ஸ்ரீ உபாஸனி மஹராஜ் சுவாமிகள் |
சாயி பாதுகை -2
'கம்பவுண்டர், பாயி கிருஷ்ணாஜி அலிபாகர், சகுண் மேரு நாயக், மற்றும் கோவிந்த் கமலாகர் தீக்ஷித் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கையில், ஷீரடிக்கு சாயிபாபா முதல் விஜயம் செய்தது- புனித வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்தது- இவ்வுண்மைகளின் ஞாபகார்த்தம் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள். பாபாவின் பாதுகைகளைப் ப்ரதிஷ்டை செய்வதற்கு எண்ணி, அவற்றைச் சாதாரண கல்லில் செய்வதற்கு இருந்தனர். அப்போது பாயியின் நண்பரான கம்பவுண்டர் தனது எஜமானரான டாக்டர் ராமராவ் கோதாரியிடம் இதைத் தெரிவித்தால், அருமையான பாதுகைகளை அவர் வடிவமைப்பார் என்று யோசனை கூறினார். அனைவரும் இந்த யோசனையை விரும்பினர்.
டாக்டர் கோதாரியிடமும் இதைப்பற்றித் தெரிவித்தனர். அவரும் ஷீரடிக்கு வந்து பாதுகைகளின் திட்டத்தை வரைந்தார். கண்டோபா கோவிலில் உள்ள உபாஸனி மஹராஜிடம் அவர் சென்று தனது திட்டத்தை காண்பித்தார். உபாஸனி அதில் பல முன்னேற்றத் திருத்தங்கள் செய்து தாமரைப் புஷ்பங்கள் , சங்கு, சக்கரம், மனிதன் முதலியவற்றை வரைந்து, வேப்பமரத்தின் உயர்வைப் பற்றியும், பாபாவின் யோகசக்தியைப் பற்றியும் உள்ள பின்வரும் ஸ்லோகத்தை அதில் பொறிக்கலாம் என்றும் யோசனை கூறினார். அந்த ஸ்லோகம் பின்வருமாறு:--
"ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸூதாஸ்த்ராவிணம் திக்தமப்ய ப்ரியம்தம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீஷ்வரம் சத்குரும் சாயிநாதம் "
பொருள்: நான் சாயிநாத் பிரபுவை வணங்குகிறேன். வேப்பமரம் கசப்பாகவும், இனிமையற்றதாகவும் இருப்பினும் அவரது நிரந்தர இருக்கையினால் அமிர்தத்தைக் கசிகிறது, கல்ப விருக்ஷத்தைவிடச் சிறந்தது (அம்மரத்தின் கசிவு, அமிர்தம் என்று அதன் குணப்படுத்தும் தன்மையால் அழைக்கப்படுகிறது)
(Uploaded in Youtube by: Baba Krishna Mohan Rebbapragada)
உபாஸனியின் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பாதுகைகள் பம்பாயில் செய்யப்பட்டு ஷீரடிக்கு கம்பவுண்டர் மூலம் அனுப்பப்பட்டன'.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சாயிதாபாத் சிவசாயி பாபா மந்திரில் உள்ள பாதுகைகள்
(Thanks to: Sivasai baba Mandir, Saidabad, Hyderabad)
|
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.