. லெண்டி பாக் அருகில் பிறரின் சமாதிகள்: ஸ்ரீ தத்யா பாடீல் கோட்டே, ஸ்ரீ பாவ் மஹராஜ் கும்பார், ஸ்ரீ பத்மநாப ஐயர், ஸ்ரீ நானாவலி, மற்றும் ஸ்ரீ அப்துல் பாபா 
  8. ஸ்ரீ கணேஷ் கோவில், ஸ்ரீ சனி கோவில், மற்றும் ஸ்ரீ மகாதியோ கோவில்.
  9. கண்டோபா மந்திர் : நாகர்-மன்மாடு சாலையில் ஸ்ரீ சாயிபாபா மருத்துவமனை அருகே உள்ள இக் கோவில் பகுதியில்தான் நமது பாபா, முதன் முறையாக, கோவில் பூசாரியால் "சாயி"  என்ற பெயரால் அழைக்கப் பட்டார்.
சாயி ஓம்.

 





 

Saturday, January 4, 2014

Mantra for Peace of mind

மன அமைதி தரும் சாயி மந்திரம் 

பாடியவர்: திரு. சுரேஷ் வாட்கர் 
இணையத்தில் வெளியிட்டோர்: Spiritual Mantra



Shirdi Visit- Devotees Abroad

வெளிநாட்டு பக்தர்கள் ஷீரடியில் சாயி தரிசனம் 

கடந்த 3 ஜூலை 2012 அன்று ஷீரடியில் 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள் சாயி தரிசனம் செய்தனர். ஓர் அறையில் குழுமிய அனைவரும் " ஓம் சாயி நமோ நமஹ:" என்று கை தட்டிக் கொண்டே சிறிது நேரம் பஜனை செய்து மகிழ்ந்தனர். 




 

கடந்த டிசம்பர் 2, 2013 அன்று, ஜெர்மனியைச் சேர்ந்த ஐம்பது சாயிபக்தர்கள் ஷீரடியில் சாயிபாபாவை வணங்கி, சமாதி தரிசனமும் செய்து மகிழ்ந்தனர். பிறகு ஷீரடி சன்ஸ்தான அறக்கட்டளை நிர்வாகிகள் அவர்களை வாழ்த்தி வரவேற்றனர்.
(Courtesy : rOhit beHaL)




Friday, January 3, 2014

News

சாயிபக்திச் செய்திகள்

ஷீரடி ஸ்ரீ சாயி ப்ரசாதாலயாவில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய நீராவி அடுப்பு!

 

ஷீரடியில் தம் கையாலேயே உணவு சமைத்து மக்களுக்குப் பரிமாறிய சாயி பாபா சமாதியடைந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழிந்த பின் ஓர் அற்புத விஷயமாக, உலகிலேயே மிகப் பெரிய சூரிய நீராவி அடுப்பு நிறுவப்பெற்றுள்ளது. இந்த அடுப்பில் அமைந்துள்ள 73 சோலார் தட்டுக்கள் சூரிய ஒளியிலிருந்து சக்தியைப் பெற்று, ஷீரடிக்கு வருகின்ற மக்கள் -ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சம் பக்தர்களுக்கு உணவு சமைக்க உதவுகிறது. இவற்றினால் நீரின் வெப்பநிலையை 650 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்த்தி, சமைக்க உதவும் நீராவியை உருவாக்க முடியும். சாயி சமஸ்தானத்தினால் 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி வியாழன் அன்று ரூபாய் 1.33 கோடி செலவில் ஷீரடியில் இந்த அடுப்பு நிறுவப் பட்டது. இதனை இந்தியாவின் புதிய, புதுப்பிக்கப்படத்தக்கச் சக்தித் துறை அமைச்சர் திரு. பாரூக் அப்துல்லா அவர்கள் தொடங்கி வைத்தார்.
(Youtube upload: Tv9Gujarat)